Tuesday, August 17, 2010

நலம் வாழ உடலை ஆராதிப்போம் - பகுதி 4


 உடலியலில் ஆசனங்கள் 

ஏனைய உடற்பயிற்சிகளில் எல்லாம்  சிறந்தவையாக  உடலாசனங்கள்  என்ற  யோகாசன  முறையினைப் பற்றி நாம் விரிவாக விளக்க இருக்கிறோம். அதே சமயம் உடலாசன முறைகள் இன்று எண்ணிலடங்கா ஆசன வகைகளை கொண்டதாக பெருகி வருவது ஆராயப் பட வேண்டிய விஷயமாகும். இயல்பாக மனித ஆரோக்கிய வாழ்க்கைக்கு  ஆண்களானாலும், பெண்களானாலும் அமர்ந்து  , எழுந்து , நடந்து , கிடந்து, ஓடி , ஆடி, எந்த வித விஞ்ஞான கருவிகளையோ , வாகனங்களையோ உபயோகிக்க அவசியம் இன்றி இருக்க முடியுமானால், மனிதன் அல்லாத ஏனைய  உயிரிகளைப் போல நாமும் நலமுடன் வாழ்ந்திட முடியும். 

இந்த நவீன காலத்தில்  எவரும் அவ்வாறு வாழ்ந்திட இயலாத போது , உடலாசனம் ஒன்றே ( யோகாசனம்) போன்ற மனித உயிர்களுக்கு நீண்ட வாழ்நாளையும், நோயில்லா உடலையும் தரும் அரும் சஞ்சீவியாகும் .

தற்காலத்திய பல நூறு ஆசனங்களில் இருந்து தேவையற்ற ஆசனங்களை  நீக்கி ஆசன முறைகளை வரிசைப் படுத்தி உடல்வாகுக்கு ஏற்ற ஆசனங்களை தேர்வு செய்தும் 
எதிராசனம் போன்ற தவறான பழங் கொள்கைகளை தவிர்க்கும் மனித உடல் அமைப்புகளை  ஓரளவு விளக்கியும்  வர இருக்கின்ற இந்த கட்டுரைத் தொடர் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை மட்டுமின்றி  ஆசன யோக விஞ்ஞானத்தை நம் முன்னோர்கள் (ரிஷிகள்)  கூறியபடி வழி வழியாக வந்த குருமார்கள் உபதேச முறைப்படி அனுபவ பாடமாக இருக்கும் என்பதை தெளிவுப் படுத்துகிறோம். 

வாசகர்கள் மற்றும் இதனை கண்ணுறும் பலரது விமர்சனங்களையும் , தொடர்புகளையும் வரவேற்பதோடு  அவைகள் எங்களை மேலும், ஊக்கப் படுத்துகின்ற நிலையில் இருக்கும் என்றும் நம்புகிறோம்.


மனித உடல் உறுப்புகளை 9  மண்டலங்களாக பிரிக்கலாம். 

  1. உடல் மண்டலம்
  2. மூச்சு மண்டலம் 
  3. இரத்த மண்டலம் 
  4. சீரண மண்டலம்
  5. எலும்பு மண்டலம்
  6. நரம்பு மண்டலம்
  7. தசை மண்டலம் 
  8. கழிவு மண்டலம்
  9. நாளமில்லா சுரப்பி மண்டலம் ( Endocrine ) 


மேற்குறித்த 9 மண்டலங்களும் சரியான தொகுக்கப் பட்ட சீரான ஆசனங்களால் 
கட்டுப் படுத்தப்படுவதோடு  அவைகளுடைய வளர்ச்சியினையும், செயல்பாடுகளையும் மனித  ஆயுட்காலம் வரை அவற்றின்  சோர்வில்லாத இயக்கத்தையும் உடலாசனங்கள் வழங்கக் கூடும். 


மனித உடலுக்கு  ஆதாரமாகவும் , அஸ்திவாரமாகவும், இருப்பவை  எலும்புகளே 


உடலில் உள்ள எல்லா எலும்புகளும் அதனை இணைக்கும் மூட்டுகளும் சேர்ந்ததே எலும்பு மண்டலம் . 


உடலுக்கு ஒரு ஒழுங்கான வடிவமைப்பிற்கு  காரணமாகவும் தன் சீரான செயல்பாட்டிற்கு  துணை புரிபவையும்  எலும்புகளே. உடலில் உள்ள 7  தாதுக்களிலும் மிகக் கெட்டியானதாகவும் , பலம் உடையதாக இருப்பவை எலும்புகளே. 

மூளை  


முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்ட மற்றும் அவ்வப் போது உருவாகும் தீர்மானங்களை செயல்பட வைப்பதற்கும் , ஒவ்வொரு அணு செயல்படுகாளையும் தன் கட்டுபாட்டில் வைத்து பராமரித்து வருவதோடு , உயிர் இயக்கம் (தன்னிச்சை செயல்பாடு, அனிச்சை செயல்பாடு) என இருவகை  கேந்திர செயல்பாட்டின் செயலக மையமாக விளங்கி வருவதற்கும் யாவற்றிற்கும் மேலாக அறிவு , புத்தி , சித்தம், என்ற  மன தளத்தின் அதிபதியாக நுட்ப செயல்பாடுகளின் அதிக பட்ச தலைமையமாக விளங்கிடும் மூளை என்ற மிக நேர்த்தியான உறுப்பினை பாதுகாக்கும் பெட்டகமாக விளங்குவது எழும்பினால் ஆன மண்டை ஓடே ஆகும் . (தலைஎலும்புகள் 8 )


இதயம்  


இதயம் இயங்க துவங்கியது முதல் இறக்கும் வரை ஓய்வெடுக்காது இயங்கி வரும் உறுப்பாகவும், யோக வீட்டின் முக்கிய கதவுகளான  பிராணாயாம கொலுவறையில் ஆதிக்கம் செலுத்தும் பிராண காற்று என்ற அரசன் ஆட்சி புரியும் நுரையீரலையும், காக்கும் , பாதுகாப்பு அறை மார்புக்கூடு என்பதும் எலும்பினால் வேயப்பட்டது ஆகும். 

மேலும் பல்வேறு எலும்புகளின் வரிசை  


  1. முள்ளெலும்பு ( மேல்தாடை எலும்பு - மார்புக் கூடு எலும்பு )
  2. குருத் தெலும்பு ( கீழ்த் தாடை எலும்பு  -பற்கள்) எனும் முத்துக்களைப் பதிக்கும் இடம் )
  3. வளைய எலும்பு ( முக எலும்புகள் - 14 )

நடுக்காது எலும்புகள்  ( 3  வகை)

  1. சுத்தி 
  2. பட்டடை 
  3. அங்கவடி 

கை எலும்புகள் - 14 
விரல் எலும்புகள்
மணிக் கட்டு எலும்புகள் 
ரேடியல் அல்னா என்ற முன்கை எலும்புகள் 
கழுத்துப் பட்டை எலும்புகள் 

தொடை எலும்புகள் 
தொடை எலும்புகள் உடலில் உள்ள எலும்புகளில் மிகப் பெரியவையாகும் 

தண்டுவட  எலும்புகள்  33 

பொதுவாக சிறு குழந்தைகளுக்கு உடலில் இருக்கும் எலும்புகள் 350  . வயது ஏற ஏற குறிப்பிட்ட  சில எலும்புகளோடு  இணைந்த  விடுவதால்  எலும்புகளின் எண்ணிக்கை 206  ஆகக் குறைந்து விடுகிறது.

இடுப்பெலும்பு 

மிகப் பெரிய மற்றும் முக்கியமான எலும்புகளுள் ஒன்றாக இடுப்பெலும்பு ஆகும். இவ்வெலும்பின் அமைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சில வித்தியாசங்களை  கொண்டதாகும். 

எலும்பு மூட்டுக்களின் வகைகள் 

  1. பந்துக் கிண்ண மூட்டுகள்
  2. கீழ் மூட்டு 
  3. வழுக்கு மூட்டு
  4. செக்கு மூட்டு

மேலும் அசையாத எலும்புகள் தலையிலும் இடுப்பிலும் உள்ளது. பொதுவாக மூட்டுக்கள்  அசையும் மூட்டு, அசையா மூட்டு  என்று இருவகைப் படுகிறது. பற்களும் ஒரு வகை எலும்புகளே.

அவை 3  வகைப் படும் 

  1. வெட்டும் பற்கள் 4 
  2. குத்தும் பற்கள் 2 
  3. கடவாய்ப் பற்கள்  10 
இவ்வாறு மேல் தாடையில்  16 ம் , கீழ்த் தாடையில் 16 ம்  உள்ளன.

எலும்புகளின் மற்றொரு சிறப்பு -
இரத்தம், எலும்புகளில்  இருந்து  உற்பத்தியாகின்றன.  அதிக இரத்தம் உற்பத்தியாகும் எலும்புகள்.

முதுகுத் தண்டு
இடுப்பெலும்பு 
விலா எலும்பு
மார்பெலும்பு 

இன்னும் எலும்புகளின் கதைகள் நிறையவே உள்ளது.  இந்த எலும்புகள்  நம் உடலாசனத்தால்   ( யோகாசனம் ) பயனடைகிறதா, பாதிப்ப்டைகிறதா  என்பதை பல்வேறு விஷயங்கள் மூலம்   தொடர்ந்து பார்ப்போம். 

(தொடரும்)































1 comment:

  1. immense work.its very usefull to all generation of our people.
    thanks sir.
    love & grace

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment