Wednesday, April 22, 2015

அதுதான் ஆசனம் - யோகாசனம் (ஞான சபை வகுப்புகள்)


 அருளுரை தொடர்ச்சி 

ஞான சபை வகுப்புகள்


முதலில் நீ தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தர்மத்தின் படி ஒழுக வேண்டும், இயமம், நியமம், இந்த இரண்டும் வந்துவிட்டால், மற்றவையெல்லாம் படிப்படியாக வந்துவிடும். இந்த இரண்டிலும் சீர்பட்டு விட்டால், உலகாதயமான விஷயங்கள் சரியாகி விடும். அதிலே நேர்த்தியான  வாழ்க்கை வாழ்ந்து விடுவாய். முதலில் மன நிம்மதி கிடைக்கும். 


யாருக்கு என்ன கொடுக்க வேண்டும். யார் நமக்கு என்ன தருவார்கள் என்ற  எண்ணங்களெல்லாம், போய்விடும். அப்படியானால், நான் ஒட்டாண்டியாகி விடுவேனா அப்படியில்லை, உன் தேவைக்கு ஏற்ப, உழைப்புக்கேற்ப  ஊதியம் கிடைக்கும். அதிலிருந்து கிடைக்கின்ற வருமானம் போதுமானதாக இல்லாவிட்டாலும், அதைப் போதுமானதாக மாற்றிக்கொள்ள முடியும்.              அப்போது உண்மையான நிம்மதி கிடைக்கிறது.

நீங்கள் நினைக்கலாம், நான் சாமியாராக அத்தனையும் சொல்கிறீர்கள் என்று. சாமி யார் என்று தெரிந்துக் கொள்வதில் தான் இதில் முக்கியமாக இரு க்கிறது. சிறிது காலத்திற்கு பிறகு நீங்களே சாமியாராக மாறப் போகிறீர்கள். அதாவது சுவாமியாக மாறப் போகிறீர்கள். அதற்குத்தான் மனத்தைக்  கட்டுப்படுத்த வேண்டும். மனம் கட்டுப்படுவது மூலம், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற  எட்டு அங்கங்களின் வழியாக மிக அழகாக நம்மை சற்குரு ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி நகர்த்திச்செல்கிறார்.

 

கஷ்டப்படுத்தவில்லை, வேதனைப்படுத்தவில்லை, இதைக் கஷ்டம் என்று சொல்லவில்லை. ரொம்ப அழகாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆகவே  இவன் நல்லபடியாக ஒழுகிக் ( நடந்து ) கொண்டிருக்கிறான். நல்லவற்றைக் கடைப்பிடிக் கிறான் அடுத்தப்படியாக உடல்நலம் தேவை.


 உடல்நலம்  இல்லாவிட்டால், ஞான நிலை எய்த முடியாது. ஞானம் எய்துவது என்று சொன்னால் இறைவனை நினைப்பதற்குக் கூட உடல் நன்றாக இருந் தால்தான் நினைக்க முடியும். தலைவலியோ, காய்ச்சலோ, உடல் உபாதைகளோ இருந்தால், ஒருவனால் தனக்கு நல்லது எதையும் சிந்திக்க முடியாது.  


தீயவைகளைப் பார்த்தால், வெறுப்பு வரும். வெறுப்படைந்த நிலையிலே, வியாதியோடுதான் இருக்க முடியும். அதுதான் உடல்கூறு சாஸ்திரம். ஆகவே உடலை சரிப்படுத்துவதற்கு ஆசனம் ஒன்றை சொல்லியிருக்கிறார். ஆசனத்தை சொல்லாத எந்த ரிஷிகளுமேயில்லை. ஆனால் என்ன ஆசனம்எத்தனை ஆசனம் என்றறெல்லாம் சொல்லவில்லை.


                                                          
yoga, yogasana , swartham sathsangam , ashtanga yoga, t.s.krishnan


ஆசனம் என்று சொன்னால் இருக்கை என்று பெயர். இருக்கை என்று சொன்னால் அமைதியாக இருக்க எவ்வாறு உட்கார்ந்து இருக்க வேண்டுமோ  அது இருக்கை. அதுதான் ஆசனம். ஆக ஆசனத்திலே எத்தனை வகையிருக்கிறது என்று பார்க்கிற போது யோகத்திற்கும் ஆசனத்திற்கும்  சம்பந்தமிருக்கிறது. 

அதாவது உடலில் எந்தப் பகுதியாவது வேலை செய்யாமல் இருந்தால், ஆசனத்தாலும், உணர்வினாலும், மனத்தாலும் அந்த பகுதியைச்  சரிசெய்ய முடியும். உன்னுடைய பிராண சக்தி மேம்படும். பிராணசக்தி மேம்படுவதற்கு சாதாரண உடற்பயிற்சி செய்தால் போதுமே என்று  நினைக்கலாம். 

ஆனால் உடற்பயிற்சி (Exercise) என்பது நேரம் விரயம் தான் (waste of time) அது புற அழகைத் தரும்.  அக உறுப்புகளுக்கு மேன்மையை தராது. அது ஆரோக்கியமாக இருக்காது.

 

ஆசனம் செய்தல் என்றால் உன்னுடைய புற உறுப்புகளை வைத்து அக உறுப்புகளை  மேம்படுத்துவது தான் பிரதான நோக்கம். அக உறுப்புகள் சரியாகிவிட்டால் , நீ ஒல்லியாகயிருந்தாலும் சரி, பருமனானலும் சரி, குட்டையாகயிருந்தாலும், உயரமாகயிருந்தாலும் சரி, அழகாகயிருந்தாலும் சரிஅழகில்லாமல் இருந்தாலும் சரி, நீ எந்த நிலையில் இருந்தாலும் சரி நீ ஆரோக்கியமாக இருப்பது மிக விசேஷமான காரியம். அது ஆசனத்தால் முத லில் செய்ய வேண்டியது. அது உன்னால் செய்ய முடியும். ஆகவே ஆசனங்களை ஒரளவு படித்தாக வேண்டும். 

ஆசனம் என்பது சாதாரணமாக  தள்ளுபடியான விஷயமில்லை. அதனால் தான் யோகம் + ஆசனம் என்று ஆரம்பித்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் யோகாசனம்  என்பது அந்த ஆசனத்திற்கே யோகம் என்று எழுதிருக்கிறார். 

உடலிலுள்ள எந்தந்த  எவ்வாறு அங்கங்கள் இருக்கின்றன அவற்றின் பலம்பலவீனம் என்ன என்று அறிந்து என்னென்ன வேலை செய்கிறது என்று பார்த்து அதற்கு ஏற்ப அந்த ஆசனத்தைச் செய்தால் போதும்.

ஆசனங்களைப்பற்றி சற்குரு சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள். 

அவர் யோகத்தின் அரசன். யோகம் செய்ய முதலில் உட்கார் என்று  சொன்னார். அமர்தல் என்பது ஓர் ஆசனம். 

அது சுகமாயிருத்தல் வேண்டும். ஸ்திர சுகம் ஆசனம் என்றார் சற்குரு.



No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment