தனது நோக்கம் தனது விருப்பம் தனது இலக்கு தனது எதிர்காலம் இவற்றையெல்லாம் குறித்து ஒரு மனிதனுக்கு எதிர்மறை சிந்தனைகள் அதிகமாகும் போதும்...
அவற்றின் மீது அவன் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு என்பது கை கூடாத போதும்...
அவன் இறைவன் மீது வைத்திருக்கக் கூடிய பக்தி பேருணர்வு என்பது சிறிது ஆட்டம் கண்டு விடுகிறது...
அதன் அடிப்படை காரணம் என்னவென்றால் இறைவனை வணங்கினால் இன்பங்கள் கிடைக்கும் என்று அவனுக்கு வழிகாட்டப்பட்ட விதம் அவ்வாறு உள்ளது...
ஆனால் அடைய வேண்டிய இன்பங்களுள் எல்லாம் மேலான இன்பம் இறைவன்...
அவனை அடைந்த பிறகு அதற்கு மேலாக இங்கு ஒன்றும் இல்லை...
இந்த உலகை ஒரு கருவியாக பயன்படுத்தி இந்த பிறவியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இறைவனை அறிய வேண்டும் அடைய வேண்டும் என்று அவனுக்கு போதிக்கப்படவில்லை...
அதிகபட்சம் கடவுள் என்பதே அவன் விரும்பியதை நிறைவேற்றுவதற்கும் அவனது உடைமைகளுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு ஆக உள்ள ஒருவர் என்று அவன் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான்...
மனித சமுதாயத்தின் பெரும்பாலான நோக்கு இவ்வாறு இருப்பதற்கு காரணம்....என்னவென்றால் அவர்களுக்கு வழிகாட்டியவர்கள் அவ்வாறே இருந்திருக்கிறார்கள்
சிலர் ஆன்ம சாதகர்களிடம் கேட்பார்கள் *நீங்கள் பல காலம் சத்குருவை வணங்குகிறீர்களே* ????
அவர் ஏன் உங்களை பொருளாதார நிலையில் மற்றும் சில விஷயங்களில் இன்னும் மிகப்பெரிய முன்னேற்றத்தை உங்களுக்கு தரவில்லையே என்று அறியாமையால் வினா எழுப்புவார்கள்...
முன்னோர்களின் ஆசியினாலும் சித்தர்களின் கருணையினாலும் குருமார்களின் அளப்பரிய அன்பினாலும் இந்த பிறவியில் சத்குருவை அடைந்தது என்பது அவரது திருவடியை பின்பற்றி ஆத்ம ஞானம் அடைவதற்கு தானே தவிர...
போக விஷயங்களில் உச்சத்தை தொடுவதற்கு அல்ல என்பதை சித்தர்கள் ரிஷிகள் குருமார்களின் வழி வரக்கூடிய மாணவர்கள் அறிவார்கள் ..
தன்னுடைய குருவின் கருணை எப்படிப்பட்டது? அது எவ்வாறெல்லாம் தனக்கு அனுக்கிரகம் செய்கிறது என்பதை எல்லாம் ஒரு சீடன் நன்றாகவே அறிவான்...
இந்த உலகமே கடவுள் தன்மைக்கு எதிராக திரண்டாலும் அந்த ஆத்ம சாதகனுக்கு கிடைத்த அனுபவத்தால் அவனால் ஒருபோதும் குருகாட்டிய வழிக்கு எதிராக செல்ல முடியாது...
ஆக சாதாரண மனிதனின் பார்வையில் கடவுள் தன்மை என்பது செல்வங்களை சேகரிப்பதற்கும் அவனுக்கு உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு தருவதற்குமான ஒரு பாதுகாப்பான வழி நபர் என்ற அளவிலேயே இருக்கும்...
ஆனால் ஆத்ம ஞானத்தை நாடி பிறந்திருக்கின்றவனோ தன்னுடைய சரியான வயதில் தனக்கு கிடைத்திருக்கின்ற அந்த குருவின் அனுகிரகத்தை வாழ்க்கையில் எவ்வளவு புயல்களை எதிர்கொண்டாலும் குருவின் கருணையால் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு இன்பங்களை கடந்து ஆத்ம ஞானம் என்ற பரமானந்தத்தை ஒருநாள் நிச்சயமாக அடைவான் .....
மாறி மாறி வருகின்ற கடல் அலைகள் போல வருகின்ற இன்பமும் துன்பமும் இந்த வாழ்வின் நிலையாமையை அவனுக்கு சுட்டி காட்டிக் கொண்டே இருக்கும்..
பிரபஞ்சம் எப்போதும் அவனைத் தாய்மை உணர்வோடு அணுகி அவனது ஆத்ம ஞானப் பாதையில் அவனுக்கு வழிகாட்டியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவனுக்கு உண்மையான தேவை எதுவாக இருக்கின்றதோ அவற்றையெல்லாம் அது நிறைவேற்றி வைக்கும்...
இந்த உண்மையை புரியாதவர்கள் குரு கருணை குரு அருள் என்பதையெல்லாம் போக விஷயங்களோடு இணைத்து பார்க்க கூடாது ...
எல்லாம் வல்ல சத்குருவின் அருள் எல்லா காலத்திலும் முன் நின்று வழி நடத்துவதோடு மட்டுமல்ல உலக நலன்களை ஒட்டி எடுக்க கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் அது வெற்றி பெற அனுக்கிரகம் செய்வதாகவே இருக்கும் என்பதெல்லாம் குருநாதர் வழியே பெற்ற பாடங்களில் சில...
ஆக எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்த்து தன்னை ஆன்ம வழியில் புகுத்திக் கொள்கின்ற அளவிற்கு இடைவிடாத முயற்சியையும் வைராக்கியத்தையும் மனதுக்கு ஊக்கத்தையும் தருகின்ற குருவின் புகழ் எப்போதும் ஓங்க வேண்டும்...
ஆக சாஸ்திரங்களை அணுகி ……..
குருவை அணுகி ……….
ஆன்ம சாதகர்களை அணுகி………….
ஆன்மீகத்திற்கான இலக்கணத்தை தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர.....
அழியும் உடல் பொருள் இன்பத்தோடு ஆத்ம ஞானத்தை ஒருபோதும் ஒப்பிட்டு பார்த்து எடை போடக்கூடாது ...
குரு அருள் என்பது இவற்றிற்கெல்லாம் மேலான உண்மை...
அதை சிரத்தையோடு அணுகி அறிந்து கொள்ள வேண்டும்...
குரு வாழ்க குருவே துணை
No comments:
Post a Comment