ஆம் எப்போதும் காரணமான ஆதியை
அறிவதிலே அனுபவிப்பதிலே தனது சிந்தையை பல்வேறு பிறவிகள் அதிலேயே செலுத்தி பிறகு
அதிலே வெற்றியும் அடைந்து ஒரு குருவாக
மாறிய பின் ...................
இந்த கட்டுரையை நான்
சிந்திக்கும்போதும் எழுதும் போதும் என் மனதில் கவலை,
மகிழ்ச்சி, வேகம், கோபம் என நவரசங்கள்
அனைத்தும் ஒருங்கே கலந்த ஒரு குறுகுறுப்பு தென்படுகிறது என்பதை நான் உணர்கிறேன்... ஏனென்றால் காலம் காலமாக நாமும் குருநாதரும்
பேசிக் கொண்டிருந்த இந்த சித்தத்தை பற்றிய விஷயங்கள் என்பது இப்போதும் புதிதாக
இருக்கின்றது என்பதுதான்...
சத்குருவை ஆராதனை செய்யும் பௌர்ணமி
குரு பூஜையும்நமது குருநாதர் யோக ஆச்சாரியார் டிஎஸ் கிருஷ்ணன் அவர்களுடைய
ஜெயந்தி நட்சத்திரமான ரேவதி நட்சத்திர தினமும் ஒன்று கூடிய அந்த அற்புத வேளையில் நடைபெற்ற
குருபூஜை நிகழ்வுகளை இங்கு எடுத்துரைப்பது சத்குருவின் பேரன்பு..........