யோகாசனம் செய்வோம் - 3 (உஷ்ட்ராசனம்)
பதிவுலக ஆன்மீக உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்.
இன்றைய நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் மாசு கலந்து விட்ட நிலையில் நம் உடலை, மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது முக்கியமான விஷயம் ஆகும்.
எனவே இந்த நவீன யுகத்தில் உடல், மன சீர் கேடுகளை களைய ஆங்கில மருத்துவர்களாலும் யோகா பெரிய அளவில் பரிந்துரைக்கப் படுவது வரவேற்கக்கூடிய ஒன்று.
ஆசனப் பயிற்சி என்ற உடற்பயிற்சியினை பொறுத்த வரையில் ஒவ்வொரு வயதினருக்கும் அவர்களின் உடல் எலும்புகளின் நெகிழ்வுத் தன்மைக்கு ஏற்றவாறு செய்யக் கூடிய ஆசனப் பயிற்சிகள் உள்ளன. எனவே ஆண், பெண் இருபாலரில் எந்த வயதினரும் யோக ஆசிரியரின் ஆலோசனையினைப் பெற்று பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
அந்த வகையிலே நலம் தரக் கூடிய ஆசனங்களிலே முக்கியமான ஒன்றைக் காண்போம்.
images thanks to
http://soraservices.com/yoga/
|
செய்முறை
விரிப்பில் முழங்காலிட்டு அமரவும்
மூட்டுக்களை அகலமாக விரித்து உட்காரவும்
மார்பு, கழுத்தை சிறிது பின் நோக்கி வளைத்து தலையினை பின்புறம் தொங்க விட்ட நிலையில் ஒவ்வொரு கையாக உடலின் பின் பகுதிக்கு கொண்டு சென்று விரல்களை ஊன்றிய குதிகால் பகுதிகளை பிடிக்கவும்.
வாய் மூடிய நிலையில் மூச்சை நன்றாக உள்வாங்கி வெளியிடவும். 15 வினாடிகள் இவ்விதம் இருந்த பின்பு ஒவ்வொரு கையாக முன் கொண்டு வந்து முழங்காலிட்டு அமரவும்.
இரண்டு நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு முறை இந்த ஆசனம் செய்யலாம்.
இந்த ஆசனத்தை செய்வதால் உண்டாகும் பலன்கள் -
- முழங்கால் மூட்டுகளிலுள்ள நச்சு நீர் குறையும் .
- ஆஸ்துமா நோய் குறையும். இது ஒரு மருத்துவ ஆசனமாகும்.
- தைராய்டு கிளாண்டுகள் இயக்கம் சீர்பெற உதவும்.
மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்
No comments:
Post a Comment