Friday, May 28, 2010

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

அதிகாரப்பூர்வ மதங்களான இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ, யூத. புத்த, சமண, சீக்கிய மதங்கள் எதுவுமே அசைவ உணவினை அனுமதிக்காததோடு அங்கீகரிக்கவும் இல்லை.

இயேசு கிறிஸ்து.
                                                                               
இயேசுநாதர் அன்பு, கருணையினை அதிகம் உபதேசித்தார்.

மனித உருவில் இறைவனான அவர் சம்பந்தப்பட்ட திரு உருவ படங்களில் அவரது கையில் உள்ள ஆடு எவ்வளவு அன்புடன் அரவணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் அன்பு கனிந்த பார்வையிலும் நாம் புரிந்து கொள்ளலாம்.

அத்தகையவர் அந்த ஆட்டினை கொன்று தின்னும் செயலை போதித்திருப்பாரா அல்லது கண்டித்திருப்பாரா?

நிச்சயமாக அன்பின் மறு உருவத்தை அவர் மூலம்காணும் அவர் கோட்பாடுகளின் வழி நடக்கும் மக்கள் அசைவத்தை தவிர்த்து ஆக வேண்டும்.
இயேசு ஒரு போதும் மாமிசம் உண்ணவில்லை.

பல கிறிஸ்தவர்களுக்கு அசைவம் உண்பதை தவிர்ப்பதில் இடையூறாக இருப்பது கிறிஸ்து மாமிசம் உண்டார் என்ற தவறான நம்பிக்கை.

ஆனால் புதிய ஏற்பாட்டின் படி கிரேக்க மொழி மூலத்தை சற்று ஆழ்ந்து கவனிக்கும்போது உணவு அல்லது உண்ணுதல் என்று பொருட்படும் வார்த்தைகளும் மற்றும் டீராஃபி (TROPHE) பிராம் (BROME) என்ற வார்த்தைகளுமே தவறாக மாமிசம் என்னும் பொருள்படும் மீட் (MEAT) என்ற ஆங்கில வார்த்தையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டின் படி பல இடங்களில் உண்ண என்று பொருள் படும் பாகோ ((BHAGO) கிரேக்க வார்த்தை மாமிசம் என்ற பொருளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

உண்மையில் மாமிசத்தை குறிக்கும் கிரேக்க வார்த்தை கிரியஸ் (KRIYAS) என்பதாகும். அந்த வார்த்தை கிறிஸ்துவுடன் தொடர்புடைய எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. புதிய ஏற்பாட்டில் இயேசு மாமிசம் உண்டதற்கு எந்த அத்தாட்சியமும் இல்லை.

மேலும் யூதர்களின் நசரையேர் பிரிவினர் இன்னும் தாவர உணவை உண்பவர்களாகவே உள்ளனர். ஏசுவும் தன்னை நசரையேன் என்று பிரகடனப்படுத்தியுள்ள அவர் அசைவ உணவை உண்ணாததை உறுதிப்படுத்துகிறது.

அசைவம் உண்பதை நிராகரிக்கும் சான்றுகள்.

1) சாம்ஸ் (PSALMS)) 145.9-ல் இறைவன் எல்லோருக்கும் நல்லவர் அவருடைய எல்லா படைப்புகளிலும் இரக்கம் உடையவர் என்று குறிப்பிடபட்டுள்ளது


2) ஏலாஹில் (EZEKIEL) 47.12 ல் உன்னுடைய உணவாக பழங்களாகட்டும், மருந்தாக விதைகளாகட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3) இசையா (ISAIAH ) 1ஃ11ல் நான் எரிக்கப்பட்ட ஆடுகளாலும் கொல்லப்பட்ட விலங்குகளின் கொழுப்பாலும் நிரப்பபட்டுள்ளேன். நான் எருது மற்றும் ஆடுகளின் இரத்தத்தில் சந்தோஷப்படவில்லை என்றும் 1:15ல் நீ சொல்லும் இரத்தத்தில் சந்தோஷப்படவில்லை என்றும் 1:15ல் நீ சொல்லும் பிரார்த்தனைகளை நான் ஏற்பதில்லை, ஏனெனில் உன்னுடைய கரங்கள் இரத்தம் பழந்ததாக உள்ளது. என்றும் 66:3ல் ஒரு எருதைக் கொல்வது மனிதனைக் கொல்வதற்கு சமமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


4) எக்ஸோடாஸ் (EXODUS ) 20:13ல் நீ கொல்லாதிருப்பாயாக என்று குறிப்பிடப்படபடுகிறது.

(நன்றி - ISCON ULAGAM)



புத்தர்


மற்ற உயிர்களுக்கு பயம் உண்டாகாமல் இருக்க என் சீடர்கள் எவரும் மாமிசம் உண்ணலாகாது.

