Saturday, February 5, 2022

இயற்கையிலும் இயல்பிலும் இறைவனை நேசி (TSK)

  குருவின் உபதேசங்கள் 

                

   இயற்கை தான் இறைவன் .இறைவன் தான் இயற்கை .ஆகவே இயற்கை சக்திகளுடைய முழு ஞானத்தை பெறுவதன் மூலமாக தான் நாம் இறைவனை அடைய முடியும்....

பிராணன்

 

 

   இயற்கையோடு இயந்த அதாவது ஒன்றிய வாழ்க்கையை மனிதன் வாழ வேண்டும். இயற்கைக்கும் மனிதனுக்கும் இயல்பாகவே பல பொருட்கள் இருப்பதாக ஆன்மீகம் கூறுகின்றது. 

 

பகலுக்கும் பிராணனுக்கும் இடையே  பொருத்தம் இருக்கிறது 

இரவுக்கும் அபானனுக்கும் இடையே ஒரு பொருத்தம் இருக்கிறது 

கண்ணுக்கும் சூரியனுக்கும் இடையே ஒரு பொருத்தம் இருக்கிறது .

 

    அது போல வாக்கிற்கும் , புத்திக்கும்  இடையே பொருத்தம் இருக்கிறது . ஒற்றுமை இருக்கிறது. இந்த உறவு அல்லது பொருத்தங்களை எல்லாம் புரிந்து கொண்டால் இந்த பூதவுடலையும் உலகத்தையும் புரிந்துகொண்டதாகிவிடும் .

 

     இயற்கையின்  ஒற்றுமை வேற்றுமைகளை புரிந்து கொண்டால் நம்மை நாமே உணர முடியும். அதன் மூலம் இறைவனையும் அறியமுடியும் இயற்கையை முழுமையாகப் புரிந்து கொள்பவன் தான் இறைவனின் அபிமானி ஆகின்றான் .

   அந்த அபிமானம் தான் ஆன்மீகத்தின் அடிப்படையாக இருக்கிறது . அதுதான் சரியான வித்தையாகும். இதைத்  தெரிந்து கொண்டால் அவித்தை ஒருபோதும் நம்மை அண்டாது . இதை யோகத்தின் மூலம் பார்க்கும்போது மன ஒருமைப்பாடு அவசியமாகிறது .

    ஒருவன் முதலில் தன்னைப் பற்றிய கவுரவம் அகௌரவம்  இரண்டையும் நீக்க வேண்டும். இந்த இரண்டையும் நீக்கிவிட்டால் எதையும் சாதிக்கவல்ல ஆற்றல் உருவாகும். மிகப்பெரிய செல்வந்தன், கல்வியறிவாளன் பலராலும் போற்றப்படக்  கூடியவன்  கூட பல சந்தர்ப்பங்களில் அவற்றையெல்லாம் வெளிக்காட்டாமல் மிகச் சாதாரணமானவன் போலவே வாழ்கின்றான் .

  நான் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் கூட பல சமயங்களில் அவர்களுடைய குறைகளை மறந்து வாழ்கின்றார்கள். கௌரவம் பார்ப்பவர்களால் அவித்தையிலிருந்து வெளிவர முடியாது .

 

     எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய மன நிலையை சமநிலையில் வைத்து வைத்திருப்பவர்களால் ஆன்மீகத்தில் பல விஷயங்களை சாதிக்க முடியும் . அந்த ஆற்றல்கள் அவர்களுக்கு மட்டுமே வரும் ஏனெனில் அவர்கள் தற்பெருமை தன் உயர்வு பற்றி சிந்திகாதவர்கள் .

 

       கௌரவம் என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்வது ஆகும்  எனவே நாமாக முன்வந்தால் மட்டுமே அதிலிருந்து வெளிவர முடியும் அவ்வாறு வெளி வராத வரையில் பண்பாடும் வராது .ஆன்மீக ஈடுபாடும் வராது.

    கவுரவம் அதாவது தனக்குத்தானே அமைத்துக் கொண்ட பட்டங்களை ஒருவன் முதலில் தூக்கி எறியவேண்டும் கௌரவம் பார்ப்பதில் ஒருவன் தன்னுடைய 90 சதவிகித ஆற்றலை வீணடித்து கொள்கின்றான்.

        அன்புதான் அடிப்படை கல்வி  பண்புதான் பட்டய படிப்பு. அமைதியான வாழ்க்கை அமையப் பெற்றவன் இறைவனிடம் பட்டயப் படிப்பு சான்றிதழ் பெற்றவனாகின்றான். வற்றாத சாதனை கூற்றுகளை கொண்டவனாக அவன் வாழ்கின்றான். சரித்திர நாயகனாக அவன் மாறுகின்றான் .

ஆகவே அவன் என்றும் வாழ்வான் .....

 இறந்தும் வாழ்வான்...

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment