யோக
ஆச்சாரியார் டி.எஸ்.கிருஷ்ணாவின் உபதேசங்கள்
மனிதனின்
மனம் சாந்தி நிலையை அடைவதற்கு மூன்று விதமான தடைகள் இருக்கின்றன. சாந்தி என்றால்
அமைதி. இதற்கு எதிர்ப்பதம் அமைதியின்மை. அல்லது கொந்தளிப்பு.
யோக
நிலையில் மனம் சாந்தி அடைவதற்கு முதலாவது தடையாக இயற்கை இருக்கின்றது.
இரண்டாவதாகச் சூழ்நிலை ஒரு தடையாக இருக்கின்றது.
மூன்றாவதாக
உடல் தடை.முதலாவதாக இயற்கையின் சீற்றமான புயல், மழை, வெள்ளம் என்று வரும் போது நம்முடைய தியானத்தில் தடை ஏற்படுகின்றது.
அவ்வாறு
இயற்கை நமக்குத் தொல்லை தராது இருக்க இயற்கை சாந்தியடைய வேண்டும் என்று இறைவனை
வேண்டி கொண்டு தியானம் செய்ய துவங்குவோம்.
அடுத்ததாகச்
சூழ்நிலையால் வரக்கூடிய தடைகளை மீறி அதனைப் பொருட்படுத்தாமல் நாம் தியானம் செய்து
கொண்டிருக்கின்றோம்.
அடுத்ததாக
உடலால் வரக்கூடிய நோய் தடை என்பது உடலாலும், மனதாலும் வரக்கூடிய
மிகப்பெரியத் தடையாக இருக்கின்றது.
உதாரணமாக
ரிஷிகளும் முனிவர்களும் கூட நதிக்கரையில் மிக அருகில் அமர்ந்து தியானம் செய்ய
மாட்டார்கள். சருகுகள் இருக்கும் பகுதியில் அமர மாட்டார்கள். ஏனெனில் அங்கு
ஏற்படும் அதிகமான சப்தங்கள் தியானம் செய்வதற்கு இடையூறாக இருக்கும்.
இவ்வாறு
இந்த மூன்று விதமான இடையூறுகள் இல்லாமல் இருந்தால் நாம் தியானம் செய்வதற்கு ஏதுவாக
இருக்கும்.
ஒளி
இல்லாத வாழ்க்கை என்பது முழுமை பெறாது. எனவேதான் பகவானுக்கு (சூரியனுக்கு) நாம்
முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.
நம்முடைய
உடல் முழுவதுமே ஒளியால் சூழப்பட்டிருக்கிறது. அதை நாம் வெளிக்கொண்டுவரவேண்டும்.
நம்மிடம்
உள்ள ஒளியை விளக்கு ஏற்றுவது போல ஏற்றினால் அந்தி என்று சொல்லப்படுகின்ற மாலை நேர
இருளானது நம்மை விட்டு விலகிவிடும்.
அந்தி
என்ற சொல்லுக்கு இறுதி என்ற பொருளும் உண்டு. அதை சாந்தம் என்றும் கூறுவார்கள்.
அதாவது,
அந்தி என்று சொல்லப்படும் வெளிச்சமற்ற தன்மையும் நம்மிடம்
இருக்கின்றது. அது போலவே அதைப் போக்கிக் கொள்ள கூடிய ஒளியும் நம்மிடமே
இருக்கின்றது.
இவை வித்தை மற்றும் அவித்தையினால்
வெளிப்படுகின்றது.
No comments:
Post a Comment