Friday, October 28, 2011

அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 7 )

16  திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில் )

பெருமாள்             :   ஒப்பிலியப்பன் 
                                       நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                    :   பூமி தேவி நாச்சியார் 

விமானம்              :  விஷ்ணு, சுத்தானந்த விமானம் 

தீர்த்தம்                  : அஹோராத்ர புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்          :  மார்க்கண்டேயர், கருடன் காவேரி, தர்ம தேவதை 

மங்களாசனம்    :  பொய்கையார் , பேயார், நம்மாழ்வார் ,
                                     திருமங்கை ஆழ்வார்         ( 47  பாசுரங்கள் )

கும்பகோணத்திலிருந்து 7  கி.மீ தொலைவில் உள்ள பேருந்து வசதி மிக்க தலம்.








17  .திருக்கண்ணபுரம் 


பெருமாள்              :    சௌரிராஜன் 
                                         நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                    :   கண்ணபுர நாயகி 

விமானம்              :   உத்பலா வதக விமானம் 

தீர்த்தம்                  :   நித்ய  புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்          :   மார்க்கண்டேயர், கருடன் காவேரி, தர்ம தேவதை 

மங்களாசனம்     : பட்டர்பிரான்,கோதை, கலியன் , குலசேகரர், நம்மாழ்வார்
                                            ( 128  பாசுரங்கள் )
எட்டெழுத்து மந்திரத்தின் எழுத்துக்களின் உருவமாக கோலம் தரும் பெருமாள் உறையும் தலம் .

நாகப் பட்டினம் - நன்னிலம் சாலை வழியில் உள்ள திருப்புகலூரிலிருந்து 
2 கி.மீ  தொலைவில் உள்ள தலம் திருவாரூரிலிருந்து பஸ் நேரடியாகச் செல்கிறது. மாயவரத்திலிருந்து திருப்புகலூர் வரலாம். 





18  திருவாலி

பெருமாள்             :   லக்ஷ்மி நரஸிம்ஹன் - வயலாளி மணவாளன் 
                                       வீற்றிருந்த    திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                   :   அம்ருதகடவல்லி 

விமானம்             :  அஷ்டாக்ஷர  விமானம் 

தீர்த்தம்                 :   இலாக்ஷணி  புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்         :  கலியன், அலாதி நிகஞ்சம்  பிரஜாபதி 

சீர்காழி -திருவெண்காடு பேருந்து பாதையில் சீர்காழியில் இருந்து தென்கிழக்கே  8 கி.மீ தூரத்திலும் உள்ளது 





19  திருநகரி 

பெருமாள்              :   வேதராஜன் வீற்றிருந்த திருக்கோலம்,
                                         மேற்கே  திருமுக மண்டலம் 

தாயார்                    :    அமிர்த வல்லி

விமானம்              :    அஷ்டாக்ஷர  விமானம் 

தீர்த்தம்                  :     இலாக்ஷணி  புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்          :    கலியன், அலாதி நிகஞ்சம்  பிரஜாபதி

மங்களாசனம்    :  குலசேகராழ்வார் , கலியன்        ( 47  பாசுரங்கள் )

திருமங்கையாழ்வார் அவதாரத் தலமான திருக்குறையலூர் இதன் அருகில் உள்ளது.
சீர்காழி -பூம்புகார் சாலையில் பேருந்து வசதி உள்ள தலம். 
திருவாலி யிலிருந்து 4  கி.மீ தூரத்தில் உள்ளது. 





20   திருநாகை (நாகப்பட்டினம் )

பெருமாள்              :  சௌந்தர்யராஜன் -நீலமேகப் பெருமாள்
                                       நின்ற திருக்கோலம், கிழக்கே   திருமுக மண்டலம் 

தாயார்                    :  சௌந்தர்யவல்லி

விமானம்              :  சௌந்தர்ய விமானம் 

தீர்த்தம்                  :   ஸார  புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்          :  நாகராஜன், கலியன், ப்ரம்ஹாதிகள்

மங்களாசனம்     :  திருமங்கையாழ்வார்      (10  பாசுரங்கள் )

நாகப்பட்டினம்  ரயில் நிலையத்திலிருந்து  2   கி.மீ தூரத்தில் உள்ளது.மாயவரத்திலிருந்து பேருந்துகள் கோவில் அருகிலேயே செல்கிறது .





21   திருநறையூர்  (நாச்சியார் கோவில்  )

பெருமாள்             :    நறையூர்
                                        நின்ற திருக்கோலம், கிழக்கே   திருமுக மண்டலம் 

தாயார்                    :   நம்பிக்கை நாச்சியார் -வஞ்சுளவல்லி

விமானம்              :   ஸ்ரீனிவாச  விமானம்  ( ஹேம விமானம் )

தீர்த்தம்                   :   மணிமுக்தா நதி 

ப்ரத்யக்ஷம்           :   ப்ரஹ்மா , மேதாவி ரிஷி 

மங்களாசனம்     :   திருமங்கையாழ்வார்      (110  பாசுரங்கள் )

திருமங்கையாழ்வார்   பெருமாளிடம் இருந்து பஞ்சசமஸ்காரம் பெற்ற இடம். இங்குள்ள கல்கருட வாகனம் தனிச் சிறப்பு கொண்டது.




கும்பகோணத்திலிருந்து குடவாசல் வழியாக திருவாரூர் செல்லும் சாலை வழியில் கும்பகோணத்திலிருந்து 9  கி.மீ. தொலைவில் உள்ளது.
ஒப்பிலியப்பன் கோயிலிலிருந்தும் செல்லலாம்.





22 . நந்திபுர விண்ணகரம்
(நாதன் கோயில் )


  பெருமாள்                 :               விண்ணகரப் பெருமாள் - ஜகந்நாதர்,
நாதனாதன்           வீற்றிருந்த திருக்கோலம்,மேற்கே திருமுக மண்டலம்         

தாயார்                         :               செண்பகவல்லி

விமானம்                   :               மந்தர விமானம்
தீர்த்தம்                       :                நந்தி தீர்த்தம்
ப்ரத்யக்ஷம்               :                நந்தி, சிபி
மங்களாசனம்         :                திருமங்கையாழ்வார்      (10  பாசுரங்கள் )


கும்பகோணத்திலிருந்து தெற்கே சுமார்  4  கி.மீ. தொலைவில் உள்ள தலம். நகரப் பேருந்தில் கொற்கை என்னுமிடம் சென்று அங்கிருந்து  இத்தலத்தை
அடையலாம்..

                                                           


23 .திரு இந்தளூர்

பெருமாள்              :     சுகந்தவநனாதன்- பரிமளரங்கள்
                                          வீர சயனம், கிழக்கே திருமுக மண்டலம்
                               
தாயார்                    :    சந்திரசாபவிமோசநவல்லி - பண்டரீகவல்லி

விமானம்               :   வேத சக்ர   விமானம்
தீர்த்தம்                   :   இந்து புஷ்கரிணி

ப்ரத்யக்ஷம்          :    சந்திரன்

மங்களாசனம்     :   திருமங்கையாழ்வார்      (11  பாசுரங்கள் )

மாயவரம் நகரிலேயே ஒரு பிரிவு . நகரப் பேருந்தும் செல்கிறது 





24 .திருச் சித்திரக்கூடம்

பெருமாள்              :     கோவிந்த ராஜர்
                                         போக சயனம், கிழக்கே திருமுக மண்டலம்                                  
தாயார்                    :     புண்டரீகவல்லி

விமானம்              :     ஸாத்விக    விமானம்

தீர்த்தம்                   :     புண்டரீகஸரஸ்ஸீ புஷ்கரிணி

ப்ரத்யக்ஷம்          :     சிவன், தில்லை மூவாயிரவர் ,வ்யாக்ரபாதர்

மங்களாசனம்     :    குலசேகராழ்வார்,திருமங்கையாழ்வார்      ( 32     பாசுரங்கள் )

சென்னை -மாயவரம் ரயில் பாதையில் சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தூரத்தில்

உள்ளது . நடராஜர் கோவிலில் ஒரு தனிக் கோவிலாக உள்ளது

(தொடரும் )













No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment