Friday, March 12, 2010

எது ஆன்மீகம் ?

 
-->
                   


ஆன்மீகம் ஒரு தத்துவச் சொல்


அன்பின் ஆழம் . அன்பின் நெறி , அன்பின் வழி , அன்பின் உந்துதல் , அன்பின் செயல் , அன்புமயம் , மனமற்ற நிலை யோக பயிற்சியின் விளக்கம் .



      
அன்பற்ற மனம் அது ஆன்மீக எதிர்ப்பு , ஆன்மீக கோட்பாடுகளுக்கு எதிரானது


                                      
அன்பு யாவர்க்கும் உரியது .

 
தேவை என்ற ஒன்றிருக்குமானால் அது அன்பல்லாது வேறில்லை .



       
இவ்வுலகு மனிதர்களுக்கானது என்பது ஒரு அபத்தம் .


பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரிகளுக்கும் இவ்வுலகில் வாழ உரிமையுள்ளது . இதனை உணராதவரை இறைவனை உணர முடியாது .



நோய்க் கிருமிகள் முதல் , கொடிய விலங்கிற்கும் அன்பும் ஒருவகை பிணைப்பும் உள்ளது . அவைகளுக்கு மனதால் அதனை வெளிப்படுத்த இயலாதலால் அவைகளுக்கு அது பயனற்று கிடக்கிறது .



அன்பினை மனிதன் அறியாமலும் உணராமலும் அதனை பயன்படுத்தாமலும் இருப்பதாலேயே பிறவி விலங்கை தனக்குத் தானே பூட்டிக் கொள்கிறான் .



மனிதனால் மட்டும் எப்பயனும் கருதாது அதனுள் அமிழ்ந்து அதனை வெளிக்கொணர வேண்டுமென்பதற்காகவே அவனுக்குப் பிறப்பு நிகழ்த்தப் படுகிறது .



மரணம் உடலுக்கு மட்டுமே . ஆன்மாவுக்கு அல்ல . ஆன்மாவே அன்பின் ஊற்றுக்கண் . கன்மா அதனை அடைத்து விடுகிறது . எனினும் அதனின்றும் வெளிப்போந்த சிறு கசிவே அவனுக்கும் பாசம் -பரிவு -கருணை என உணர்த்திக் கொண்டேயிருக்கிறது .



ஆன்மா கன்மாவினின்றும் முழுதும் விடுதலை பெறும்போது இறைவனின் பெருங்கருணை , அன்பு வெள்ளத்தில் அதனை உணர்ந்த படியே கலந்து விடுகிறான் .



அன்பின் வழியது உயர் நிலை அன்பே இறை ( அன்பே சிவம் ) 
அன்பின் மனம் தோயும்போது அங்கு வேறு எதுவும் இருப்பதில்லை .
உலகாயதமான அனைத்தும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விடும் . 
 இறையே அங்கு வெளிப்படும் .



மனத்துள் (மனத்துக் கண் மாசிலன் ஆதல் ”) அன்பைக் கொணரும் வழியே ஆன்ம தத்துவம் . அதுவே ஆன்மிகம் . அவ்வழியினைக் காட்டுவது யோக நெறி . அதனைப் போதித்தவர் மகரிஷி ஸ்ரீ பதஞ்சலியாவார். அந்த ஞான வள்ளலை பணிந்தேற்றுவோம் . பயன் பெறுவோம் .



பிறப்பன இறப்பது நிச்சயம்

பிறப்பறும் பெரும் நிலை சத்தியம்





சத்குரு பாதம் போற்றி

3 comments:

  1. மிகவும் அற்ப்புதமான பணியை நீங்கள் செய்து கொண்டுள்ளீர்கள். இப்பொழுது தான் எனக்கு தெரிந்தது. நன்றி !

    ReplyDelete
  2. உங்களது ஆன்மீக தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் சமீபத்தில் தமிழக கோவில்கள் பற்றி தேடி கொண்டிருக்கும் போது http://www.valaitamil.com/temples.php என்ற இணையதளத்தை பார்த்தேன். அதில் தமிழக கோவில்களின் அறிய தொகுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது.

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment