Sunday, June 28, 2020

தியானத்திற்கு தயாராவோம் .......இவ்வாறு ?


   தியானமும் பிரார்த்தனையும் 

(யோக ஆச்சாரியார் உபதேசங்களில் இருந்து )


   மனதை ஒருமுகப்படுத்துவது என்பது எளிதான செயல் அல்ல. சாதாரணமாக கோபம் கொள்ளும் போது மனம் கசந்து விடுகிறது. அப்போது மனதை ஒருமுகப்படுத்துவது என்பது இயலாத காரியமாகும். பல்வேறு முயற்சிகள் மற்றும் பயிற்சிகளுக்குப் பின்னர் தான் மனதை ஒருமுகப்படுத்த முடியும். 
 
ready to medidate
    தியானம் செய்யத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே மனதை ஒருமுகப்படுத்து முயற்சித்தால் அந்த முயற்சி தோல்வியில்தான் முடியும். மன ஒருமைப்பாடு என்பது படிப்படியாக மனதை ஒவ்வொரு எண்ணத்திற்கும்  உட்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும் 


     உதாரணமாக ஒரு மிகப்பெரிய பாடல்களை மனனம் செய்ய வேண்டுமென்றால் அதாவது மனப்பாடம் செய்ய வேண்டுமென்றால் இரண்டு இரண்டு வரிகளாக படித்து மனப்பாடம் செய்து கொண்டே வரும். இவ்வாறாக தொடர்ந்து அந்த பாடல் வரிகள் முழுவதையும் மனனம் செய்ய சில நாட்கள் ஆகும் அதே போன்றுதான் மன ஒருமைப்பாடு என்பது படிப்படியாக நிகழ்வதாகும்.

     ஆனால் ஒரு சிலரோ அதிக புத்தி உடையவர்களாக இருப்பார்கள் அவர்களை ஒரு மிகப்பெரிய பாடலைக் கூட ஒரே ஒரு முறை வாசித்தே மனனம் செய்து விடுவார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு கூட மனதை ஒருமுகப்படுத்துவது என்பது எளிதான செயல் இல்லை .

   ஆனால் யோகம் (தியானம்) என்பது சிறிது கூட கோபம் இல்லாமல் வாழ்க்கை முழுவதும் உணர்ந்தபின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்த பிறகு அதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நாம் தீர்மானித்த பிறகு அதில் சுவை கூடுகிறது என்ற அனுபவத்திற்கு  வந்தபிறகுதான் யோகம் கைகூடும். 

இதன் பின்புதான் தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவி செய்கின்றது.

     முதலில் நாம் சிறிது சிறிதாக எல்லைகளை வகுத்துக் கொண்டு மனதை உட்படுத்தவேண்டும் இவ்வாறு செய்து கொண்டே போனால் மனதை ஒருமுகப்படுத்துவது என்பது எது முதலில் மனதை ஒருங்கிணைக்க வேண்டும் பல்வேறு இடங்களில் பல்வேறு செயல்களில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் மனதை ஒன்றாக ஒருங்கிணைக்க வேண்டும்.

     மன உணர்வுகளை ஒருங்கிணைக்க வேண்டும் மன உணர்வுகள் பலவகையாக விரிந்து கிடக்கின்றன. அவற்றில் அகங்காரம், ஆணவம், பெருமை இவற்றை விடுத்து மீதி இருப்பவைகளை  ஒருங்கிணைக்க வேண்டும் புலன்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

 நம்முடைய உணர்வுகளில் புத்தி ஒன்றைச் சொல்லும்.
 சித்தம் ஒன்றைச் சொல்லும் . மனம் ஒன்றைச் சொல்லும் 

  இவற்றில் தேவையில்லாதவற்றை விடுத்து தேவையானவற்றை மட்டும் ஒருங்கிணைக்க வேண்டும் இவ்வாறு ஒருங்கிணைப்பதற்கு தியானம் உதவி செய்யும்.

   தியானம் செய்யத் துவங்கும் முன் அந்த தியானம் கைகூட வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனை இல்லாமல் எந்த ஒரு காரியமும் வெற்றியில் முடியாது .

         பிரார்த்தனை என்றால் இறைவனை வேண்டிக் கொள்வது ஆகும். இறைவா ! என்னை காப்பாற்றுங்கள் உங்களைத் தவிர வேறு எனக்கு வழி இல்லை என்னுடைய இந்த மானுடப் பிறவியில் இருக்கக்கூடிய கர்மங்களையும் நீக்கி கர்மங்களால் வரக்கூடிய உலகமயமான விஷயங்களை நீக்கி ஞானத்தை கைப்பற்றக் கூடிய வழிகளை நான் தேடுகின்ற போது ஒவ்வொன்றாக நீ எனக்கு அதை அளித்து  என்னை காப்பாற்றுங்கள் என்று வேண்டிக் கொள்வது தான் சிறந்த பிரார்த்தனை ஆகும்.. 

உணர்வுகளை ஒருங்கிணைப்பதற்கு  தியானம் அவசியம்
தியானம் செய்வதற்கு பிரார்த்தனை அவசியம் 

    பிரார்த்தனை செய்வதற்கு முன்பு நாம் செய்யப்போகும் செயலை எண்ணி ஒரு சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு அந்த சங்கல்பத்தின் உறுதியாக நிற்க வேண்டும் எக்காரணம் கொண்டும் சங்கல்பத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது .

    திடமனம் இருந்தால்தான் தியானம் கைகூடும். பிரார்த்தனைகளும் நிறைவேறும். தியானத்திற்கும் அதன் பயனான யோகத்திற்கும் அடிப்படையாக இருப்பது நம்முடைய உடலைப் பற்றிய தெளிவு அறிவு மற்றும் இந்த உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையே உள்ள சம்பந்தங்கள் மற்றும் உடலையும் உள்ளத்தையும் சரி செய்வதற்கான வழிமுறைகள் ஆகும். 
                                                                     
 (பின் குறிப்பு : மேற்கண்ட கட்டுரை  யோக ஆச்சாரியார் டி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் அட்டாங்க யோகத்தை மாணவர்களுக்கு போதித்த தொகுப்பில் இருந்து பதிவு செய்யப் பட்டது ஆகும். )

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment