Thursday, June 24, 2010

நாம் வாழும் வீட்டின் வரலாறு

 பூமியின்  வரலாறு 

இன்று நாம் வசிக்கும்  இந்த உலகம் ஒரு காலத்தில் இப்பொழுது இருப்பதைப் போல இருந்ததில்லை.   
                                                            
பதஞ்சலி, சித்தர்கள் ,
                                                                
அப்பொழுது அண்டவெளி எங்கும் ஒரே இருள்.  ஒரே அமைதி . 

ஆதியில் அணுவுக்கு அணுவாய் இருக்கும் பரமாணுக்களான 
எலக்ட்ரான் , புரோட்டான், நீயூட்ரான்   போன்றவைகள் 
அண்டவெளியில் செயலற்ற நிலையில் இருந்தன.  
அப்பொழுது அண்டவெளி முழுவதும் ஊடுருவி இருந்த மகாசக்தியானது  
( conversation of  energy ) தான்  இயக்கும் சக்தியாக மாறி  ( potential force )  
அண்டவெளி முழுதும் பரவியிருந்த பரமாணுக்களை  இயங்கும் சக்தியாக
  ( kinetic force ) மாற்றி செயல்பட வைத்தது.


எப்படி காந்தமானது இரும்பு துகள்கள் பக்கம் வரும்பொழுது அவைகள் சலனமுற்று நகரத் தொடங்குவது போல.



            அதனால் பரமாணுக்கள் அசைந்து ஒன்றுடன் ஒன்று சேர்ந்து 
ஒரு அணு (atom ) என்பது உருவாயிற்று. இப்படி பலவிதங்களில் 
பலவிதமான அணுக்கள் அண்டவெளியில்  உண்டாகி அசைந்து
நகரத் தொடங்கின.  பலகோடி அணுக்கள் ஒன்று சேர்ந்து கண்ணுக்குப் புலப்படாத தூசிகளாகவும், துகள்களாகவும்  அண்டவெளியில் உண்டாயிற்று. 


                   இப்படி உண்டான அணுக்கள் தன்னைத் தானே 
சுற்றிக் கொண்டிருக்கும் பிற பொருட்களை தன்பால் ஈர்க்கும் 
சக்தியினைக் கொண்டதாகவும் இருந்தன. 

இந்த அண்டத் துகள்கள்  தன் ஈர்ப்பு சக்தியால் பல ஒன்றாகி மிகப் பிரம்மாண்டமான உருவம் கொள்ள ஆரம்பித்தது. 


இப்படி கோடானு கோடி பொருட்கள் அண்டவெளியில் உருவானது . அவைகளில் மிகப் பெரிய பிரம்மாண்டமான இரண்டு பொருட்கள் ஒன்றுடன் ஒன்று அண்டவெளியில் மோது வெடித்துச் சிதறியது. 
அந்த வினாடியில் அண்டவெளியில் மிகவும் சக்தி வாய்ந்த வெப்பம்  ( Heat ) கொண்ட ஒளியும்  ( light ) மற்றும் பேராற்றல் கொண்ட ஒலியும் (sound ) உண்டாயிற்று.  

இந்த நிகழ்வினை  மகா வெடிப்பு  ( Big bang theory ) என்று விஞ்ஞானம் கூறியது. 

                   இப்படி வெடித்து சிதறிய பாகங்கள், மையப் பகுதியில் இருந்த பிரகாசமான ஒளியினைச் சுற்றி வர ஆரம்பித்தன.  
இந்த பிரகாசமான ஒளியினையும், அதீதமான வெப்பத்தையும் கொண்ட மையப் பகுதி சூரியன் என்றாயிற்று.  இந்த சூரியன் என்பது வாயுக்களால் ஆன ஒரு  நட்சத்திரமாகும்.
                                       
   சூரியன் மிகவும் பிரம்மாண்டமான உருவம் கொண்டது. அதாவது  பூமியைப் போல 10 லட்சம் பூமிகளை இந்த சூரியனில் பொருத்தலாம்.  

சூரியன் அதன் மைய அச்சில் சுழல்கிறது. 

ஒரு சூரிய சுழற்சி முடிவடைய 22 ஆண்டுகளாகும். பூமியின் புவி ஈர்ப்பு சக்தியினை விட சூரியனின் ஈர்ப்பு சக்தி 28 மடங்கு அதிகமாகும். 
அதனால் மற்ற கோள்கள் தன்னை விட்டு விலகிப் போகாமல் வைத்துக் கொண்டது.
                                                                        

                    ...........  (நம் வீட்டைப் பற்றி இன்னும் பார்க்கலாம்)

4 comments:

  1. இப்படி உண்டான அணுக்கள் தன்னைத் தானே
    சுற்றிக் கொண்டிருக்கும் பிற பொருட்களை தன்பால் ஈர்க்கும்
    சக்தியினைக் கொண்டதாகவும் இருந்தன.

    இந்த அண்டத் துகள்கள் தன் ஈர்ப்பு சக்தியால் பல ஒன்றாகி மிகப் பிரம்மாண்டமான உருவம் கொள்ள ஆரம்பித்தது. on that time due to vibration, soundenergy arised. so sound is a first phenomenon from this universe. that vibration effect is nothing but omm.(oongaram)athuva nataraja natanam.

    ReplyDelete
  2. ஆம், அவ்வாறே இருக்கலாம். பிறிதொரு கட்டுரையில் இதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

    ReplyDelete
  3. Wow, this paragraph is good, my younger sister is analyzing these things,
    so I am going to inform her.

    ReplyDelete
  4. Heya i am for the first time here. I came across this board and I in finding It really helpful & it helped me out a lot.
    I'm hoping to offer one thing back and aid others such as
    you helped me.

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment