13. தலைச்சங்க நாண்மதியம் [தலச்சங்காடு ]
பெருமாள் : நாண் தியப் பெருமாள் – வெண்சுடர்ப் பெருமாள்
நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுருக மண்டலம்
தாயார் : தலைச்சங்க நாச்சியார் – செங்கமலவல்லி
விமானம் : சந்திர விமானம்
தீரத்தம் : சந்திர புஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : சந்திரன், தேவர்கள், நித்யஸீரிகள்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் [ 2 பாசுரங்கள் ]
மாயூரம் – ஆக்கூர்- சீர்காழி சாலை மார்க்கத்தில் ஆக்கூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. தலைச்சங்காடு பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 / 2 கி.மீ. தொலைவில் வயலின் நடுவே இத்தலம் அமைந்துள்ளது .
14.திருக்குடந்தை
பெருமாள் : சாரங்கபாணி – ஆராவமுதன்
உத்யோக சயனம், தெற்கே திருமுக மண்டலம்
தாயார் : கோமளவல்லி
விமானம் : வேதவேத விமானம்
தீர்த்தம் : ஹேமபுஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : ஹேமமஹரிஷி
மங்களாசாசனம் : பொய்கை, மதுரகவி, குலசேகரர், திருப்பாணன்,
தொண்டரடிப்பொடி தவிர ஏனைய ஆழ்வார்கள்
[ 51 பாசுரங்கள் ]
நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை நாதமுனிகள் தொகுப்பதற்கு காரணமாகியவர் இத்தலத்துப் பெருமாள்.
கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்து வசதி மிக்க நகரம்.
15. திருக்கண்டியூர்
பெருமாள் : ஹரசாபவிமோசனப் பெருமாள்
நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : கமலவல்லி
விமானம் : கமலாக்ருதி விமானம்
தீர்த்தம் : கபால மோசன புஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : அகஸ்தியர், ருத்ரன்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் [ 1 பாசுரம் ]
தஞ்சை – திருவையாறு சாலை மார்கத்தில் தஞ்சையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இது .
(தரிசனம் தொடரும்)
No comments:
Post a Comment