Monday, November 1, 2010

நலம் வாழ உடலை ஆராதிப்போம் -பகுதி 5

 எலும்புகள் அசைவுத் தன்மை    மற்றும்    அமைப்பு 

 பதிப்பாளர் உரை

நீண்ட இடைவெளிக்குப் பின் பதிவுலக ஆன்மீக உறவுகளை சந்திப்பது மனதை மகிழ்ச்சி அடையச் செய்கிறது 

யோக அறிவியலை புரிந்துகொள்ள உடலாண்மை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உடலாண்மையை புரிந்து கொள்ளும்போது யோக அறிவியலை கற்றல் என்பது மேலும் சிறப்படைகிறது.

 இப்போது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் எந்த அளவுக்கு வளைக்க , நிமிர்த்த , அசைக்க , சுழற்ற முடியும் என்பதை சிறிது  விளக்கத்துடன் பார்ப்போம். 

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானமாகிறது 
முதலில் தலையினைப் பற்றி பார்ப்போம்


யோக ஆசிரியர் உரை 


                                                                    தலை  
                                                                         

முன் அசைவு தன்மை 
வளைத்தல் என்பது 90  பாகை (டிகிரி) மட்டுமே 

பின் அசைவுத்தன்மை 
வளைத்தல் என்பது 45  பாகை (டிகிரி) மட்டுமே 

பக்கவாட்டு அசைவு

    
மையத்திலிருந்து தோள்பட்டை வரை - இடது பக்க அசைவு சுமார் 45  பாகை (டிகிரி) மற்றும்
மையத்திலிருந்து தோள்பட்டை வரை - வலது  பக்க அசைவு சுமார் 45  பாகை (டிகிரி) மட்டுமே. 

முன்பின் பக்கவாட்டு அரைவட்ட மற்றும் அதற்கு மேல் (வளைத்தல் ) பாகை

வலது பக்கம் இருந்து  சற்று இடது பக்கம் வரை சுமார் 180 பாகை

                                                                                   

நிமிர்ந்த நிலையில் தலை மார்பை நோக்கி வளைக்கப் படும்போது சுமார் 45  பாகை 
                          
முதுகை நோக்கி பின்புறம் தலை வளைக்கப் படும்போது சுமார் 45 பாகை. 
முயற்சித்தால் அதிகபட்சம்   இயல்பு நிலைக்கு மேல் அதிக பட்சம் 10 பாகை கூட்டிக் கொள்ளலாம்.

தலை நிமிர்ந்த நிலையில் இருந்து பக்கவாட்டில் சுமார் 45  பாகை மட்டுமே வளைக்க முடியும்



                                                                      தாடை
  • மேல் தாடை 
  • கீழ் தாடை 
                                                                                 
இருப்பு நிலையில் இருந்து கீழாக  ( சாதரணமாக திறந்த நிலையில் 40 பாகை ) மேல் தாடையில் இணைக்கப்பட்டிருக்கிறது .

 கீழ் தாடையில் அதிகபட்ச இணைப்பு சுமார் 40 பாகை. ஆனால் இதனுடைய அதிக பட்சத்தை மீறுகின்றபோது சில சமயம் மேல் தாடையில் இருந்து கீழ் தாடை இணைப்பில் விலகி விடும்  

பக்கவாட்டு அசைவு


மையத்தில் இருந்து பக்கவாட்டு அசைவு இடது பக்கம் சுமார் 10 பாகை
மையத்தில் இருந்து பக்கவாட்டு அசைவு வலது  பக்கம் சுமார் 10 பாகை

கழுத்து

மார்பிற்கும் , தலைக்கும் நடுவே இணைப்பு பகுதியாக விளங்குவது கழுத்து ஆகும்.
(முகுளம் - மல்லிகை மொக்கு (மீதுள்ள) ன் கீழ் முடிவெலும்பு.
தலையினை இணைக்கும் பகுதியில் தலை இணைப்பு பகுதியில் இருந்து கீழாக
1 முதல் 5 வரை தண்டுவட எலும்பினைக் கொண்டதாகும்.


முன்பகுதியில் உள்ளில் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் , பல முக்கிய ரத்தக் குழாய்கள், உணர்வு நரம்புகள், இரண்டு முக்கியமான
( தைராய்டு  சுரப்பிகள் மற்றும் கண்ட முடிச்சு என்ற தாடைக்கும் சற்று கீழே உள்ள இந்த முடிச்சை சங்கு என்றும் கூறுவார்கள். 

இதில் நேர்ப்பின்புறம் (குரல் வளை) குரல் நாண்கள் அமைந்த பேசுவதற்கு அடிப்படையிலான ஒரு கருவியும், உணவு மற்றும் மூச்சுக் குழாய் இரண்டும் ஒரே சமயத்தில் செயல்படாதவாறு தடுக்கப் படும்  ஒரு அடைப்பனைக் கொண்டதாகவும் உள்ளது.


வாய்வழியே உணவு செல்கின்ற போது உணவுக்குழாயினை அடையும் சமயம் மட்டுமே மூச்சுக்குழாய்க்கு வந்து செல்லும் மூச்சுக் காற்று வந்தடையாதவாறு தடுக்கப்படும்.
மற்ற நேரங்களில் உணவுக் குழாய் தொண்டை வழி அடைந்தே இருக்கும்.


இந்த வித பல விஷேச அமைப்புகளை கொண்ட இந்த கழுத்து உடல்பாகங்களில்  குறிப்பிடப்படும் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும்.


இந்த கழுத்துப்பாகம்  முன்னும் பின்னும் , பக்கவாட்டிலும் , தலையின் அசைவுகளுக்கு ஏற்ப செயல்படும் உறுப்பாகும்.

முதுகெலும்பு



இந்த பகுதி தலை, கழுத்து , மார்பு, வயிறு , இடுப்பு பகுதி வரை இணைத்து நீண்டு செல்லும் எலும்புத் தொடராகும். பிராணிகளை ( உயிர்களை ) முதுகெலும்பு பிராணி என்றும் முது கெலும்பற்றவைகள் என்றும் முக்கிய இரு வகையாக பிரிப்பார்கள் . மனித முதுகெலும்பு கீழிருந்து மேலாக செங்குத்தாக அமையப் பெற்ற விஷேச மனித நெடிய உருவத்தை கொடுப்பதாகும்.

முதுகெலும்பின் தொகுதி 33 தனிதனி எலும்புகள் வெட்டுத் தோற்றத்தில் பட்டுப்பூசியினைப் போல வடிவம் உள்ள தாகவும் , ஒவ்வொரு இணைப்பின் இடையிலும் அவைகளின் அசைவின்போது ஒன்றிற்கு உராய்வு ஏற்படாதவாறு இருக்க ஒருவித சவ்வுப் பகுதியில் நெகிழ்வுதன்மையினை  கொண்டதாக அமைந்துள்ளது.


சற்று நீள் வட்டத் துளை உடைய ஒவ்வொரு எலும்பின் தொடர்குழாயினுள் மிக கவனமாக பாதுகாக்கப் பட்ட நரம்புக் கற்றைகள் ஒருவகைத் திரவத்தில் முழ்கியுள்ள நிலையில் பயணிக்கின்றன.


உச்சி முதல் கால் வரை உடல் உறுப்புகள் அத்தனையும் செயல் படுகின்ற கட்டளை உணர்வுக் கடத்திகளையும் , தன்னிச்சை மற்றும் அனிச்சை செயல்பாடுகளை நிகழ்த்தும் உணர்வு நரம்புகளையும் , மூளை என்ற தலைமைக் கேந்திரத்தின் அகவிடமாகவும் அமைந்தது ஆகும்.

உடலுறுப்புகளை  இணைப்பது  மட்டுமின்றி  உடலுக்கு ஒரு வலுவான பகுதியாகவுமுள்ள முக்கிய தொகுப்பெலும்புகளாகும். 

இம் முதுகெலும்பை (தண்டுவடம் ) தன் இயல்பினின்று மாற்று வழியில் வளைத்தலோ , நிறுத்தலோ , அடைத்தலோ கடும் விளைவுகளை ஏற்படுத்துவதோடு மரணம் கூட நிகழும் விகிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தி  விடும். 


சில சமயங்களில் முதுகந்தண்டின் இயல்பை மீறிய சிறு அசைவுகள் கூட தொடர்ந்து நிகழ்த்தப் பெறுமானால் ஒரு மன நோயாளியாகவும், நன் நினைவு கடந்த விபரீத செயல்களை செய்யும் நிலைக்குத் தள்ளிவிடும் 

(மனித மன நிலை மீறும் செயல்கள் ) மற்றும் உடல் வாகு மாற்றம், உயிர்நிலை மாற்றம் , குழந்தைப் பேறு தடை கண்டுபிடிக்க முடியாத பல்வேறு நோய்களை (உடல் ரீதியாக, மன ரீதியாக ) அடைய நேரும். 

எனவே மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரம்  ஆசன நெறிகளில் முதுகெலும்பு  சம்பந்தப்பட்ட ஆய்வுகள் குறித்து கவனம் கொண்டு ஆசனங்களை தேர்வு செய்கிறது.


பதிவுக்கொரு காயத்ரி மந்திரம் 

ரிஷிகளின் ஜீவ நாடி நூல்களில் இருந்து சேகரிக்கப் பட்ட  
காயத்ரி மந்திரங்கள் அனைத்தையும் பதிவுக்கு ஒன்றாக வெளியிட தீர்மானித்திருக்கிறோம்.

இன்றைய பதிவிற்கான காயத்ரி மந்திரம்
கணபதி காயத்ரி மந்திரம் 

                                                                                                     
                                                       ஓம் தத் புருஷாய வித்மஹே

                                                      வக்ர துண்டாய தீமஹி

                                                       தந்நோ தந்தி ப்ரசோதயாத் 

                                                                                                                             (தொடரும்)



No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment