Wednesday, February 17, 2010

அவர்கள் நமக்காக சொல்லிச் சென்றார்கள். வேறு யாருக்காகவும் அல்ல


காயத்திரி மந்திரம்  




ஒவ்வொரு பரமாணுவிற்குள்ளும் ( அணுச் சலனம் )  அணுக்கருவின் நித்ய நடனம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது .

இறைவனின் திருநடனம் அதிர்வுகளின் காரணமாய் இப்பிரபஞ்ச  அணுக்களில் சலனமும், சப்தமுமுண்டாயிற்று என்பதை  வேதம்  கூறுகிறது. 

அதிர்வே  சப்தம்  என்றும் , சப்தத்தினால்  சலனம் என்றும் , சலனமும், சப்தமும்  ஒளியுண்டாக்கியதென்றும் , ஒளிவடிவே  உயிர்வடிவுகளை  உற்பத்தியாக்கின  என்றும்  கூறுகிறார்கள் .

ஒலியின்  வேறுபாட்டுக்குத் தக்கப்படி  பரிமாணம்  உண்டாயிற்று .


அப்பரிமாணங்களின்  முழுவடிவமே ( இறைவனிடமிருந்து  வந்ததென்பதால்  ) இறைவடிவென்றும், அந்த  சப்தக்  கலவையின்  நுணுக்கங்களை அறிந்தவர்களே ரிஷிகளாவர்.

அப்படி அறிந்து கொண்டவைகளே வேதங்கள் 

இயற்கையின்  ஒவ்வொரு படைப்பினுள்ளும்  உள்ள  ஒரு  ஒலிக் கலவையே  உயிரோட்டம்  தரும்  சக்தி  என்பதை  உலகுக்கு  உணர்த்தினர்.


இயற்கையின் எல்லா ஒலி அலைகளின் இலக்கணங்களை  அறிந்து அதைப் பிரதிபலிக்கும் 51 எழுத்துக்களின்  வரி வடிவில் அதைப் புகுத்தினர்.


அவற்றுள் சிறந்த முதன்மைக் கலவை ( அ ..... உ ... ம ...) "ஓம்" என்ற ஒலியும், அவ்வொலியே  பிரபஞ்சப் படைப்பின் ஒவ்வொரு அடிப்படை அலையிலும் ஊடுருவி நிற்பதுமாகும் அந்த ஓம் சேர்த்து வேறொரு சக்தி மிக்கதான
ஒளிக் கலவைகளால் மொத்தம் 24 எழுத்துக்களைக் கொண்ட ஒளிமிக்க ஒரு மந்திரத்தை விசுவாமித்திர மஹரிஷி அவர்கள் வெளிபடுத்தினதே
 " காயத்திரி " என்ற மந்திரமாகும் .


 அம்மந்திரமே ஒளியாகவும் , ஒளியை வணங்கும் மந்திரமாகவும் ,
மந்திரங்களில் சிறந்ததெனவும் தேவர்களாலும் , ரிஷிகளாலும் போற்றப்பட்டது
. இக்காயத்திரி மந்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுமுன் ,





 இம்மந்திரத்தால் மனிதர்களுக்கு என்ன பயன்.?

 ( இலக்கணம், உச்சரிப்பு, ஒலி ) தத்துவப்படி எவரும் கூறலாமென்றும் , கூறுபவர்களுக்கு ஏற்படும் பலன்கள் எண்ணற்றவை எனவும் பெரியோர்கள் கூறியுள்ளனர்



காயத்திரி மந்திரம்  : காயத்திரி  தேவி  என்ற   தேவதையாகப்  பரிமளிக்கிறாள் .

காயத்திரி  தேவி , சந்தியா  தேவி , பரப் பிரம்ம  தேவதை  எனவும்  பெயருள்ள  தேவியாகிறாள் .
இம் மந்திர   தேவதை  – 24 எழுத்துக் களின்  ( மந்திர சக்தி   மிக்க )
கூட்டுசக்தி யைத் தன்  உடலில்  பெற்றவள் .

இவளின்   5 முகங்கள்   மந்தாரை  , கோரோசனை , மை , செம்பருத்தி , மற்றும்  ஆகாயம்  ஆகிய  நிறங்களை உடையதாகும் .


இரு  தாமரை  மலர்கள் , சக்கரம்  நூல் , கபாலம்  , பாசம்  அங்குசம்  , போன்றவைகளையும்  , அபய, வரத முத்திரைகளையும் , கொண்ட  10 கரங்களையும்  சந்தஸ்  எனப்  படும்  24 எழுத்து இலக்கண  சொற்றொடர்களைக்    கொண்ட  மந்திர வடிவுடை  தேவியாவாள்.


வேத  மந்திரங்களின்  52 வகை  சந்தஸ்களில் காயத்திரி  சந்தஸ்   ஒன்றாகும் .
 23 அக்ஷரங்களை யுடைய  நித்ருத்  காயத்திரி  மந்திரம்   என்றும் ,
24 அக்ஷரங்களை  யுடைய  ரிஷி  காயத்திரி  மந்திரம்   என்றும்  இருவிதமாகப்  பெரியோர்கள்  கூறுவதுமுண்டு .


வால்மீகி  மஹரிஷி எழுதிய  ராமாயணம்  24,000 ஸ்லோகங்கள்  கொண்டது .

ஒவ்வொரு  1000 ஸ்லோகங்களின்  முதல்  எழுத்தும்  காயத்திரி  மந்திரத்தின்  ஒவ்வொரு   எழுத்துக்களால்  துவங்குவதாகும் .


ஓம் பூர்பு    ஸ் ஸுவ:
தத்  ஸ விதூர்  வரேண்யம் 
பர்கோ  தேவஸ்ய  தீமஹி, 
தியோ  யோ ந  : ப்ரசோத  யாத் :

பொருள் 

  - எவர் 
  – நம்முடைய 
திய  – புத்தியை 
ப்ரசோத யாத் :தூண்டுகிறாரோ 
தத்  அப்படிப்பட்ட 
தேவஸ்ய  – ஒலிமிக்கவரான 
ஸவிது  – உலகைப்  படைத்தவருடைய 
வரேண்யம்  – மிகவும்  உயர்ந்ததான 
பர்க - அங்குள்ள  ஒளியை  ( தேஜஸ )
தீமஹி  – வணங்குகிறோம்  ( தியானிக்கிறோம் )

திரிகால  தேவதை ( காயத்ரி)

அதிகாலை  : சூரியன்  உதிக்கும்  காலை  நேரம்  .............காயத்ரி

நடுப் பகல்  : சவித்ரு  நல்ல  ஒளியுடன்  ................... சாவித்திரி 

மாலை : சூரியன்  மறையும்  காலம்  ......... சரஸ்வதி  . என  மூவுருவில்  விளங்குகிறாள் .

இக் காயத்திரி  மந்திரத்தைச்  சொல்லும்  நேரம் 
திரிகாலசந்தி  இரவு  முடிந்து  இராப் பொழுது , காலையில்  ஒடுக்கமாகும்  வேளை. (சந்திக்கும்  காலம் )
காலை  நண்பகலில்  ஒடுக்கமாகும்  வேளை . ( சந்திக்கும்  காலம் )
நண்பகல்  மாலையில்  ஒடுக்கமாகும்  வேளை   ( சந்திக்கும்  காலம் )


காயத்திரி மந்திரம்   சொல்வதன்  அவசியம் 

மனிதன்  தன் கர்மாக்களை அனுபவிக்கும்  காலங்களில்  ஏற்படும்  தேகம்  என்ற காயம்  ஏற்படுத்திக்  கொள்ளும்   பாவங்களில்  நீக்கி  மன  ஆற்றல்  பெறுவதற்காகவே .

.
எத்தனை  முறை  சொல்ல  வேண்டும் 
குறைந்தபட்சம்  ஒரு  நாளைக்கு  ஒரு  வேளைக்கு  ஐந்து  முறை  சொல்ல  வேண்டும்  . அதிகப்  பட்சம்  10, 108 ,1008 , இன்னும்  இயன்றவரை  அதிகம்  சொல்வது  நன்மை  பயக்கும் 

எத்தனை  வகை  காயத்திரி மந்திரங்கள் 
விநாயகர் , முருகன் , சிவன் , இதர  சிவாம்சங்கள் , நவகோள் , எண்  திசை  பாலகர்கள் , அம்பிகை , துர்க்கை , விஷ்ணு , ருத்ரன் , இவர்களைச்  சொல்லி , காயத்ரி மந்திரத்தின்  பகுதிககளைச்  சேர்த்துச்  சொல்லுவதாகும்  . தேவதைக்குப்  பின்னால்   , நடுவில்  இறுதியில் ,
( வித்மஹே ......... தீமஹி ............ பிரசோதயாத் ...........) இம்  மந்திரத்தின்  உயர்வுகளையும்  , நன்மைகளையும்  நன்கு  வேதம்  கற்ற  பெரியோர்களை  அணுகி  அவர்கள்  மூலம்  அறிவதே  சாலச்  சிறந்த தாகும்.

6 comments:

  1. அருமையான பதிவு. மிகவும் பயனுள்ள, மதிப்புள்ள தகவல். நன்றி.

    ReplyDelete
  2. தங்களின் சேவை இன்னும் வேகமாகவும்,அழுத்தமாகவும்,ஆழமாகவும் தொடர வாழ்த்துகிறேன்.இப்படிக்கு www.aanmigakkadal.blogspot.com

    ReplyDelete
  3. thanks to spiritual ocean and rajsteadfast

    ReplyDelete
  4. I got a lot of spiritual information. Thanks a lot

    ReplyDelete
  5. І haѵe been surfing online more than 2 hours
    today, yet I never found any interesting artіcle like yours.

    It's pretty woгth enough for me. Personally, if all website owners and bloggers made good
    content ɑs you did, the net will ƅe a lot more useful than еver
    before.

    Here is my homepage ѕeo director boca ()

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment