Friday, April 30, 2021

SSM கல்வி அறக்கட்டளையின் கட்டணமில்லா யோகப் பயிற்சி வகுப்புகள்

 கட்டணமில்லா யோகப் பயிற்சி வகுப்புகள்  பற்றிய விவரங்கள்

 

 

ஸ்வார்த்தம் சத் சங்க கல்வி அறக்கட்டளையின் சார்பாக ஒவ்வொரு மாதமும் நமது பயிற்சி மையத்தில் குறுகிய கால யோகம் +ஆசனம்  ( yoga classes ) இலவச பயிற்சி வகுப்புகள் நடை பெறுகின்றன ..

 

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் தேதி துவங்கி தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குள் 10 நாட்கள் தொடர் வகுப்புகள் நடைபெறும்.

 

 


 

குறைந்த அளவில் மாணவ மாணவியர்கள் மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்கப் பட்டு அவர்களுக்கு கீழ்க் கண்ட பயிற்சிகள் குருகுல முறைப் படி கற்றுத் தரப் படும்...

 

1)    சூரிய நமஸ்காரம்

2)    யோகாசனங்கள் – 50 வரை

3)    முத்திரைகள்

4)    பிராணயாமங்கள்

5)    தியான முறைகள்

 

விதிமுறைகள்  மற்றும் நிபந்தனைகள் (rules and regulations)

1)    பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கு முன்பாக தங்களுடைய சுய விவரத்துடன் – பயோ டேட்டாவுடன் பெற்றோர் (அல்லது ) கணவர் ( திருமணம் ஆனவர் என்றால் ) ன் அனுமதிக் கடிதம் பெற்று யோகா ஆசிரியரிடம் வழங்க வேண்டும்..

 

2)    பயிற்சி வகுப்பில் இணைபவர்கள் யோகா ஆசிரியர் கூறும் குரு வணக்க முறைகளை பயிற்சியின் ஒவ்வொரு வகுப்பிலும் பின்பற்ற வேண்டும்.

 

3)    பயிற்சியில் கலந்து கொள்ள வரும் முதல் நாள் யோகாவின் தந்தை சத்குரு ஸ்ரீ பதஞ்ஜலியை வணங்கும் விதமாக குருகுல முறைப் படி தக்ஷிணை வைத்து வணங்கி வகுப்பில் இணைய வேண்டும்.(தக்ஷிணை என்பது நான்கு மஞ்சள் வாழைப் பழம், தேங்காய், பூ மாலை, நல்லெண்ணெய் , ஊதுபத்தி மற்றும் குரு காணிக்கை  போன்றவையை தட்டில் வைத்து ஆசிரியரிடம் அளிப்பதாகும்)..

 

4)    பயிற்சிக்கு வருபவர்கள் தங்களுக்கு என்று யோகா மேட், டர்க்கி டவல் , தண்ணீர் பாட்டில்  போன்றவையை கொண்டு வர வேண்டும்.

 

5)    பயிற்சிக்கு வரும் மாணவர்கள் முதல் நாள் இரவு நன்றாக உறங்கி பயிற்சி அன்று காலை எந்த சோர்வும் இல்லாமல் இருக்க வேண்டும்..

 

6)    பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளக்கூடிய காலங்களில் அசைவ உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 

7)    ஏற்கனவே ஏதாவது நோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் அல்லது உடல் பலவீனம் அல்லது உடலில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை பயிற்சி வகுப்பிற்கு முன்பே ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.  அதற்கு தந்தார்போல ஆசிரியர் உங்களுக்கு பயிற்சி அளிப்பார் ..

 

8)    பத்து நாட்கள் தொடர் பயிற்சி வகுப்பில் இடையில் எந்த நாளும் முன்னறிவிப்பு இல்லாமல் விடுமுறை எடுக்கக் கூடாது.

 

9)    புகை மது பழக்கம் உள்ளவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளக்கூடிய காலங்களில் அவற்றை அறவே தவிர்க்க வேண்டும்..

 

10)  இது ஒரு குருகுலம் என்பதால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே எங்களுடைய யோகப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வது நல்லது..

 

11)  தொடர் பயிற்சி காலத்திற்கு பிறகும் பயிற்சியில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் மாணவர்கள் இடையில் சில நாட்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவார்கள்...

 

 

அனைவரும் யோகப் பயிற்சியில் தேர்ச்சி பெற்று அமைதி ஆரோக்கியம் ஆனந்தம் பெற்று வாழ வாழ்த்துக்கள் 

 

இப்படிக்கு

பொதுச்செயலாளர்

SSM YOGA EDUCATIONAL TRUST

 

 

 

 

 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment