Tuesday, June 21, 2016

சர்வதேச யோகா தினம்


சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் யோகப் பயிற்சி பிரிவான மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பில் மதுரை பழங்காநத்தம் நாவலர் சோம சுந்தர பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் யோகா விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.








தலைமை ஆசிரியர் திரு நடராஜன் அவர்கள் நிகழ்ச்சியினை துவக்கி வைக்க நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்புரை ஆற்றியதோடு மட்டுமல்லாமல் மாணவ மாணவியர்க்கு சில பயிற்சிகளும் நமது அன்பர் யோக. கமலக்கண்ணன் மற்றும் சோமு குமார் அவர்கள் மூலம் அளிக்கப்பட்டது.







இவ்விழாவிற்கு அனுமதி அளித்த தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் உற்சாகத்துடன் திரளாக பங்கேற்ற மாணவ மாணவியர்க்கும் மற்றும் பயிற்சி நிகழ்வுகளை ஆர்வமுடன் கண்டு களித்து தங்களுக்கும் சிறப்பு யோகா பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கும் மேலும் துணை புரிந்த உடற்பயிற்சி ஆசிரியருக்கும் , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் சிறப்பாக பணியாற்றிய அன்புச் சகோதரர். திரு விஷ்ணு பிரசாத் அவர்களுக்கும் ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்


இதைத் தொடர்ந்து ஆசிரியப் பெருமக்களுக்கு பயிற்சியை துவங்க இருக்கும் எனது சகோதரர் யோக. கமலக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment