Tuesday, February 9, 2010

மஹா சிவராத்திரி

சிவராத்திரி  

சிவராத்திரி என்பது எம்பெருமான் சிவனுக்கு உரியது.
நவராத்திரி என்பது அம்பாளுக்கு உரியது.
இவ்விரண்டு பண்டிகைகளுமே இரவில் கொண்டாடப்படுபவைகளாகும்.


மஹா சிவராத்திரி
                                    மாசி மாதம் கிருஷ்ணபக்ஷம் -சதுர்த்தசி திதி , திருவோண நட்சத்திரத்தில் வருவதாகும்.

ஐந்து வகை சிவராத்திரிகள்


  1. நித்ய  சிவராத்திரி
  2. பக்ஷ சிவராத்திரி
  3. மாத சிவராத்திரி
  4. யோக சிவராத்திரி
  5. மஹா சிவராத்திரி

1 ) நித்ய சிவராத்திரி என்பது
 
                           ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவபூஜை செய்வது வருடத்தில் இருபத்தி நான்கு முறை சிவபூஜை செய்வது ஆகும்.


2) பக்ஷ  சிவராத்திரி என்பது
                                     தை மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் பிரதமை முதல் பதிமூன்று நாட்கள்  ஒரு வேளை (தினமும்) பூஜித்து , சதுர்த்தசியில் பூஜை செய்து முடிப்பது ஆகும்.

3 ) மாத சிவராத்திரி என்பது  
மாசி மாதத்தில்        
   கிருஷ்ண சதுர்த்தசி (14  வது  திதி)யன்றும் 

பங்குனி மாதத்தில்   
    முதலில் வரும் திருதியை  (3   வது  திதி)யன்றும்  

சித்திரை மாதத்தில்    
   கிருஷ்ண அஷ்டமி (8  வது  திதி)யன்றும்

 வைகாசி மாதத்தில் 
   முதலில் வரும் அஷ்டமி  (8  வது  திதி)யன்றும்  

ஆனி    மாதத்தில்      
   சுக்ல சதுர்த்தசி (4  வது  திதி)யன்றும் 

ஆடி  மாதத்தில்          
   கிருஷ்ண பஞ்சமி  (5  வது  திதி)யன்றும்

ஆவணி  மாதத்தில்      
  சுக்ல அஷ்டமி (8  வது  திதி)யன்றும்

 புரட்டாசி மாதத்தில்
   முதல் திரயோதசி (13  வது  திதி)யன்றும்

 ஐப்பசி  மாதத்தில்      
  சுக்ல துவாதசி   (12  வது  திதி)யன்றும்
  
கார்த்திகை   மாதத்தில்  
  முதல் சப்தமியும், அஷ்டமியும் ( 7 வது 8 வது திதி)களில்

 மார்கழி மாதத்தில்   
 இரண்டு பக்ஷ -கிருஷ்ண , சுக்ல சதுர்தசிகளில் (14  வது  திதி) களில் 

தை மாதத்தில்  
  சுக்ல திருதியை  (3   வது  திதி) யன்றும் சிவ பூஜை செய்வதாகும்.





4 ) யோக சிவராத்திரி என்பது
                                                   சோம வாரத்தன்று அறுபது நாழிகை அமாவாசை இருந்தால் அன்றைய தினம் சிவபூஜை செய்வதாகும். 

5) மஹாசிவராத்திரி என்பது

                                                மாசி மாதத்தில்  கிருஷ்ண சதுர்த்தசியன்று சிவபூஜை செய்வதாகும்.

விரத வழிபாடு

சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நித்ய அனுஷ்டானங்களுடன் திருநீறு, ருத்ராக்ஷமணிந்து  ' நமசிவாய ' நாமங்கள் சொல்லியபடியே சிவாலயதுட் சென்று சிவ சிந்தையுடன் இருப்பது.
          நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டு பூஜா கைங்கர்யங்கள் செய்ய வேண்டும். வில்வதளம், அபிஷேகப் பொருட்கள் நெய், தயிர், பால், தேன், கரும்பு , இளநீர், சந்தனம் முதலிய பொருட்களை கொடுத்தல் வேண்டும்.
         அன்று முழு உபவாஸம் (விரதம்) இருத்தல் வேண்டும். வயது, உடல் நிலை கருதி இயலாதவர்கள் சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரு வேளை உட்கொண்டு இருக்கலாம்.


         4  ஆம் கால பூஜை மறுநாள் காலை பொழுது புலர்ந்து விடுமாதலால் , உடன் சென்று நீராடி ஆலயம் சென்று இறைவனை தரிசித்து , சூரியன் உதித்து 6  நாழிகைக்கு பாராயணம் செய்ய வேண்டும்.  இவ்விதம் செய்வோர் சகல கீர்திகளும் செளபாக்யங்களையும்  பெறுவர்.

(குறிப்பு: மேலும் விபரங்கள் அறிய சிவாச்சாரியார்களை பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம். )
  





சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

ந - நகாரம்


நாகேந்திர ஹராய திரிலோச்சனாய ,

பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய ,

நித்யாய சுத்தாய திகம்பராய , 

தஸ்மை ' நகாராய' நம; சிவாய !



ம  - மகாரம்
மந்தாகினீ  சலீல சந்தன சர்சிதாய


நந்தீஸ்வராய ப்ரமத நாத மகேஸ்வராய ,

மனதார புஷ்பா பஹீ , புஷ்ப ஸீபூஜிதாய 


தஸ்மை 'மகாராய' நம; சிவாய !




சி  - சிகாரம்

சிவாய கெளரீ வதனாப்ஜ வ்ருத்த

சூர்யாய தக்ஷாத்வர நாகாய 


ஸ்ரீ நீலகண்டாய வருஷத் வஜாய 


  தஸ்மை 'சிகாராய' நம; சிவாய !








வ   - வகாரம்

வசிஷ்ட கும்போத்பவ கெளத மாய ,

முனீந்திர தேவார்ச்சித ஸேகராய ,

சந்த்ரார்க வைஸ்வானர லோசனாய,

தஸ்மை 'வகாராய' நம; சிவாய !





ய   - யகாரம்

யக்ஷ்ஸ் வரூபாய ஜடாத ராய ,

பிநாக ஹஸ்தாய  ஸநாத னாய,

திவ்யாய தேவாய திகம்ப ராய,

தஸ்மை 'யகாராய' நம; சிவாய !



மஹா சிவராத்திரி விரதம் காண இருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் உரித்தாகுவதாக .



அன்பே சிவம்


நன்றி

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment