யோகப் பயிற்சியினை புதிதாக
மேற்கொள்பவர்களுக்கு ஆரம்ப நிலையில் அதிகமான இடையூறுகள், தடைகள்,
பிரச்சனைகள் வருகின்றன. அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் பற்றிக்
காணலாம்.
தியானத்தின் வெற்றி என்பது தொடர்ந்து மேற்கொள்ளும் பயிற்சியில் அடங்கி
இருக்கின்றது. ஆனால், தியானம் செய்யும் அனைவருக்குமே
இடையூறுகள் இருக்கின்றன.
பிரம்மரிஷி விஸ்வாமித்திரரிலிருந்து ஒவ்வொரு முனிவர்களும்
ஒவ்வொரு விதமான தடைகளை கடந்து சென்று இருக்கிறார்கள். அவர்களுக்கே தடைகள் வந்தது
என்றால் நாம் எத்தனை தடைகளை கடந்தாக வேண்டும்.
அவர்களுக்கு வந்தத் தடைகள் எல்லாம்
இறைவனால் உருவாக்கப்பட்டக் காரண காரியங்களால் வந்தது.
ஆனால்,
நமக்கு ஏற்படும் தடைகள் நாமே ஏற்படுத்திக் கொள்வது. ஆகவே,இந்த தடைகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியுமென்றால் தான்
நம்மால் தியானத்தில் வெற்றி பெற முடியும்.
தேவர்களாக இருந்தாலும் சரி, அவதாரங்களாக இருந்தாலும் சரி, அனைவருமே யோகத்தினால்
தான் எழும்பி இருக்கிறார்கள்.
விண்ணவர்க்கும், மண்ணவர்க்கும்
யோகம் ஒன்று தான் நிலைத்தது. அதன் வழியல்லாமல் ஏனைய வழிகளில் இறைவனை அணுகுவது
அவ்வளவு எளிதல்ல.
ஏனெனில், மற்ற எல்லா
வழிகளும் ஏதேனும் ஓர் இடத்தில் முடிந்துவிடுகின்றது. யோகம் (தியானம் ) ஒன்று மட்டுமே முடிவற்ற
ஒன்றாகும். எல்லை அற்றதாக இருக்கின்றது.
அது நம்மை இறைவனுடன் ஐக்கியப்படுத்தி
கொள்வதற்காக நாம் செய்கின்ற முதல்பணி.
அடுத்தபடியாக
இறைவனுடன் கலப்பது, அதன்பின் நாமும் இறைவனும் ஒன்று என்கிற
நிலைக்கு வருவது, அதன் பின் அவனுடன் கலந்து விட்டதால் நாம்
யார் என்ற நிலையையே மறந்து விடுவது. அதன்பின் இறைவனாகவே மாறுகின்ற நிலை
இவையெல்லாம் யோகத்தை தவிர, வேறு எதனாலும் முடியாது.
யோகத்தில்
வெற்றி பெறுவதற்கு சில வழிமுறைகள் கூறப்படுகின்றன. அவற்றை மணி, மந்திரம்,
ஔஷதம் என்று கூறுவார்கள்.
மணி என்றால் ஏதாவது ஒரு பொருள். அந்தப்
பொருளானது கோள்களை அல்லது பிரபஞ்சத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். அதாவது யார் யார்
எந்த கோளில் பிறந்திருக்கிறார்களோ அதற்கு ஏற்றபடி அந்தக் கோளை சரிப்படுத்துவதற்காக, அந்தக்
கோளின் பிடியிலிருந்து அவர்கள் விலகுவதற்காக சித்தர்களால் ஒதுக்கப்பட்ட சில
முறைகள் தான் மணியாகும்.
மந்திரம் என்பது இறைவனை உணர்த்தக்கூடிய ஒலிகளை சுருக்கியோ
அல்லது விரித்தோ அல்லது பாடலாகவோ இந்த பீஜாட்சரங்களின் மூலம் ஞானத்தில் வெற்றி
பெறுவதாகும்
ஔஷதம் என்றால் மருந்து என்று பொருள்.
இந்த மூன்றுமே தியானத்தில் வருவதற்கான இடையூறுகளைக் களைவதற்கான வழிகள் என்று
கூறப்பட்டிருக்கின்றது.
தியானத்தின் போது இயல்பாக வரக்கூடிய தடைகள் என்று
பார்த்தால் முதலில் நோய்.
நோய் என்பது ஒரு பெரிய தடையாக இருக்கின்றது. நோய் என்பது
ஒருவன் பிறப்பிலிருந்தே அதாவது ஜீனில் இருந்தே வந்து விடுகின்றது. உடனிருந்தே
கொல்லும் வியாதி என்று சொல்வார்கள் .அதைத் தடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல,
ஆனாலும்
யோகத்தினால் அது முடியும்.யோகத்தில் வெற்றி கிடைக்கும் போது அது சாத்தியமாகிறது.
No comments:
Post a Comment