புத்திசாலிகளின் உணவு சாதுக்களின் உணவாக இருக்கட்டும். மாமிசம் கலவாதிருக்கட்டும். நான் புலாலை உண்பதை எவ்விதத்தும் எந்நிலையிலும். எந்த சூழலிலும் அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

தம்மப்பாதாவில் யாரொருவர் சொந்த மகிழ்ச்சியினை விரும்புகிறார்களோ இவர்களை போலவே மகிழ்ச்சியினை நாடும் மற்ற உயிர்களை தண்டிக்கவோ கொல்லவோ செய்தால் இப்பிறவிக்கு பின் மகிழ்ச்சியினை அடைவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமண மதக்கோட்பாடுகள்

108 வகையான ஹிம்சைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அஹிம்சையே சமண மதத்தின் அடிப்படைக்கோட்பாடு மற்ற உயிர்களுக்கு கேடு செய்ய சிந்தனை, சொல், செயல் இவற்றால் ஈடுபடுவதும் பாவமாகிறது, அப்படி இருக்கையில் மாமிசத்திற்காக ஓர் உயிரைக்கொல்வது பற்றி பேசுவதற்கே இடமில்லை.



இஸ்லாமிய மதம்
குர்-ஆன் சுரா 36, பதங்கள் 33.34.35-ல்

அவர்களுக்கு வறண்ட பூமி அடையாளமாக அளிக்கப்பட்டது.

நாங்கள் அதை உயிர்ப்பித்தோம். அவர்கள் உண்ணும் வண்ணம் அதிலிருந்து தானியங்களை உண்டாக்கினோம்.
பேரீச்சம்பழம் மற்றும் திராட்சை தோட்டங்களை அங்கு உருவாக்கினோம். அவற்றில் இருந்து கிடைக்கும் பழங்களை உண்ணட்டும்,

பின் அவர்கள் நன்றி சொல்ல மாட்டார்களா? என்று கூறப்பட்டுள்ளது.
 
(இங்கே தாவர உணவினையே குறிப்பிட்டிருப்பதால் அசைவ உணவை குறிப்பிடபடவில்லை என்பது தெரிகிறது)
இறைத்தூதர் முகமது நபி விலங்குகளை ஊனப்படுத்தாதே என்றும் தன்னை விட கீழ்ப்பட்ட உயிர்களுக்கு கருணை காட்டுபவர் தனக்கே கருணை காட்டுகிறார் என்று கூறியள்ளார்.

குர்-ஆன் சுரா 6 பதம் 38ல் 

இந்த பூமியில் உள்ள மிருகங்களும் இரண்டு இறக்கைகளுடன் வானில் பறக்கும் பறவைகளும் உனக்கு மற்ற மக்களை போன்றவர்களே என்று குறிப்பிடப்படுகிறது.


அசைவத்தினை தவிர்த்த சூஃபி சாதுக்கள்

தூய்மை, துறவு, இரக்கம் கொண்ட வாழ்க்கை வாழ்ந்தனர். மேலும் அசைவம் முழுதும் தவிர்த்த எளிமையான உணவினை மட்டுமே உண்டனர். இவர்களில் அன்பு, .கருணை, ஒழுக்கம், தவநெறி. கொண்ட கீழ்க்கண்ட பெரியோர்கள்

1) ஸேக் இஸ்மாயில்

2) க்வாஜா மைதீன் சிஸ்டி

3) ஹசரத் நிசாமுதீன் அவுலியா

4) பூ அலி கொலண்டர்

5) ஸா இனையட்

6) மீர் தட்

7) ஸா அப்துல் கரீம் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஆவா.

நம் முன்னாள் இந்தியக்குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் கூட அசைவம் தவிர்த்த சைவ உணவாளரே என்பதும் குறிப்பிடதக்கது.




பத்ம புராணம்.

பதங்கள் 3, 31, .25, 28 மற்ற உயிர்களை துன்பபடுத்தும் மனிதர்கள் வேதங்களை ஓதினாலும் தவறுகள் செய்தாலும் தான தர்மங்கள் செய்தாலும். சொர்க்கத்திற்கு போவதில்லை.

ஏனெனில் அஹிம்சையே மிகப்பெரிய புண்ணியம் அதுவே பெரிய தவம். அதுவே பெரிய தானம். இவ்வாறு முனிவர்கள் கூறியுள்ளனர்.

கர்மா நியதிக் கொள்கையின்படி சிறு உயிரோ அல்லது பெரிய உயிரோ எதுவாயினும் அதை அறிந்தோ. அறியாமலோ கொல்பவர்கள் அவைகளாலயே ஒரு நாள் கொல்லப்படுவார்கள் என கூறப்படுகிறது.

பகவத் கீதை-

பதம் 9ஃ26ல் 

பகவான் கிருஷ்ணர் ஒருவர் எனக்கு அன்புடனும் பக்தியுடனும். இலையோ. பழமோ, பூவோ அல்லது நீரோ அளித்தால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுகிறார். தாவர உணவையே அளிக்குமாறு கூறினாரே தவிர எந்த இடத்திலும் தனக்கு அசைவ உணவினை அளிக்குமாறு கூறவில்லை.

ஸ்ரீ மத் பாகவதம்.

பதம் 1ஃ17ஃ38ல் கலி என்னும் பாவ புருசன் குடியிருக்கும் நான்கு இடங்களில் மாமிசம் உண்ணும் இடமும் ஒன்று என கூறப்பட்டுள்ளது. ஏனெனில் மாமிசம் உண்ணும் இடத்தில் கருணை மனப்பான்மை அடியோடு அழிவதால் கலியின் கேடுகள் அவர்களை அடைகிறது.


மனுசம்ஹிதை.
5ஃ51
மிருக வதையினை அனுமதிப்பவர்கள். கொல்பவர். கூறுபோடுபவர். வாங்குபவர். விற்பவர். சமைப்பவர். பரிமாறுபவர் உண்பவர் ஆகிய அனைவரும் கொன்றவர்களாக கருதப்படுவர்.

திருக்குறள்
திருவள்ளுவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள திருக்குறள் என்ற உலகம் முழுவதும் தமிழ்மறை என ஒத்துக்கொள்ளப்பட்ட அந்த நூலில் புலால் மறுப்பு பற்றி ஒரு அதிகாரம் முழுவதும் புலால் உண்பதைச் சாடி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அதிகார எண் 26

251)
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்கனம் ஆளும் அருள்
252)
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பார்க்கு

253)
படைகொண்டார் நெஞ்சம்போது நன்று ஊக்கானது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம்


254)
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்
255)
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணுத்தல் செய்யாது அளறு
256)
தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்

257)
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண் அது உணர்வர்ப்பெறின்



258)
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

259)
அவிசொரிந்து ஆயிரம் வெட்டலின் ஒன்றன்
உயிர்செருத்து உண்ணாமை நன்று
260)
கொல்லான் புலாலை மறுத்தானை கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

வள்ளுவரின் வரிசையில் எத்தனையோ ஈரடிச் செய்யுள்கள் தந்த எத்தனையோ மென் மக்களுள் ஒருவரான அவ்வை முனி தனது கொன்றை வேந்தன் நீதி நூலில் குறள் எண் 58. 63 இரண்ழலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

58) நோன்பென்பதுவே கொன்றுதின் னாமை.

பொருள்:
ஓர் உயிரைக் கொன்று அதன் இறைச்சியினை தின்னாதிருப்பதே புண்ணியம் பெருக்கும் சிறந்த விரதமாகும்.

63) புலையும், கொலையும் களவும் தவிர்

இழிவான இறைச்சி உண்பதையும் (ஐந்து மா பாதகச்செயல்களுள்) மாபாதகச்செயலான கொலை செய்வதையும் நெஞ்சத்தைக் கெடுக்கும் வஞ்சகச் செயலாகிய திருட்டையும் கைக்கொள்ளாதே.

இதுபோன்று உலகின் மறை அத்தனையிலும் உணர்த்தும் ஒரே நெறியாகிய கொல்லாமையினை பற்றி மாபாதகச்செயல்களுள் மிகப்பெரியதென இதனையே வற்யுறுத்தி மக்கள் அறியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆன்மீக அடிப்படை செய்திகளும் உணர்வுக்கோட்பாட்ழல் உறுதியாய்ப் பற்றிடும் செய்திகளும் உடல் விஞ்ஞான அணுக் கோட்பாட்டின்படி    ஆதாரச்செய்திகளாயும் விரிந்த வண்ணம் புலால் மறுப்புக்கொள்கை தொடர்ந்து வர இருப்பது இறைவனுக்குச் செய்யும் ஒரு தொண்டாய் ஸ்வார்த்தம் சத் சங்கம் எண்ணுவதாய் அமையும் என்பதே இப்போதைய இறுதிச்செய்தி.

8 comments:

  1. அன்புடன் வணக்கம் ரெண்டு நாட்களுக்கு முன்பு ஒரு அன்பர் அசைவ உணவின் கெடு பற்றி பதிவு போட்டிருந்தாட் உங்களின் விளக்கம் மிக அருமை .

    ReplyDelete
  2. நல்ல யோசிக்க வைக்கிற பதிவு,
    வலைப்பூ கூட்டத்தில் பிரயோஜனம் இல்லா பல பதிவுகள் ஆகா ஒகோ என்று பின்னுட்டத்தில் புகழப்படுகின்றன.இவனுகெலுக்குல்லேயே கும்மி அடிப்பதை எப்போது நிறுத்துவானுங்களோ... !
    வாழ்த்துகள் தொடருட்டும் உங்கள் பதிவு

    ReplyDelete
  3. யோசிக்க வைத்த பதிவு... வாழ்த்துக்கள். இயேசு அசைவ உணவு உண்பதை ஆதரிக்கவில்லை என்று நீங்கள் கூறினாலும். அவர் அவரது சீஷர்களுக்கு மீன் பிடிக்க உதவி செய்ததை விட்டு விட்டீர்களே!!!

    அதோடு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் ஜனங்களுக்கு பகிர்ந்து கொடுத்ததையும் நீங்கள் குறிப்பிடவில்லையே!!

    விவிலியத்தின் படி... இயேசு அசைவ உணவு உண்பதை ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை என்றே நான் கருதுகிறேன். அது அவரவர் விருப்பத்திற்கு ஏற்றது என்பதோடு பிறருக்கு இடறலாயிருக்கும் பட்சத்தில் அசைவ உணவை தவிர்ப்பது நலமாயிருக்கும் என்பதாகவும் விவிலியம் கூறுகிறது.

    வாய்க்குள்ளே போகிறது மனுஷனை தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என மத்தேயு 15: 11 ல் கூறுகிறார்.

    அதாவது மனிதன் கூறும் அவதூறான வார்த்தைகளும், தீமையான பேச்சுக்களும் தானே அவனுக்கு தீட்டாகப்படுமேயல்லாமல் அவன் உண்கின்ற உணவல்ல என தெளிவாகச் சொல்லிப்போகிறார்.

    ReplyDelete
  4. அனானி கூறியது போன்று...இது போன்ற பதிவுகளுக்கு வலையுலக வாசகர்களும், வலைப்பதிவர்களும் பின்னூட்டம் இடாதது வருத்தப்பட வேண்டிய விஷயமே. அதோடு அனானி அய்யா அவர் பெயரைக் குறிப்பிட்டே பின்னூட்டமிட்டிருக்கலாம்.

    ReplyDelete
  5. தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே . இது போன்ற ஆரோக்யமான கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் நல்லவைக்கே வழிவகுக்கும். விரைவில் உங்கள் கேள்விக்கு பதில்அளிக்கிறேன்

    என்றும் அன்புடன்

    உதயகுமார்
    பதஞ்சலி யோக கேந்திரம்.
    ஸ்வார்த்தம் சத் சங்கம்

    ReplyDelete
  6. அன்புள்ள சகோதரர் எட்வின் அவர்களுக்கு

    நீங்கள் எழுப்பிய கேள்வி அர்த்தமுள்ள ஒன்று

    மகான்கள் பிறருக்காக ஒரு விஷயத்தை செய்யும்போது அதில் உண்டாகும் பாவங்களை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்களும் அப்படியே இருந்திருக்கலாம்.

    ஆனால் நமக்கு அந்த சக்தி இருக்கிறதா ? யோசிக்க வேண்டிய விஷயம்

    குறிப்பாக இயேசு நாதர் பிறர் பாவங்களை ஏற்றுக் கொண்டு தன்னையே சிலுவையில் அறைய அனுமதித்தார் . மீன்களை பிடிக்கச் சொல்லும்போதும் , மீன்களை பகிர்ந்து அளித்த போதும் அதில் உண்டாகும் விளைவுகளைஅவர் ஏற்றுக் கொண்டிருப்பார்.

    ஜீவ காருண்யத்தை மற்றவர்களை விட மிக அழுத்தமாக சொன்னவர் இயேசு நாதர்.
    மற்றும் இப்போதுள்ள அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளும் சைவ உணவிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன.

    அன்று இருந்த சூழ்நிலை வேறு, இன்று இருக்கும் சூழ்நிலை வேறு. எல்லாவற்றிலும் மாசு
    இதனால் தான் சைவ உணவின் அவசியத்தை ஆன்மீக, அறிவியல் ரீதியாக வெளியிட முனைந்து கட்டுரைகளை வெளியிட்டோம்

    என்றும் அன்புடன்
    உதயகுமார்
    ஸ்வார்த்தம் சத் சங்கம்

    ReplyDelete
  7. வாழ்த்துகள் நண்பரே

    தன்மையாக சொல்லி இருக்கிறீர்கள்

    நன்றி

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment