Friday, June 26, 2020

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு

வணக்கம் ,
                       ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு வலைப்பதிவு வாசக நெஞ்சங்களை பதிவின் மூலம் சந்திப்பது என்பது உள்ளபடியே மகிழ்ச்சியை தருகிறது. சத்சங்கத்தின் பணிகள் மற்றும் தனிப்பட்ட காரணங்கள் காரணமாகவும் நமது குருநாதரும் ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் நிறுவனருமான யோக ஆச்சாரியார் திரு டி.எஸ்.கிருஷ்ணன் அய்யா அவர்களின் ஸ்தூல ஜீவன் முக்திக்கு ( JANUARY 4 ,2020) முன்பும் பின்பும் பதிவுகளை வெளியிடவில்லை.

                                                       
YOGA ACHAARYA T.S.KRISHNA

                 சத்சங்க மெய்யன்பர்களுக்கு முன்னமே தன்னுடைய தேகம் என்ற சட்டையை உதிர்க்கும் காலத்தை சுட்டிக் காட்டிய குருநாதர் அவர்கள் எந்த அட்டாங்க யோகத்தை தன்னுடைய வாழ்க்கையில் அந்தரங்க சீடர்களுக்கும் மற்றவர்களுக்கும் உபதேசித்து வந்தாரோ அந்த யோக முறையிலேயே தான் தான் இருந்த உடம்பை விட்டு வெளியேறினார்..



                   " எப்போதும் நான் உங்களுடன் இருப்பேன். உள்ளன்போடு நீங்கள் என்னை அழைத்தால் நான் வருவேன் " என்று தமது பிள்ளைகளான சீடர்களுக்கு அளித்து சென்ற வாக்கின் படியே யோக மார்க்கத்தில் பற்று கொண்டு முன்னேற்றம் காணும் சீடர்களுக்கு என்றும் அவர் தோன்றாத் துணையாக இருந்து வழி நடத்துவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

   அவருடைய ஆசியினாலும் அனுக்கிரஹத்தின் மூலமாகவும் சத்சங்கமும் அதன் அன்பர்களும் என்றென்றும் இறைவனுக்கும் சத்குருவிற்கும் நன்றி பாராட்டும் வகையில் ஆன்மீகத் தொண்டை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்று நம்புகிறோம் ................

இனி வரும் காலங்களில் சத்குருவின் உபதேசங்களை தொடர்ந்து மக்களிடையே கொண்டு செல்வோம் என்று உறுதிகூறுகிறோம்.


                                                                                                                            இப்படிக்கு
                                                                                                                         சிவ. உதயகுமார்
                                                                                                                  ஸ்வார்த்தம் சத்சங்கம் 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment