அனைவருக்கும் ஆன்ம வணக்கங்கள்
21-1-2019
&
21-1-2024
அடியேனின் பார்வையில் இந்த நாள் ஒரு திருப்பங்களை தர வந்த திருநாள் என்று நினைக்கிறேன்...
காரணம் இரண்டு முக்கியமான விஷயங்கள் கடந்த ஆண்டுகளில் இந்த திருநாளில் அரங்கேறி இருக்கிறது...
நமது குருநாதரின் திருக்கரங்களால் நமது சபை அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் பதஞ்சலி மகரிஷியின் சிறிய சுதை வடிவம் அளிக்கப்பட்டிருந்தது...
இறுதியாக அவரது இல்லத்தில் பல காலம் வைத்திருந்த தற்போது இந்த படத்தில் நாம் காணக்கூடிய அய்யாவின் சிறிய திருவுருவை அப்போது எல்லீஸ் நகரில் இருந்த நமது பயிற்சி மையத்திற்காக குருநாதர் யோக ஆச்சாரியார் அவர்கள் வழங்கினார்கள்..
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது அது 2019 ஆம் ஆண்டு தைப்பூசம் ஆங்கில தேதி படி அது ஜனவரி 21, அன்று பௌர்ணமியும் கூட ....
நம்முடைய யோக தத்துவத்தின் படி ஆன்மா தான் அனைத்தும் காணப்படும் இயற்கை அனைத்துமே பிரகிருதி என்று நாம் அழைக்கின்றோம்...
ஆக ஆன்மா நமக்குள்ளும் வெளியிலும் இருந்தாலும் அதாவது படைப்பின் நீட்சியாக மனித வடிவில் நாம் இருக்கிறோம் என்பதை உண்மை...
ஆக வெட்ட வெளியாக ஜோதியாக மட்டுமே இறைவனை நாம் தியானம் செய்து ஆன்ம முன்னேற்றம் அடைய முடியும் என்றாலும் அடிப்படையில் உருவ வழிபாடு என்பது எல்லா விதமான தவங்களுக்கும் ஆரம்ப கட்டமாகவும் வழிகாட்டுதலாகவும் இருந்திருக்கிறது...
பதஞ்சலி யோகமே அனைத்தும்….. அதன் வழியே தியானம் பிராணாயாமம், சத்சங்கம் ஆத்மவிசாரம் என்று ஒரு தீவிரப்படுத்திக் கொண்டிருந்த வேளையில்..
திருக்கோவிலில் நடைபெறக்கூடிய பூஜைகள் மட்டுமே நாம் பக்தி ரீதியான செயல்பாட்டில் கலந்து கொள்வது என்பது சத்சங்க உறுப்பினர்களின் அடிப்படையாக இருந்தது மற்றும் வழக்கமாக இருந்தது என்று கூறலாம்.
ஆனால் புதிதாக வரக்கூடிய ஆரம்ப அடிப்படை சாதகர்களுக்கு இந்த ஆன்மா கோட்பாடு அதாவது மெய்யியல் கோட்பாடு என்பது அதை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு புரிதலுக்கு கடினமாக இருக்கும் என்ற வழியில் எல்லோருக்கும் பொதுவாக எல்லோரையும் வழிநடத்த சத்குரு திருவுருவாக நமது சபைக்கு வர திருவுள்ளம் கொண்டார் போலும்...
சரியாக நமது குருநாதர் இறைவனடி சேர்ந்து இன்றைக்கும் நமக்கு சூட்சமமாக நம்மை வழி நடத்துகின்ற இந்த காலகட்டத்தில் 2023 ஆம் ஆண்டு இறுதியில் ஜீவ நாடி நூல் ஆசான் . கணபதி ஐயா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இப்போதைய நமது சபை அலுவலகத்தில் சத்குருவை ஐம்பொன் வடிவில் பிரதிஷ்டை செய்வதென்று ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது...
இதற்கான முழு முயற்சிகளையும் முன்நின்று செய்தவர் அன்பு சகோதரர் சிவஞானம்... அவர் மட்டுமல்லாமல் இன்னும் பல அன்பர்களும் இதற்கு முக்கிய பணியாற்றி இருக்கிறார்கள்...
