1 ) தீவினைகளை வெட்கமின்றி ,
கூச்சமின்றி, பயமின்றி அதன் தீய
விளைவுகளைப் பற்றி கவலைப் படாமல், அதனை தொழிலாகவே செய்து கொண்டிருப்பவன்
தீயவனாகிறான்.
2) தன்னலம் மட்டும் கருதி சில
மற்றும் பல நல்வினைகளைச் செய்பவன் இகவாழ்வுச் சுகங்களைப் பெறுகிறான். இவன் சாதாரண
மனிதன் .
3) தன்னலத்தை ஒருபோதும் முதன்மையாய்
கருதாமல் பொதுநலன்களில்அக்கறை கொண்டு நல்வினகளைச் செய்பவன் “நல்லவன்” எனப் பெயர்
பெறுகிறான்.
4) ஆன்ம நலன் கண்டு ,உணர்ந்து
ஆன்ம உபாசனகளைச் செய்து நல்வினைகளையும் செய்பவன் மாமனிதன் ஆகிறான்.
5) அன்பு,கருணை, தியாகம், நல்வினை,
அமைதி, பொறுமை , பரசிந்தை கொண்டு ஞான
வழியைக் கண்டு இறைவனை உணர்பவன் “மகான்” ஆகிறான்.
6) உலகமும், உலகைச் சார்ந்தவைகளும்
அழியக்கூடியவைகளே என்ற உண்மையை அறிந்து, அழியாததும், என்றும் நிலைப்பதும்,
யாவற்றுக்கும் காரணமானவனை நோக்கி தவமியற்றுபவன் “தபஸ்வி” அல்லது “ஞானி”யாகிறான்.
7) ஆன்ம விடுதலைக்காகவும்,
பிறவிநோயை களையவும், இயமநியம நெறி பிறழாது
, இறைவனை முன்னிறுத்தி, தூல ,சூட்சம,காரண சரீர, சித்த மற்றும் சித்திகளை “யோகம் “
மூலம் வெற்றி கண்டு மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவன் “ யோகியும் சித்தரும்
,முனிவரும் ” ஆவார்கள் .
8) யோகம், தவம்,சித்தி, பரமுக்தி
மற்றும் இறைக்கலப்பு , இறைத்தன்மைஅடைந்தவர்கள் . மரணமும் ,பிறப்புமின்றி
படைப்பாற்றல் பெற்றவர்களாய் வானவர் வரிசையில் வாழ்பவர்கள் “பிரம்ம ரிஷிகள்”
ஆவார்கள்.
No comments:
Post a Comment