வலைத்தள ஆன்மீக உறவுகளை மீண்டும் தொடர் பதிவில் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அன்பர்களின் நேரடி வேண்டுகோள்களுக்கு இணங்க யோகாசனங்கள் என்ற ஆசனப் பயிற்சிகள் பற்றிய தொடர் கட்டுரைகளை இனி குருவருளால் பதிவிட இருக்கிறோம்.
இன்று மக்களிடையே யோகாவை பற்றிய ஆர்வம் வெகு வேகமாக பரவி வருகிறது. அலோபதி மருத்துவர்கள் கூட எளிய ஆசனம் மற்றும் தியானத்தை மக்களுக்கு பரிந்துரைப்பதாலும் யோகா மையங்களுக்கு இன்று மக்களிடையே நல்ல வரவேற்பு காணப் படுகிறது.
யோகம் என்பது மனப் பயிற்சி , ஆசனம் என்பது உடற்பயிற்சி . உடற்பயிற்சி என்றபோதிலும் வழமையான உடற்பயிற்சியில் இருந்து வித்தியாசமானதாக ஆசனப் பயிற்சிகள் ரிஷிகளால் வடிவமைக்கப் பட்டுள்ளன.
பல மையங்களிலும் பலவாறு ஆசனப் பயிற்சிகள் கற்றுத் தரப்படுவதால் எந்த ஆசன வரிசைஏற்றது மற்றும் சிறப்பானது என்றஅன்பர்களின் சந்தேகங்களை போக்க ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் யோகப் பயிற்சி பிரிவான மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தால் வெளியிடப்பட்ட ஆசன வரிசைகள் மற்றும் அவற்றின் பலன்கள் அவற்றுக்கான நியதிகள் போன்றவற்றை தொடர்ச்சியாக வெளியிடுவோம்.
ஏற்கனவே முந்தைய பதிவுகளில் சூரிய நமஸ்காரம் பயிற்சி முறை மற்றும் பலன்கள் மற்றும் மிகவும் முக்கியமான ஆசனங்களை நாம் வெளியிட்டிருந்தோம். அந்த வகையிலே ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் வெளியீட்டு நூலான யோகம் +ஆசனம் ல் இருந்து பயிற்சி மாணவர்களுக்கான ஆசனங்களை தொடர்ந்து வெளியிடுவோம்.
ஆரம்ப நிலை பயிற்சி
திருஷ்டிகள்
(பார்வைகள்)
1. கண்களைத் திறந்து புருவ மத்தியைப் பார்த்தல்
2. மூக்கு நுனியைப் பார்த்தல்
3. நேராகப் பார்த்தல்
4. வல இட தோள்களைப் பார்த்தல்.
5. எதிர்திசைகளைப் பார்த்தல்.
6. கண்களை வட்டமிடுதல்
7. இந்த பயிற்சிகளை கண்களை மூடியபடியும் செய்தல்
வேண்டும் . இதை தகுந்த ஆசிரியர் உதவியோடு செய்தல் நலம்
தொடரும் .........................
No comments:
Post a Comment