அந்த அடிப்படையில் நமது சபையில் பிராண பிரதிஷ்டை செய்வதற்கு ஜனவரி 21 (தை மாதம் )ரோகிணி நட்சத்திரத்தை நாம் தேர்வு செய்திருந்தோம்...
அதன்படியே வேதியர்களுடைய வழிகாட்டுதலின்படி சத்குருவின் ஐம்பொன் திருமேனி நமது சபையில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது அன்றைய நாளில் அன்னதானம் மற்றும் வேள்வி தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன...
ஆங்கில தேதி இப்படி இன்றையோடு ஒரு வருடத்தை முழுமையாக கடந்திருக்கின்றோம்...
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளைக்கு பூஜைக்கு பொறுப்பேற்று அந்த வழிபாடுகள் செய்வது என்று முன்கூட்டியே செய்யப்பட்ட தீர்மானத்தின்படி இன்றளவும் அது சீராகவும் சிறப்பாகவும் நடந்து கொண்டிருக்கிறது என்றால்......
அன்பர்களுடைய முழு ஒத்துழைப்பும் அவர்களை வழிநடத்தும் நமது குருநாதரும், நமது சத்குருவும் தான் முக்கிய காரணம் என்பது என்று வேறு ஒன்றும் இல்லை...
ஆக கமலக்கண்ணன் அவர்கள் நமது குருநாதரிடம் இருந்து சுதை வடிவ பதஞ்சலியை பெற்றதும் இதே ஜனவரி 21 2019 ஆம் ஆண்டு ஆண்டில் தான்...
ஆக சிதம்பரத்திலிருந்து நமது பிரார்த்தனைக்கு இறங்கி நடராஜப் பெருமானின் பாதங்களை தரிசனம் செய்து நமது சபைக்கு வந்த சத்குருவின் ஐம்பொன் வடிவை நான் பிரதிஷ்டை செய்ததும் இந்த ஜனவரி 21 (வருடம் 2024) தான்...
இவையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்படவில்லை என்றாலும் இந்த நாளில் இவ்வாறு நடைபெற வேண்டும் என்பது சத்குருவின் திருவுள்ளமாக இருந்திருக்கிறது....
முன்பொரு கட்டுரையில் சொன்னது போல ஒரு இயக்கத்திற்கு எண்ணிக்கையில் அதிகப்படியான உறுப்பினர்கள் தேவை என்பது அத்தியாவசியம் இல்லை மாறாக அர்ப்பணிப்பு உள்ள சிலர் கூறும் அந்த இயக்கத்தை மக்களுடையதாகவும் மெய்யென்பர்களுடையதாகவும் வழி நடத்துவதற்கு சிலருடைய அர்பணிப்பே போதுமானதாக இருக்கும் என்பது அடியனின் தாழ்மையான கருத்து...
அந்த வகையில் இந்த இயக்கத்திற்காக பணியாற்றியவர்களையும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களையும் இனி பணியாற்ற இருப்பவர்களையும் அவர்களோடு நாம் இணைந்து கொண்டு சத்குருவின் பிள்ளைகளாக பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மிகுந்த ஒத்துழைப்போடும் ஆதரவோடும் என்றென்றும் செயலாற்ற கடமைப்பட்டிருக்கிறோம்...
முன்பே சொன்னது போல நமது மீட்பர் என்பவர் சத்குருதான் அவர் நம்மை அனைத்து துயரங்களிலிருந்து மீட்டு ஆன்மாவினை அடையும் அந்த ஒளிப் பாதையில் நம்மை சிறப்புடன் செய்வார் என்பது நம்முடைய ஆழமான நம்பிக்கை...
அந்த நம்பிக்கையில் வரும் காலங்களை எதிர்கொள்வோம் நம்மோடு சத்குரு உடன் இருப்பார்.. ஏனென்றால் நம்மை முழுவதுமாக ஆட்கொண்டு இயக்குபவர் அவராக அன்றி வேறு யாராக இருக்க முடியும்...
ஓம் சத்குருவே சரணம்
No comments:
Post a Comment