வலையுலக வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள்,
ஒரு மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இறைவன் அருளும் குருவின் அருளும் என்றென்றும் நம்மை வழிநடத்தும்.
தனது குழந்தைகளுக்கு என்றென்றும் ஒரு அன்பான தந்தையாகவும், தனது சீடர்கள் மற்றும் மெய்யன்பர்களுக்கு யோக குருவாகவும் வழிகாட்டியாகவும் வாழ்ந்து தனது சீடர்களுக்கு அவர் தன்னுடைய உபதேசத்தில் என்ன கூறினாரோ அதன் படி அவர் தன்னுடைய ஜீவனை யோக நிலையில் தனது குழந்தைகள் முன்பாக இறைவனிடம் ஐக்கியப் படுத்தினார்.
அவர் இந்த பூவுலகில் ஜீவனாக பிறந்தது கார்த்திகை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் ............ அவர் இறைவனிடம் தன் ஜீவனை ஐக்கியப் படுத்திக் கொண்டதோ மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தில்..
அதன் வழியே நமக்கு தொடர்ந்து வரும் நம்மை என்றென்றும் வழிநடத்தும் சத்குருவின் ஜீவ நாடி அருளாணையின் படி ஒவ்வொரு மாத ரேவதி நட்சத்திரத்தன்றும் அவர் நேசித்த மற்றும் சுவாசித்த , அப்பியாசித்த சத்குரு ஸ்ரீ பதஞ்ஜலி மஹரிஷிக்கு சகல அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது. மேலும் 2020 முதல் ஒவ்வொரு மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் குரு பூஜை விழாவாக கொண்டாடப் படுகிறது.
அதன் படி ஜனவரி 10ல் பழங்காநத்தம் மற்றும்அரிட்டாபட்டிஅருள் சித்தர் இராமதேவ ஆன்ம பீடத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்புடன்குரு பூஜை விழா மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. அது தொடர்பான படங்களை கீழே பதிவிட்டுள்ளேன்.
No comments:
Post a Comment