Thursday, August 20, 2009

சித்தர்களின் உத்தி

காரணம்- காரியம் 

 
  காரிய வித்தை என்பது உடம்பை எடுத்த ஆன்மாவின் நிலையாகும். 
 
 காரிய கேவலம்: மனமானது ஐம்புல நுகர்ச்சியினை நீக்கி இளைப்பாறும் நிலை

. காரிய சகலம் : - ஐம்புல நுகர்ச்சியினை மனம் துய்க்கும் நிலை       
   
  காரிய சுத்தம் அல்லது காரிய சித்தி: உடம்பை எடுத்த ஆன்மா ஒடுக்கமும் , தொழிலும் இன்றி இறைவன் திருவடியினை நினைத்துச் செல்லும் நிலை. உடம்பு = பருப்பொருள் உள்ளம்=நுண்பொருள் உயிர் = அதி நுண்பொருள்

 சித்தர்களின் உத்திகள் ஆறு :
 
  1) உயிரின் - உடலின் தன்மைகளையும் இயல்புகளையும் அனுபவ மொழிகளின் மூலம் உருவாக உத்தி மூலமும் எடுத்து சொல்வது.
 
 2) வரைமுறைகளைச் சொல்லி கதைகளைச் சொல்லி அதன் உருவக தத்துவங்களைப் பூட்டை திறப்பது போல் திறந்து காட்டுவது. பரம்பொருளின் பேராற்றல், அதனோடு அண்டமும் ,பிண்டமும் எப்படி இணைந்திருக்கின்றன என்றும், இயற்கை இயல்புகளை இறையுணர்வு கலந்து விளக்கும் உத்தி. 
 
              3) மனம், உயிர் - பற்றி விளக்கி 
மனிதம் - விலங்கு வேறுபாடுகள் கூறி, உள்ளத்துக்குள்ளே நிகழ்த்த வேண்டிய தவ ஒழுக்கங்களை பற்பல யோக விளக்கங்கள் மூலம் கூறும் உத்தி.  
 
 
நான்காவது உத்தி:  
 
மந்திரங்களைப் பற்றியது. மந்திரங்களுக்குரிய சொற்களும், ஒலிகளும் , பற்றி எத்தனையோ நூறாண்டுகளில் பயின்றுபயின்று சித்தர்கள் கண்டுபிடித்த ரகசியங்களாகும் .
 
மந்திரங்களை எப்படி யந்திரங்களில் அடைப்பது என்ற உத்தி ஒலி மாறுபாடுகளால் மனித மனத்திற்கு எப்படி நன்மை , தீமைகள் மற்றும் சொற்கள் மூலம் ஒலிகளை இயக்கி தியான முறைகளைக் கூறி மனித மனத்தை உயர்த்தி மன ஆற்றல்களை உயிர்பிப்பது. 
 
 
 ஐந்தாவது உத்தி
 
  சரியை ----------------- தொண்டு நெறி, தாச மார்க்கம்.
 
கிரியை----------------- மகன் தந்தையினை வழிபடுவது சத்புத்திர மார்க்கம். 
 
யோகம் ----------------சக மார்க்கம் தோழமை (யோகம்) ----- இறைவனை நண்பனாக கருதுதல் 
 
ஞானம் - இம்மூன்றையும் கடந்த பேரின்பச் செவ்வழி .  
 
 
ஆறாவது உத்தி.  
 
 ஆன்ம நிலை சித்தர்களின் ரகசியம் (பெரிய ரகஸ்யம்) அன்மாக்களுடைய பரிபக்குவ நிலைக்கு ஏற்ப (ஜீவாத்மா) இறைவனே ஆசிரியனாக வந்து அவரவர்களுக்கு ஏற்ப அருள் செய்கிறான்.
 
 
 சித்தர் பாடல்  
 
பேத கன்மத்தால் வந்த பிரார்த்த நா நா ஆகும்
ஆதலால் விவகாரங்கள் அவர் அவர்க்கு ஆன ஆகும் 
மா தவம் செயினும் செய்வர் வாணிபம் செயினும் செய்வர் 
பூ தலம் புரப்பர் ஐயம் புகுந்து உண்பர் சீவன் முத்தர்
 
 
சீவன் முத்தர் சீவன் முத்தரே அவரவர்க்கு விதிக்கப்பட்ட தொழில்களைச் செய்வர். “மூன்று “வினைப்பயன்கள் ஞானிகளுக்கே எவ்வாறு தீருகின்றன.? 
 
 
 சஞ்சிதம் = முற்பிறவிகள் பலவற்றில் செய்த வினைகளில் இன்னும் பயனளிக்காமல் எஞ்சி நிற்கின்ற கருமச்சுமை  
 
பிராரத்தம்= இந்த பிறவிக்கு என்று பங்கீடு செய்யப்ப்பட்ட வினை  
 
 
ஆகாமியம்= இந்தப் பிறவியில் செய்து அடுத்த பிறவிக்கு என்று சேர்கின்ற நிலை. சித்தர்களின் ஞானத்தீ (கனலால்) சஞ்சிதம் முழுவதும் எரிந்து சஞ்சிதம் சாம்பலாகி விடுகிறது. 
 
 
  ஆகாமியம்- வினைகள் ஞானியை ஒட்டுவதில்லை. அவனைத் தொடுவதே இல்லை.
 
 ஏனெனில் அவன் தாமரை இலையில் தண்ணீர் போல எதிலும் தோயாமல் இருக்கின்றான். 
 
 
 பிராரத்தம் = வினை மூன்று வகையால் நசிக்கின்றது. என ஞானிகள் கூறுகின்றனர். 1) மூடர்களின் வாயிலாக (ஞானிகளை சந்திக்கும்போது )ஒரு பங்கு அவர்களிடம் போகிறது. 2) அறிவாளிகள் ஞானியை வணங்கும்போது ஒரு பங்கு அவர்களுடைய அறம் ஞானியைச்சாருகின்றது. 
 
 
3) உடலில் அனுபவிக்கும்போது ஒரு பங்கு தீருகின்றது.
 
 இவ்விதம் வினைப்பயன் மட்டுமே தீருமேயன்றி ஜீவாத்மாவை பீடித்துள்ள ஆணவமும் ,கன்மமும் , மாயையும் - சற்குருவின் ஸ்பரிசம் பட்டபோதே தீரும் . 
 
 பரிசன வேதி பரிசித்ததெல்லாம் 
வரிசை பொன் வகையாகு மாப் போல் 
குரு பரிசித்த குவலயமெல்லாம் 
திரிமலம் தீர்ந்து சிவகதியாமே ! -
 
                                                           “திருமூலர் பெருமான்”

1 comment:

TRANSLATE

Click to go to top
Click to comment