சித்தர்களின்
மேலாண்மை
“ஆன்மீகம் “
என்பதற்குப் பொருள் தேடும்முன் ஆன்மீகத்திற்கு எதிர்ப்பதம் ஏதுவாக இருக்கும் என்று சிந்தித்தால் “அறியாமை “
என்று ஒரு பொதுச் சொல்லே பொருத்தமாக இருக்கும்.
ஆம் !
மனிதம் அறியாமை என்ற அஞ்ஞானத்தின் இயல்பிலிருந்து தனை மாற்றிக் கொள்ளாதவரை ஞானம்
என்பது ஒரு புதிராகவே இருக்கும்.
ஞானம் என்பது பொதுக் கொள்கை. மனிதத்திற்கு
மட்டுமல்ல. பிரபஞ்ச அமைப்பினால் உருவான அத்தனை உயிர்களுக்கும் ஞானம் பொதுவானது.
ஒரு கல்லோ , மரமோ, நீரோ, நெருப்போ,
காற்றோ, விலங்கோ , பறவையோ எதுவானாலும் அதில் ஞானம் பிணைக்கப் படுமாயின் அது
மனிதனைப் போன்ற சிறப்பு அறிவை , மனதைப் பெற்று விடும்.
இதிலிருந்து
மனிதனுக்கு மட்டுமே ஞானம் பெற தகுதி உண்டென்பது மறுக்கப் பட வேடியதாகிறது. மனிதம்
ஞானத்தைப் பெற வேண்டுமானால் மனதை அவன் அறிய வேண்டும். மனதை அறிய வேண்டுமானால் அவனும்
ஞானம் பெற வேண்டும். ஞானம் பெறுவது ஆன்மீக இருப்பிலிருந்தே
பெறத்தக்கதாயிருக்கிறது.
ஆன்மீக
இருப்பை தேடிக்கண்டு கொண்டவர்கள் சித்த புருஷர்கள்.
அவர்களால
மனிதம் அல்லாதவற்றையும் கூட தன்னிடம் குறையாது வளர்ந்து பெருகிக்கொண்டே இருக்கும்
இருப்பிலிருந்து எடுத்தாளும் முறைகள் மூலம் மனித இயல்புக்கு மாற்றி விடுவார்கள்
நட்டகல்லும் பேசுமோ ? (சிவ வாக்கியர் )
ஆனாலும் சித்தர்கள் பேச வைப்பார்கள். அவர்களால் இயலாதது ஒன்றுமில்லை. ஏனென்றால் அவர்களும் ஒரு படைப்பாளிகள்
அவர்கள்
மனிதர்களுக்கேற்ற வழிபாட்டு முறைகளை
சரியை, கிரியை , ஞானம் , யோகம் என்ற தனிப் பண்போடு கூடிய முறைகளைக்
கூறினார்கள்.
இதில் ஒரு
மாறுபாடு என்னவென்றால் அவர்களுக்கென்றே விதிமுறைகளைக் கொண்டவர்களாய் அதில் மையப்படுத்தப் பட்ட இறைவனை வழிபடும் தொண்டு நெறியே அது ஆகும்.
No comments:
Post a Comment