ஸ்வயம்வ்யக்த க்ஷேத்ரங்கள்
நிர்மாணம் செய்யப் பெறாமல் தாமாகவே உருவான ஸ்தலங்கள்.
2. ஸ்ரீமுஷ்ணம்
3. திருமலை
4. சாளக்கிராம மலை
5. நைமிசாரண்யம்
6. தோதாத்ரி என்ற வானமாமலை
7. புஷ்கர க்ஷேத்ரம்
8. பத்ரி
4. அன்பில்
பெருமாள் : வடிவழகிய நம்பி
புஜங்க சயனம் , தெற்கே திருமுகமண்டலம்
தாயார் : அழகியவல்லித் தாயார்
விமானம் : தாரக விமானம்
தீர்த்தம் : மண்டூக புஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : ப்ரஹ்மா, வால்மீகி
மங்களாசாசனம் : திருமழிசையாழ்வார் [ 1 பாசுரம் ]
திருச்சிக்கு அருகே லால்குடிக்கு கிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ள நடராஜ புரத்திலிருந்து 3 / 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. அப்பக்குடத்தான் சன்னதியிலிருந்து கொள்ளிடம் கடந்தும் செல்லலாம் .
5 .திருக்கரம்பனூர் [ உத்தமர் கோயில் ]
பெருமாள் : புருஷோத்தமன்
புஜங்க சயனம் , கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : பூர்வாதேவி பூர்ணவல்லி
விமானம் : உத்யோக விமானம்
தீர்த்தம் : கதம்ப தீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : கதம்ப மஹரிஷி , உபரி சரவஸீ
திருமங்கையாழ்வார் [ 1 பாசுரம் ]
மங்களாசனம் : திருமங்கையாழ்வார்
சிவன் பிரம்மா விஷ்ணு ஆகியோருக்குத் தனித்தனி சன்னிதி உள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து 1.5 கி.மீ. தூரத்தில் உள்ள இத்தலத்தை திருச்சியிலிருந்து துறையூர் மணச்சநல்லூர் செல்லும் பேருந்துகளில் சென்று அடையலாம்.
6. திருவெள்ளறை- ஸ்வேதகிரி
பெருமாள் : புண்டரீகாக்ஷன்
நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : பங்கயச் செல்வி
விமானம் : விமலாக்ருதி விமானம்
தீர்த்தம் : குச, மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்மதீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : கருடன்,சிபி, பூதேவி , மார்க்கண்டேயன் , லக்ஷ்மி
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் , பெரியாழ்வார் [ 24 பாசுரங்கள்]
உய்யக்கொண்டார் எங்களாழ்வான் அவதாராஸ்தலம்.
திருச்சி – துறையூர் மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து பாதையிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ளது.
(தரிசனம் தொடரும் .................)
No comments:
Post a Comment