ரகு
வம்சம் (மூல காரணம் )
ஸ்ரீ
ராமர் தோன்றியது ரகு வம்சத்தில்.
சூரிய குலத்தில் தோன்றிய திலீபன் என்ற அரசன்
மற்றும் அவன் மனைவி சுதக்ஷீணா என்ற அரச தம்பதிகளுக்கு குழந்தைப்
பேறில்லை.
எனவே
அவர்கள் பிரம்ம ரிஷி வசிஷ்டரை அணுகி தங்கள் வேண்டுகோளை வைத்து வழிபட்டனர்.
அவர் பின்வருமாறு கூறினார் -
நீங்கள் முன்பொரு சமயம் தேவலோகத்திற்கு இந்திரனுக்கு உதவச் சென்றிந்தீர்கள். அதன் படி பணி முடிந்து திரும்புகையில் தெய்வீகப் பசுவான காமதேனுவை வணங்காமல் அலட்சியமாய் சென்றீர்கள். அந்த சாபத்தினால் வம்சமில்லாது போனது.
இதற்குப் பரிகாரமாக நந்தினி (காமதேனுவின் மகள் ) என்ற பசுவை நன்கு பராமரித்து வணங்கி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும் என்று வாழ்த்தினார்.
இதன் பிறகு அரசன் திலீபன் எங்கு சென்றாலும் மகள் போல நந்தினியும் கூடவே செல்லும் .
சிங்கம் பேசியது
இவ்வாறு ஒரு நாள் காட்டில் சென்று கொண்டிருந்த நந்தினியிடம் இருந்து 'அம்மா ' என்று அலறல் சத்தம் கேட்டது.
ஏனென்றால் நந்தினியை ஒரு சிங்கம் தாக்கத் தொடங்கியது . அரசன் அந்த சிங்கத்தை கொல்வதற்கு வில்லை எடுத்தபோது கை எழவில்லை.ஏனென்றால் சிங்கம் பேசியது. நந்தினிக்கு பதில் உன்னை எனக்கு இரையாக தருவாய் என்றால் நான் நந்தினியை விட்டுவிடுவேன் என்று கூறியது. அரசன் பணிந்து சிங்கத்திற்கு இரையாக குனிந்து நின்றான்.
நந்தினி சொன்னது.
அந்த சமயத்தில் அரசன் முன்பாக நின்றிருந்த சிங்கம் மறைந்தது. நந்தினி கூறியது. என் மீது உங்கள் பாசத்தை சோதிக்கவே மாயச் சிங்கம் தோன்றியது. நீங்கள் அன்பில் /பாசத்தில் மிகவும் உயர்ந்து விட்டீர்கள். என்னுடைய பாலை அருந்துங்கள் உங்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும் என்றது .
அப்படி செய்த பின் அந்த வாக்கிற்கு ஏற்ப அரசி கருவுற்றாள். குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ரகு என்று பெயரிட்டனர். அந்த வழியில் பின்னர் பிறந்த ஸ்ரீ ராமருக்கும் ரகு என்ற பெயரும் சூட்டப்பட்டது. இதுவே ரகுவம்சத்தின் மூல காரணம் ஆகும்.
No comments:
Post a Comment