24. காழிச்சீராம விண்ணகரம்
[ சீர்காழி தாடாளன் கோவில் ]
பெருமாள் : தாடாளன் – திருவிக்கரமமூர்த்தி நின்ற திருக்கோலம்,
கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : மட்ட விழுங்குழலி – லோக நாயகி
விமானம் : புஷ்கலாவர்த்தக விமானம்
தீர்த்தம் : சக்ர தீர்த்தம் , சங்க புஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : அஷ்டகோண மஹரிஷி
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள்]
திருமங்கையார் ஞானசம்பந்தரை வாதில் வென்று நாலுகவிப் பெருமாள் என்ற விருதைப் பெற்ற இடம்
சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் பேருந்துகளில் சென்று கோயில் வாசலில் இறங்கிக்கொள்ளலாம்
25. திருக் கூடலூர்
[ஆடுதுறைப் பெருமாள் கோவில் ]
பெருமாள் : வையக்காத்த பெருமாள் – ஜகத்ரஷகன் நின்ற
திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : பத்மாஸநவல்லி
விமானம் : சுந்தரஸத்வ விமானம்
தீர்த்தம் : சக்ர தீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : நந்தகமாமுனி
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள்]
தஞ்சை – திருவையாறு- கும்பகோணம் பேருந்து மார்கத்தில் திருவையாறிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள தலம்.
26. திருக்கண்ணங்குடி
பெருமாள் : ச்யாமளமேனிப் பெருமாள் ,நின்ற திருக்கோலம் ,
கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : அரவிந்தவல்லி நாச்சியார்
விமானம் : உத்பல விமானம்
தீர்த்தம் : ச்ரவண புஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : ப்ருகு சைத்யர் , கௌதம முனி
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் [ 10 பாசுரங்கள்]
நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலை வழியில் ஆழியூர் என்ற இடத்திலிருந்து தெற்கே 1 கி.மீ தூரத்தில் உள்ள தலம். திருவாரூர்- நாகை இருப்புப்பாதையில் கீழ்வேளுர் இரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரம்
27. திருக்கண்ணமங்கை
பெருமாள் : பக்தவத்சலப் பெருமாள் –பத்தராவிப் பெருமாள்
நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : அபிஷேகவல்லித் தாயார்
விமானம் : உத்பல விமானம்
தீர்த்தம் : தர்சன புஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : வருணன், ரோமசமுனி
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் [ 14 பாசுரங்கள்]
விமானம் , வனம், மண்டபம் தீர்த்தம் , க்ஷேத்ரம் . நதி, நகரம் ஆகிய ஏழு அங்கங்களும் அமுதமயமாக உள்ளதால் ஸப்தாம்ருத க்ஷேத்திரம் ப்ரஸித்தி. லக்ஷ்மி வனம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
கும்பகோணம்-திருவாரூர் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
28. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)
பெருமாள் : கஜேந்திர வரதர்
புஜங்க சயனம் , கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : ரமாமணிவள்ளி – பொற்றாமரையாள்
விமானம் : ககனாக்ருதி விமானம்
தீர்த்தம் : கஜேந்திர புஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : கஜேந்திரன் , ஆஞ்சனேயர்
மங்களாசாசனம் : திருமழிசையாழ்வார் [ 1 பாசுரம்]
தஞ்சாவூர்-திருவையாறு-கும்பகோணம் வழியில் உள்ள தலம். கும்பகோணத்திலிருந்தும், பாபநாசத்திலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
29. திருவெள்ளியங்குடி
பெருமாள் : கோலவல்லி ராமன்
புஜங்க சயனம் , கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : மரகதவல்லி நாச்சியார்
விமானம் : புஷ்கலாவர்த்தக விமானம்
தீர்த்தம் : சுக்ர புஷ்கரிணி , ப்ரஹம தீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : சுக்ரன், பிரமன், பராசரர் , இந்திரன், மயன், மார்க்கண்டேயன், பூமிதேவி
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் [ 1 பாசுரம்]
கும்பகோணத்திலிருந்து, அணைக்கரை போகும் பேருந்தில் பெரியவச்சான் பிள்ளையின் அவதாரஸ்தலமான சேங்கானூரில் இறங்கி ஒரு கி.மீ தூரம் நடக்க வேண்டும். முட்டக்குடியிலிருந்தும் செல்லலாம்.
(தொடரும் )
No comments:
Post a Comment