உலகில் உள்ள 84 லட்சம் வகை உயிரினங்களுக்கு ஏற்ப 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் 256 ஆசனங்கள் மட்டுமே உள்ளன.
சுமார் 18 ஆசனங்களை பயிற்சி செய்தாலே இன்ன பிற ஆசனங்களை செய்யக் கூடிய அளவிற்கு உடல் பயிற்சி பெற்று விடும்.
அவற்றில் பதிவுலக வாசகர்களுக்காக நோய் தீர்க்கும் அரு மருந்தான ஆசனங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து வருகின்றோம். ஆசனங்களை பற்றிய இந்த தொடரின் முடிவில் வாசகர்கள் செய்ய வேண்டிய ஆசனங்களின் வரிசை பட்டியலையும் வெளியிடுவோம்.
யோகக் கலை என்பது நம்முடைய முன்னோர் நமக்குத் தந்த பெரும் செல்வம். அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம்முடைய கடமைகளில் ஒன்றாகிறது. மனிதனுக்குள் ஆன்மாவாய் நிறைந்திருக்கும் அந்த அற்புத இறைவனை நாம் உணரவைக்கும் கருவி யோகம் என்றால் அது மிகையல்ல.
இந்த பதிவில் நாம் பார்க்கப் போகும் ஆசனம்
பர்வதாசனம்
செய்முறை :
தரையில் கவிழ்ந்து படுக்கவும்.
கைகளை நெஞ்சருகே பக்கவாட்டில் கொண்டு வரவும்.
உள்ளங்கை பகுதியினையும், பாதங்கள் இரண்டையும் தரையில் பதித்த படியும் உடலை மேல் நோக்கிய படி முக்கோண வடிவத்தில் உயர்த்தவும்.
பின் தலையினை இரு கைகளுக்கிடையே தொங்க விடவும்.
இப்படி 20 வினாடிகள் இருந்து பின் நிதானமாக உடலை பழைய கவிழ்ந்த நிலைக்கு கொண்டு வரவும்.
ரத்த அழுத்தம் உள்ளவர்களும், ஒரு தலைவலி, கண் நீர் முட்டல் போன்ற கண் நோய் உள்ளவர்களும் இதை செய்யக் கூடாது.
பலன் -
தலை , மூளைப் பகுதி , கழுத்து, மார்பு, நுரையீரல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக அமையும். ஞாபக சக்தி அதகரிக்கும். கண்பார்வை சீராகும். கை, கால்களின் மூட்டு பலனடையும்.
No comments:
Post a Comment