உஷ்ட்ராசனம்
அமர்ந்த நிலை ஆசனங்களின் வரிசையில் இரண்டாவது ஆசனமாக உஷ்ட்ராசனத்தை ஸ்வார்த்தம் சத்சங்கம் அறிவிக்கிறது
மனம்
இடுப்புப் பகுதி மற்றும் கழுத்து
மூச்சின் கவனம்
வளையும்போது வெளி மூச்சு , நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்
முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது. வயிற்றின் உள்ளுறுப்புகள் பலமடைந்து விலா எலும்புகள் நன்கு விரிவடைகின்றன .
குணமாகும் நோய்கள்
முதுகுவலி, சுவாசக் கோளாறுகள், முழங்கால் வலி, இடுப்பு வலி, இடுப்பு வாயு பிடிப்பு , கீழ் வாயுக் கோளாறு , இரைப்பைகோளாறுகள், முதலியவற்றிற்கு நல்லது . தன்னம்பிக்கையை வளர்க்கிறது. சோம்பலை நீக்கி பயிற்சியாளரைச் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது
எச்சரிக்கை
இதய நோயுள்ளவர்கள் கவனமாகச் செய்யவும். குடல் வால்வு நோய் உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது.
தொடரும்
குருஜி டி.எஸ்.கிருஷ்ணன்
No comments:
Post a Comment