ஸ்வார்த்தம்
- பொருள்
விளக்கம்
ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு அருளுரை
எது
ஒருவனுக்கு நன்மை தருகிறதோ அதுவே ஸ்வார்த்தம் . உண்மையில் ஒருவனுக்கு நன்மை
புரிவது மோட்சமேயாகும். இந்த பொருளில் ஸ்வார்த்தம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டியது.
இந்த மோட்சத்தை விட்டு விட்டு ஸ்வார்த்தம் என்பது பணம், பெயர், பதவி , சம்பாதித்தல்
என்று பலர் தவறாகப் புரிந்து கொண்டு அதன் காரணமாகவே உலக போகங்களில் முயற்சி
செய்கின்றனர். இதுஒரு பெரிய தவறாகும்.
ஸ்வார்த்த விஷயத்தில் ஏமாறுபவன் மூர்க்கன் என்று ஆதிசங்கரர் கூறுகிறார்.
நாமெல்லாம் ஸ்வார்த்த விஷயத்தில் ஏமாந்து கொண்டேயிருக்கிறோம்.
இந்த மனித உடல் பணமும் பதவியும் சம்பாதிப்பதற்காக கிடைக்கவில்லை.
இதனை வைத்து மோட்சத்தை அடைவதற்கே கிடைத்துள்ளது.
துக்கமாகிய சமுத்திரத்தை கடப்பதற்கு
அந்த மனித உடலைத் தோணிபோல பயன்படுத்த வேண்டும் என்பார் பெரியோர்.
மிருகங்களுக்கு மோட்ச ஞானத்தை அடையும் தகுதியோ யோக்யதையோ இல்லை. மனிதன்
ஒருவனுக்கும் மட்டும் உடலையும், இந்திரியங்களையும் , மனதையும் வைத்துக் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் உயர்வு பெறுவதற்கு
தகுதிஉண்டு.
விவேகி இவ்வரிய மானிட வாழ்க்கையினை மோட்சம் அடைய பயன்படுத்துவான்.
அவிவேகி
அதியல்பமான போகங்களில் இவ்வாழ்வை வீணாக்கி விடுவான்.
கோவிலின்
கோபுரம் உயரமாக இருப்பது நாம் அதன் கீழே எவ்வளவு தாழ்ந்து இருக்கிறோம்
என்பதைஉணர்த்தவே .
அகங்காரமே விட்டுவிடுவதே மோட்ச மார்க்கமாகும்.
மனிதன் சாதிக்க வேண்டிய முதல் சாதனை அகங்காரத்தினை விட்டு விடுவதே. எல்லாம்
அறியும் கடவுள் நாம் செய்வதனைத்தும் அறிவார்
ஆன்மீகத்தை
, யோகத்தை கற்றறிந்து முற்றிலுமாக கரை கண்டவர்கள் இந்த பூவுலகில் இல்லை.
ஒருவன்
தனக்குத் தானே நன்மை செய்து கொள்வது என்பது
ஆன்மீக மற்றும் யோக நெறி நிற்றல் என்பது மட்டுமே ஆகும்.
நமக்கு
நாம் நன்மை செய்வது என்பது நமக்குள் இருக்கும் இறைவனை நாம் உணர்தல் ஆகும். அதுவே
ஸ்வார்த்தம் ஆகும். பிறகு உண்மை எதுவென்று தாமே விளங்கும்.
அத்தகைய
யோக நெறி , ஆன்மீக உணர்வினை கற்றுக்கொள்ளும் , கற்பிக்கும் , இனியும் கற்றுக்
கொள்ள இருக்கும் அன்பர்களின் இணைப்பே
ஸ்வார்த்தம் சத் சங்கம் ஆகும். இதுவே ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் பொருள் ஆகும்.
யோகத்தின்
தலைவன் பதஞ்சலி மகரிஷி வகுத்துத் தந்த பாதையில் ஆன்மீக பயணம் தொடரும்
இப்படிக்கு
அடியார்க்கும்
அடியவன்
சிவ.
உதயகுமார்
No comments:
Post a Comment