ஓம்
உலகமெங்கும் உள்ள யோகா சாதகர்களால் வருடாவருடம் ஜூன் 21 தேதி அன்று உலக யோகா தினம் கொண்டாடப் படுகிறது.அதன் வழியில் ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.
இந்த வருடம் மதுரை திருப்புவனம் சாலையில் உள்ள கிராமம் k. புளியங்குடியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நமது ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் சார்பாக யோகா தினம் அன்று " யோகா ஒரு அறிமுகம்" என்ற தலைப்பில் மாணவ மாணவியர்க்கு பயிற்சிகள் கொடுக்கப் பட்டது. இதில் நமது சங்கத்தின் யோகா ஆசிரியர்கள் கமலக்கண்ணன் , உதயகுமார் மற்றும் சோமு குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
உடற்கல்வி ஆசிரியர் வரவேற்புரை ஆற்றினார்
தலைமை ஆசிரியர் நன்றி உரையை ஆற்றி ஸ்வார்த்தம் சத் சங்கத்திற்கு தனது வாழ்த்துக்களையும் மற்றும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்
No comments:
Post a Comment