Saturday, April 3, 2010
ஆன்மீக முன்னேற்றம் - 7 நிலைகள்
ஆன்மீக முன்னேற்றமானது 7 நிலைகளாக அறியப்படுகிறது.
சுபேச்சா -
உலகின் தன்மைகள். தான் இதனோடு எந்த அளவு சம்பந்தபட்டிருக்கிறோம். இதனால் உண்மையில் நான் அடைந்த பலன் அல்லது திருப்தி என்ன? என சிந்திப்பதும் ஆன்மீக அடிப்படை உண்மைகள், நீதிகள், பற்றிய புத்தகங்கள் படித்தல், சத்சங்கம் நாடுதல்.
விசாரணா
சித் என்ற ஜீவன் அசித் எனும் உலகை (பிரபஞ்சத்தை) அல்லது பிரகிருதியை, பிரம்மமான பரமாத்மாவைப் பற்றி சிந்தித்தல் , தேடல், தேறுதல் உணர்வதிலே தன்னை வெகுவாக ஈடுபடுத்தி - ஆராய்தல்.
அஸங்க பாவனா
புலன், புலனறிவு சம்பந்தப்பட்ட விஷய நாட்டம். இவற்றிலிருந்து சிறிது சிறிதாக விலகி - அந்த நிலையே உகந்ததென அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அமைதி , பொறுமை, கொண்டு மகிழ்ச்சி கொள்ளுதல்
விலப்பனா
ஆசை, மோஹம், துவேஷம், கிலேசங்கள் அற்ற நிலையில் எல்லாவற்றிலிருந்தும் விலகி மீண்டும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நழுவி விடாத மீண்டும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நழுவி விடாத உன்னத அல்லது அற்ற நிலையில் இருத்தல், பற்றற்றவனாகிறான்.
அஸம் சக்தி
முற்றுமாக, உலகப்பற்றறுத்து விலகிக் கொண்டவனாய் , எந்த வித தொடர்பும் சம்பந்தமில்லாத (தொடர்பறுத்த ) சித்த விருத்திகளை முழுதும் வேரறுத்த விவேகியாகின்றான். (முழுத் துறவு) சாதனையாளனாகிறான்.
பதார்த்த அ பாவானா
உலகில் யாவும் மாயைக்குட்பட்டதே என்பதில் சந்தேகமில்லாமல் தெளிந்து நிலையற்ற தன்மையே நிரந்தரம் என உணர்கிறான்.
துரீயா :
உணர்வு கடந்த , உயிர்ப்பு அடக்கிய தூல உடல் ஒரு சாட்சியாக்கப் பட்ட, அண்ட சக்தியினைப் பிண்டத்திற்குள் இருத்தி சமாதி என்ற எட்டாவது நிலையுள் பிரவேசித்து இறுதி காரண லோக வாசியாவதற்கான ஜீவன் முக்தனாகிறான்.
(சத்சங்கம் தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment