ஆசனங்களை பற்றிய தொடர் கட்டுரையில் இந்த பதிவில் நலம் தரும் ஆசன வரிசையிலே மற்றும் ஒரு ஆசனத்தைக் காண்போம்.
அர்த்த சர்வாங்காசனம்
செய்முறை
விரிப்பின் மேல் நோக்கியவாறு (மல்லாந்து ) படுத்து கை, கால்களை தளர்ந்த நிலையில் வைக்கவும்.
பின் கால்களை முட்டிவரை மடக்கி , இடுப்பை உயரத் தூக்கி (மேல் நோக்கி ) கைகளால் இடுப்பைத் தாங்கிக் பிடித்துக் கொள்ளவும்.
இரு முட்டிகளை நெற்றியருகே இருக்கும்படி கொண்டு வரவும்.
பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
பலன்கள் -
இந்த ஆசனத்தை செய்வதால் கர்ப்பப் பையில் ஏற்படும் சிறு சிறு
இரத்தக் கட்டிகள் மறையும்.
நச்சு இரத்தம் தேங்கி விடாமல் வெளியேறும்.
மாத விடாய் காலங்களில் ஏற்படும் சூதக வலி ஏற்படாமல் இருக்கும்.
அதிக உதிரப் போக்கு, உண்டாகாமலும் காலந்தவறாத மாத விடாய் ஏற்படாமலும் இருக்கும்.
அனைத்து குடல் உபாதைகள் நீங்கு வதோடு, குடலிறக்க நோயும் வராமல் இருக்கும்.
இது பெண்களுக்குரிய மிகவும் முக்கியமான ஆசனம் ஆகும்.
No comments:
Post a Comment