Thursday, July 19, 2018

நிகழ்வுகள் 2017 - வெளிச்சத்தை நோக்கிய பயணம்

வெளிச்சத்தை நோக்கிய பயணம் (செப்டம்பர் 16, 2017)



இன்று மாலை மதுரை பைக்காரா தூய்மை விழிகள் மாற்றுத் திறனாளிகள் மாணவ மாணவியர்க்கு யோகா பயிற்சி ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் மூலம் அளிக்க திட்டமிடப் பட்டிருந்தது. அந்த வகையில் இன்றைய வகுப்பு நன்றாக நடைபெற்றது
          
                                         


ஒவ்வொரு பயிற்சி முகாமும் ஒவ்வொரு தனித்துவமான அனுபவம். அந்த வகையில் தான் இன்றைய பொழுதும் அமைந்திருந்தது. பல இடங்களிலும் பல மனித முகங்கள் தரிசிக்கும்போது உற்சாகங்களுக்கு குறைவில்லை.


சுமார் 45 நிமிடம் நடந்த வகுப்பில் அவர்கள் புரிந்து கொண்டு செய்யக் கூடிய பிராணாயாமம் மற்றும் சில பயிற்சிகளை நமது யோகா.கமலக்கண்ணன் அவர்கள் வழங்கினார்.


அனைவருக்கும் திருப்தியாக வகுப்பு அமைந்த நிலையில் பெண் சகோதரிகள் அனைவரும் யோகா பயிற்சிகளை பற்றிய தங்களது சந்தேகங்களை எங்களிடம் முன்வைத்து தங்கள் கலந்துரையாடல் ஐ ஒரு மணி நேரம் எங்களுடன் நிகழ்த்தினார்கள். உற்சாகமான அவர்களுடைய கேள்விகள் நம்மை உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பதில் சொல்ல வைத்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு அப்படி ஒரு புத்துணர்ச்சி . இறைவனுக்கு நன்றி...


மீண்டும் சில வாரங்கள் நம்மை அழைத்திருக்கிறார்கள் அந்தச் சகோதரிகள். கண்டிப்பாக செல்வோம். தெரிந்ததைச் சொல்வோம். அன்பினைப் பரிசாக பெறுவோம்.

குருவின் ஆசியினால் இது போன்ற தொண்டுப் பயணங்கள் தொடர வேண்டும்.
விழிகள் இருந்தும் கண்டுகொள்ளா உள்ளங்கள் இடையே அன்பெனும் விழிகளைக் கொண்டவர்களாய் அவர்கள் இருந்து நெஞ்சம் நிறைந்த புன்னகைகளை பகிர்ந்து கொண்டார்கள்.

அவர்களுக்கு விழிகள் இல்லை என்று யார் சொன்னது ?
அன்பெனும் விழிகள் அவர்களிடம் ஆயிரம் உண்டு.



                                                                                                                 என்றும் உவகையுடன்
                                                                                                      C.S.UDAYA@ சிவ. உதயகுமார்.

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment