Thursday, October 17, 2024

பௌர்ணமி குருபூஜையும் ரேவதி நட்சத்திரமும் (16/10/2024)

                     


       சத்குருவை ஆராதனை செய்யும் பௌர்ணமி குரு பூஜையும்
   நமது குருநாதர் யோக‌ ஆச்சாரியார் டிஎஸ் கிருஷ்ணன் அவர்களுடைய ஜெயந்தி நட்சத்திரமான ரேவதி நட்சத்திர தினமும் ஒன்று கூடிய அந்த அற்புத வேளையில் நடைபெற்ற குருபூஜை நிகழ்வுகளை இங்கு எடுத்துரைப்பது சத்குருவின் பேரன்பு..........

                      

                                                 

           
     ஒருபுறம் துரிதமாக சாந்தாபிஷேகம் காசி விசாலாட்சி அம்பாளுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில்

    பரவாயில்லை எவ்வளவு நேரமானாலும் பொறுமையாக காத்திருந்து சத்குருவுக்கான நமது பூஜையை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற சிவாச்சாரியாரின் நோக்கத்தோடு நமது எண்ணமும் சேர்ந்து கொள்ள...


      ஒரு உயர்ந்த நோக்கத்திற்கான தனது விரதத்தை பூர்த்தி செய்யும் விதமாக அண்ணன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பாலாபிஷேகம் என்பது சத்குருவின் திருமேனியை எழிலுற செய்தது என்றால் மிகையல்ல
💞
                                                
108 தீப பிரார்த்தனை


        சிவசிவ மந்திர கோஷங்களோடு திட உள்ளமும் உறுதியும் சத்குருவின் மீதும் பேரன்பு உடையோர் மட்டுமே நிறைந்த அந்த சபை என்பது
ஒரு நாளில் ஆச்சாரியார் நம்மை அங்கு அழைத்து அமர வைத்து ஆனந்தம் கொள்ள செய்தது போன்ற உணர்வைத் தந்தது என்றால் மிகையல்ல...


   ஒரு காலடியை முன்னே எடுத்து வை ...பல அடிகள் நான் முன்னே வருவேன் என்று அவர் கூறுவது போல நேற்றைய நிகழ்வு அமைந்தது...


    ஒருவேளை பங்குனி மூலம் தான் வந்துவிட்டதோ அல்லது மார்கழி ரேவதி தான் நடந்து கொண்டிருக்கிறதோ என்று நாம் எண்ணுகிற அளவுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது குருபூஜை
💞


        உண்மையில் அங்கே நமது குருநாதரின் ஆன்மா சபை முழுவதும் நிறைந்து இந்த பூஜையை கண்டு களித்தது போன்ற ஒரு தோற்றத்தை உணர்வினை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை
🙏🏽




     அனைவரோடு அன்பர் கூடி என்ற நாடியில் உள்ள வாக்கியத்தை பறைசாற்றும் விதமாக

பக்தி அங்கே அமர வைத்தது


யோகம் என்பது அங்கே அமர்ந்திருந்தது 

 

தொண்டு என்ற எண்ணம் 

அங்கிருந்துதான் நமக்கு உதித்தது

ஞானம் என்பதை பேசவும் எழுதவும் அனுபவிக்கவும் 

மென்மேலும் வளர்த்துக் கொள்ளவும் 

 

தாய் போல் இருந்து அன்பு செய்த அந்த திருத்தலம் தான் சர்வமுமாக
எப்போதும் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் வகையில்



      அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை
மட்டுமே  உள்ளம்  சுமந்து கொண்டிருந்தது என்பது மிகையல்ல ...........


       வளாகம் முழுவதும் பரவிய மகிழ்வுக்கு பாடுபட்ட அனைவருக்கும் சத்சங்க அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்


   அனைவருக்கும் சத்குருவின் திருவருள் உரித்தாகட்டும் ........

 
(குருவருள் பெருகட்டும் )

 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment