சூரிய நமஸ்காரம் (செய்முறை )
முதல் நிலை
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு உடல் அளவு நீளத்துணியினை தரையில்
விரித்துக் கொள்ளவும் .குறைந்த பட்ச நீளம் இரண்டடியும் அதிகபட்சம்
மூன்றடியும் குறைந்த பட்ச அகலம் ஒன்றரை அடி முதல் அதிகபட்சம்
இரண்டடியும் கொண்ட பருத்தியாலான துணியோ அல்லது தரையோடு
தரையாக பதிக்கப்பட்ட காட்டு மரப்பலகைகளையோ அல்லது கருங்கல்
பலகையையோ அல்லது அரச மர உதிர்ந்த சமமாக பரப்பட்ட இலைச்
சருகுகளின் மேலோ செய்யலாம்.
அமர்ந்து குரு தியானம் , சிறிதளவு நாடி சுத்தி செய்த பின் மெதுவாக
எழுந்து . இரண்டு பாதங்களை உள்வசம் ஒட்டியவாறு நிமிர்ந்து நிற்க
வேண்டும் . முழங்கால்களை சேர்த்து வைக்க வேண்டும்
கைகளை பக்கவாட்டில் தொங்க விட்டபடி பின் இரண்டு கைகளையும்
முன்னுக்கு வீசிய படி கைகளை மடித்து நெஞ்சுக்கு நேராக கைகளை
குவித்து வணங்கியபடி சூரிய தேவனைப்பார்த்து 5 முதல் 7 வினாடிகள்
உற்று நோக்கி பின் கண்களை மூடிக்கொண்டு சூரிய தேவனை மனதில்
கீழ்க்கண்டவாறு தியானிக்க வேண்டும்.
உலகம் முழுவதும் அனைத்து உயிர்களும் நலமோடும். வளமோடும்
நோயற்ற நிலையிலும் அன்புடனும் பொறுமையுடனும் வாழ வேண்டும்
என்றும் இதற்கு அருள் புரியும்படி சூரிய தேவனை பிரார்த்தனை செய்து
கொள்ள வேண்டும்.
இரண்டாம் நிலை
கூப்பிய கரங்களை கீழிறக்கி. அப்படியே நீட்டியபடி பக்கவாட்டில் தலைக்கு
மேலே உயர்த்தியபடி . இடுப்பை சற்று பின்புறமாக வளைத்து நிற்கவும்.
மூன்றாம் நிலை
உயர்த்திய கைகளை மடிக்காமல் அப்படியே முன்புறம் கீழிறக்கவும்.
சிறிது சிறிதாக முழங்கால்களை மடிக்காமல் நின்றபடி
தலை. மார்பு. வயிறு என உறுப்புகளில் முழுவதும் தரையினை நோக்கி
வளைக்கவும். முகத்தை முழங்கால்களை தொட்டவாறு
இரு உள்ளங்கை விரல்களை விரித்தபடி பக்கவாட்டில் தரையில் பதிக்க
வேண்டும்.
நான்காம் நிலை
மேற்கண்ட நிலையில் இருந்த படி வலது காலை பின்பக்கம் இழுத்து
வலது முழங்கால்சிறிது தரையில் படும்படியும், இடது கால் மடித்த படி
இடது முழங்காலை முன்னோக்கிய படி நகர்த்த வேண்டும்.
கைகளை மூன்றாம் நிலையில் உள்ளபடி தரையில் பதித்தவாறு இருக்க
வேண்டும்.
ஐந்தாம் நிலை
இடது காலை பின்னோக்கிய படி நகர்த்தி வலது காலின் அருகே சேர்த்து
வைக்கவும். இரண்டு கால்களின் கட்டை விரல்களையும்
முழங்கால்களையும் ஒன்று சேர்த்த நிலையில் இரண்டு பாதங்களையும்
தரையில் பதித்தவாறு வைக்க வேண்டும். பின் தலையினை குனிந்த படி
இடுப்பை வளைத்து உடலை மேல் உயர்த்தவும்.
ஆறாம் நிலை
மேல் உள்ள நிலையில் இருந்து குனிந்து கவிழ்ந்திருந்த தலையினை
மெதுவாக உயர்த்தி வளைத்திருந்த இடுப்பு பகுதியினை கீழே தாழ்த்தி
முழங்கால் வயிறு, நெஞ்சு , தலை, நெற்றி முதலிய உறுப்புகளை
குப்புறப்படுத்தபடி பிறப்புறுப்பு மட்டும் தரையில் படாதவாறு
சூரியனை படுத்த நிலையில் நமஸ்கரிப்பது (வணங்குவது) ஆகும்.
இதை சாஷ்டாங்க நமஸ்காரம் என வடமொழியில் கூறுவார்கள்.
அதாவது 8 அங்கங்களால் மனம் , உடல் பணிந்து வணங்குவது ஆகும்.
இரண்டு கால் கட்டை விரல்கள் .இரு முழங்கால்கள் மார்பு, நெற்றி.
இவைகள் தரையில் படும்படியாக படுத்திருக்கும் நிலை. இரண்டு புஜங்கள்
பக்கவாட்டில் சரிந்து , ஒவ்வொன்றாக தரையில் படும்படியாகவும். இரண்டு
கன்னங்களையும் ஒவ்வொன்றாக தரையில் படும்படியாகவும்.
இரு கைகளை கூப்பியபடி முன்புறம் தலைக்கு நேர் நீட்டி வணங்குவது
மார்பு. இரண்டு கண்களை பாவனையாக உருவங்களை சரித்து தரையில்
படும்படி வணங்குவதும் ஒரு முறையாகும்.
சூரிய நமஸ்காரம் நின்றும் கிடந்தும் சூரியனை வணங்குவதே
அடிப்படையாக கொண்டதாகும்.
7 ஆம் நிலை
ஆறாம் நிலையில் கைகளை பதித்திருந்தபடி கால்கள் தரையில் இருந்தபடி
கீழ் வயிற்றுப்பகுதியினை தரையில் பதித்தபடி மார்பையும் தலையையும்
உயர்த்துவது.
8 ஆம் நிலை
மேற்படி 7 ஆம் நிலையில் இருந்து 5 ஆம் நிலையில்
இருந்ததைப் போல மாறுவது
இருந்ததைப் போல மாறுவது
9 ஆம் நிலை
ஏற்கனவே 4 ஆம் நிலையில் இருந்தபடி மாறுவது
10௦ ஆம் நிலை
3 ஆம் நிலையில் இருந்ததைப் போல மாறுவது
3 ஆம் நிலையில் இருந்ததைப் போல மாறுவது
11 ஆம் நிலை
இரண்டாம் நிலையில் இருந்ததைப் போல மாறுவது
12 ஆம் நிலை
முதல் நிலைக்கு மாறுவது
சூரியனுக்கு 12 முக்கிய திருநாமங்கள் உண்டு. அவற்றின்
அடிப்படையாகவே சூரியநமஸ்காரம் 12 நிலையில் இருப்பதென
கூறப்படுகிறது.
சூரியனின் 12 திருப்பெயர்கள்
- சூரியன்
- ரவி
- பாஸ்கரன்
- ஆதித்யன்
- அருணண்
- கர்ப்பன்
- மருட்சயன்
- அர்க்கன்
- சரித்திரன்
- மித்ரன்
- சிவன்
- பூசன்
சூரிய நமஸ்காரங்களில் கையாளப்படும் பன்னிரெண்டு நிலைக்கும்
மற்றும் நமஸ்காரங்களுக்கும் 12 முக்கிய ஸ்லோகங்கள் உள்ளன.
இவைகள் ஆதித்ய ஹ்ருதயம் என்ற மந்திர தொகுப்பில் உள்ளது.
அவைகள் வரும் பதிவில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment