Thursday, July 5, 2012

அரங்கனின் ஆலயங்கள் - 108 பகுதி (11)




42. திருக் கோஷ்டியூர்



பெருமாள்                        : உரகமெல்லணையான்- சௌளம்ய நாராயணன்
   புஜங்க சயனம் , கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்                            : திருமாமகள் – நாச்சியார்

விமானம்                        : அஷ்டாங்க  விமானம் 

தீர்த்தம்                          : தேவபுஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்                    : கதம்ப மாமுனி   

மங்களாசாசனம்            : பெரியாழ்வார், கலியன், பூதத்தார், பேயார்,

திருமழிசை ஆழ்வார் [ 39 பாசுரங்கள் ]

ராமானுஜர் இக்கோயிலின்  கோபுரத்திலிருந்து திவ்யமந்த்ரம் உபதேசித்ததால் திருமந்திரம் விளைந்த தலம் என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. 

திருக்கோஷ்டியூர் நம்பியின் அவதாரஸ்தலம்.

மதுரை – திருப்பத்தூர்- சிவகங்கை மார்கத்தில் திருப்பத்தூரிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது, காரைக்குடியிலிருந்தும் நேரடி பேருந்து வசதி உள்ளது. 




                                                 43. திருமெய்யம் 



பெருமாள்                        :ஸத்யகிரிநாதன் – மெய்யப்பன்
                                      நின்ற திருக் கோலம், கிழக்கே  திருமுக மண்டலம் 

தாயார்                            : உய்ய வந்த நாச்சியார் – உஜ்ஜீவனத் தாயார் 

விமானம்                       : ஸத்யகிரி  விமானம் 

தீர்த்தம்                        : ஸத்ய தீர்த்தம் , கதம்ப புஷ்கரிணி 

ப்ரத்யக்ஷம்                 : ஸத்ய தேவதை  

மங்களாசாசனம்         : திருமங்கையாழ்வார் [ 9 பாசுரங்கள் ]

இது ஒரு குடைவரைக் கோயில். புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது 


44. திருப்புல்லாணி [ தர்ப்ப சயனம் ]



பெருமாள்                 : கல்யாண ஜகந்நாதன்
                                வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                     : கல்யாண வல்லி – பத்மாஸநி 

விமானம்                  : கல்யாண விமானம் 

தீர்த்தம்                     : ஹேம தீர்த்தம் , சக்ரதீர்த்தம்  

ப்ரத்யக்ஷம்               : புல்லாரண்யா மஹரிஷி, அச்வத்த நாராயணன் ,ஸமுத்ரராஜன்  

மங்களாசாசனம்        : திருமங்கையாழ்வார் [   21 பாசுரங்கள் ]

ராமநாதபுரம் தெற்கே 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சி – மதுரை – காரைக்குடி போன்ற இடங்களிலிருந்து ராமநாதபுரத்திற்கு பேருந்து , ரயில் வசதி உள்ளது.








45. திருத்தண்கால் (திருத்தங்கல்)


பெருமாள்                                  : அப்பன் – தண்காலப்பன்
                                                    நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்

தாயார்                                      : அன்ன நாயகி – அநந்த நாயகி , அம்ருத நாயகி,
                                                   ஜாம்பவதி என்னும் நால்வர் நாச்சிமார்கள் 

விமானம்                                  : தேவந்த்ர விமானம் 

தீர்த்தம்                                     : பாபவிநாச தீர்த்தம் 

ப்ரத்யகூக்ஷம்                           : சல்ய பாண்ட்ய மஉறாராஜா, ஸ்ரீவல்லபன், புலி

மங்களாசாசனம்                       : திருமங்கையார் , பூதத்தாழ்வார் ( 5 பாசுரங்கள் )

சிவகாசியிலிருந்து விருதுநகர் செல்லும் மார்க்கத்தில் சிவாகாசியிலிருந்து 3 கி.மீ . தூரத்தில் உள்ளது. நகரப்பேருந்து வசதியும் உள்ளது. விருதுநகர் – தென்காசி இரயில் மார்க்கத்தில் திருத்தண்கால் ஒரு இரயில் நிலையம்.
 


 


46.திருமோகூர்


பெருமாள்                                      : காளமேகப்பெருமாள் 

                                                         நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்                                          : மோகனவல்லி- மோகூர்வல்லி 

விமானம்                                      : கேதகி விமானம் ( வேதாமோதவிமானம் )

தீர்த்தம்                                         : கூஷீராப்திபுஷ்கரிணி

ப்ரத்யகூஷம்                                : ப்ரம்மா இந்திரர்களுக்கு 

மங்களாசாசனம்                          : நம்மாழ்வார் , திருமங்கையார் (12  பாசுரங்கள் )

மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் ஒத்தக்கடை நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. மதுரையிலிருந்து திருவாதவூர் செல்லும் நகரப் பேருந்துகள் திருமோகூருக்குச் செல்கின்றன.


47.திருக்கூடல் ( தென்மதுரை )

 

பெருமாள்                                     : கூடலழகர்
                                                       வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். 

தாயார்                                          : மதுரவல்லி – மரகதவல்லி , வரகுணவல்லி 

விமானம்                                      : அஷ்டாங்க விமானம்

தீர்த்தம்                                         : உறமபுஷ்கரிணி , சக்ரதீர்த்தம் 

ப்ரத்யகூக்ஷம்: ப்ருகுமஉறரிஷி , சௌணகாதிகள், பெரியாழ்வார் 

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் , திருமழிசையார் ( 2 பாசுரங்கள் )

பெரியாழ்வார் பல்லாண்டு பாடியதலம்.

மதுரை மாநகரிலேயே மதுரை இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 1 கி.மீ தூரத்தில் உள்ளது.

48. ஸ்ரீவில்லிபுத்தூர்

பெருமாள்                                        : வடபத்ரசயனர் – ரங்கமன்னர் 

தாயார்                                             : வடபத்ரசயணம், கிழக்கே திருமுக மண்டலம் 

விமானம்                                         : ஸம்சன விமானம் ( சௌம்ய விமானம் )

தீர்த்தம்                                           : திருமுகக்குளதீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                                     : மண்டூகமஹரிஷி 

மங்களாசாசனம்                             : பெரியாழ்வார் , ஆண்டாள் ( 2 பாசுரங்கள் )

பெரியாழ்வார்                                : ஆண்டாள் அவதாரத்தலம் 

மதுரையிலிருந்து ராஜபாளையம் – தென்காசி செல்லும் வழித்தடத்தில் உள்ள தலம். தென்காசி விருதுநகர் ரயில்பாதையில் உள்ள ரயில் நிலையம் .


49. திருக்குருகூர் ( ஆழ்வார் திருநகரி )


பெருமாள்                         : ஆதிநாதப்பெருமாள் – பொலிந்துநின்றபிரான் 

                                                  : நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுகமண்டலம் 

தாயார்                               : ஆதிநாதவல்லி – குருகூர்வல்லி

விமானம்                           : கோவிந்த விமானம் 

தீர்த்தம்                              : தாம்ரபர்ணி நதி, ப்ரஉற்ம் தீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                        : பிரமன், நம்மாழ்வார் , மதுரகவிகள் 

மங்களாசாசனம்                : நம்மாழ்வார் ( பாசுரங்கள் )


திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலை மார்க்கத்தில் ஆழ்வார்திருநகரி என்று அழைக்கப்பெறும் தலம் திருநெல்வேலி – திருச்செந்தூர் இரயில் பாதையில் ஆழ்வார்திருநகரி இரயில் நிலையத்திலிருந்து கிமீ தூரத்தில் உள்ளது








50. திருத்தொலைவில்லிமங்கலம் ( இரட்டைத்திருப்பதி )

 

பெருமாள்                                         : தேவபிரான்
                                                          நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுகமண்டலம் 

தாயார்                                             : உபயநாச்சிமார்கள் 

பெருமாள்                                          : அரவிந்தலோசனன்

                                                     வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                                        கருந்தடங்கண்ணி நாச்சியார் 

விமானம்                                    குமுத விமானம் ( குப்த விமானம் )

தீர்த்தம்                                      தாமரபர்ணி நதி, வருண தீர்த்தம் 

ப்ரத்யக்ஷ்ம்                                இந்திரன் , வாயு, வருணம்

ஆழ்வார் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் பாதையில் கி.மீ தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றைக் கடந்து இத்தலத்தைச் சேவிக்கலாம் 


 





No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment