நம்முடைய சூரியக் குடும்பத்தில் ஒன்பது கோள்கள் உண்டாகின .
மகா வெடிப்பின் போது சிதறிய மிகச் சிறிய பொருட்கள் எல்லாம்
விண் கற்களாக மாறி அண்டவெளியில் சுற்றி வர ஆரம்பித்தன.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் புதன், வெள்ளி என்ற இரண்டு கோள்களும், பூமிக்கு வெளிப் புறத்தில் செவ்வாய்,வியாழன், சனி, யுரேனஸ் , நெப்டியூன் , ப்ளூட்டோ என்ற கோள்களும் உண்டாயின.
வெள்ளியும், யுரேனசும், தவிர மற்ற கோள்கள் எல்லாம் இடமிருந்து வலமாக நீள்வட்டப் பாதையில் தன்னைதானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிவர ஆரம்பித்தன.
சனி, சனி, யுரேனஸ் , நெப்டியூன் ,ஆகிய கோள்கள் வெறும் வாயுக்களால் ஆனவைகள் ஆகும். புதனும், வெள்ளியும் சூரியனுக்கு வெகு அருகில் உள்ளதால் அவை கொந்தளிப்பான கோள்கள் ஆகும்.
வியாழனின் மையப் பகுதி மட்டும் சிறிது கெட்டியானது .ஒவ்வொரு கோளுக்கும் என்று ஒரு காந்த மண்டலம் உள்ளது. இந்த காந்த மண்டலத்துடன் மின்சார மண்டலமும் உள்ளது.
இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு செயல்களை இந்த மின்காந்த சக்தியால் தான் நடத்தப்படுகின்றன . ஈதர் (Ether ) என்ற அண்டவெளி எங்கும் வியாபித்துள்ள பொருளின் அடித்தளத்தில் இருந்து தான் அதனை ஆற்றல்களும் செயல்படுகின்றன.
பூமி உண்டான பொழுதே சந்திரனும், பூமியிலிருந்து 3 .84 லட்சம் கி.மீ தூரத்தில் உண்டாயிற்று. அது தனிக் கோளாக உருவாக முடியாத நிலையில் அதன் நிறைக்கும், பரிமாணத்திற்கும் ஏற்ப பூமியினைச் சுற்றி வரும் உபகிரகமாக சந்திரன் உருவாயிற்று . இது தன் அச்சில் தன்னைத்தானே , அதே சமயம் பூமியின் சுற்றுப் பாதையில் , பூமியுடன் சேர்ந்து அதே வேகத்தில் பயணம் செய்கிறது.
பூமியின் துணைக்கோளான சந்திரன் சூரிய ஒளியினை பூமிக்கு பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடி போன்றது தான்.
பூமியானது தான் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது.
பூமியின் சுழற்சி (speed ) வேகத்தின் காரணமாக பூமியனாது சுருங்கி அதன்மேல் பாகம் சிறிது கடின தன்மையினை அடைய துவங்கியது . அதனால் பூமியானது கமலா ஆரஞ்சுப் பழத்தைப் போல மேலும் கீழும் சிறிது தட்டையான உருண்டை வடிவம் அடைய ஆரம்பித்தது. இப்படி அமைந்த பூமியின் மேல்பகுதி ( North Pole ) என்றும் கீழ் பகுதி தென்பகுதி ( South Pole ) என்றும் உண்டாயிற்று. இப்படி இரண்டு துருவங்கள் உண்டானதால் பூமியானது ஒரு காந்த மண்டலம் என்று ஆகியது.
அப்போது பூமியின் மீது இருந்த அதீதமான வெப்பத்தின் காரணமாக பூமியில் இருந்த வாயு அணுக்கள் எல்லாம் ஆவி ரூபமாக மேலே சென்றது. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்ட சுழற்சியின் வேகம் (Speed ) காரணமாக பூமியினைச் சுற்றி அடர்த்தியாக இருந்த கரியமில வாயும் ( carbon dioxid ) மற்றும் அண்டவெளியில் இருந்த மற்ற பல வாயுக்களும் சேர்ந்து காற்று மண்டலம் என்பது பூமிக்கு மேல் 10 கி . மீ உயரம் வரை உண்டாயிற்று. பூமி சுழல்வதால் , (Earth Gravity ) காற்று மண்டலமானது பூமியினை விட்டு விலகிப் போகாமல் பூமியைச் சுற்றி படர்ந்தன.
No comments:
Post a Comment