Thursday, September 10, 2009

கேட்டு மகிழுங்கள்

சில வருடங்களுக்கு முன்னர் சத்குரு பதஞ்சலி மகரிஷி அவர்கள் பற்றிய பக்தி பாடல்களை ஆடியோ பதிவு செய்து வெளியிட்டிருந்தோம்.

சிறு முன்னுரைக்காக பிரபல விளம்பர மற்றும் செய்தி வாசிப்பாளர்
திருமதி நிர்மலா பெரியசாமி அவர்களை அழைத்திருந்தோம்.

அவரின் முன்னுரையுடன் பத்து பாடல்களை கொண்ட ஆடியோ தொகுப்பை வெளியிட கேந்திரத்தால் திட்டமிடப்பட்டிருந்தது.

பதஞ்சலி மகரிஷி வரலாறு பற்றி அறிந்த உடன் மெய்சிலிர்த்த
திருமதி நிர்மலா பெரியசாமி கேந்திரத்தின் இந்த முயற்சியினை பாராட்டியதுடன் மட்டுமில்லாமல் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து அவர் தந்த முன்னுரைக்கு நாங்கள் அளித்த சன்மானத்தையும் மறுத்து மிகுந்த திருப்தியுடன் சென்றார்.


அவரை மெய்சிலிர்க்க வைத்த சத்குருவின் சிறிய வரலாற்றினை பதிவுலக நண்பர்களாகிய நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

வீடியோ  பதிவை இங்கே பதிவிட்டுள்ளோம் . உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்.
 

பிராணாயாமம் பற்றிய அடுத்த பதிவு விரைவில் வெளி வரும்.

2 comments:

  1. ஐயா! தரவிறக்கம் செய்ய நீங்கள் கொடுத்துள்ள சுட்டி வேலை செய்யவில்லை. தயவு செய்து சரி பார்க்கவும். நன்றி.

    ReplyDelete
  2. ஐயா! தரவிறக்கம் செய்ய நீங்கள் கொடுத்துள்ள சுட்டி வேலை செய்யவில்லை. தயவு செய்து சரி பார்க்கவும். நன்றி.

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment