Monday, January 6, 2014

தன்னம்பிக்கை தரும் அர்த்த சக்ராசனம்

அர்த்த சக்ராசனம் 


சத்குரு , பதஞ்சலி



மனதின் கவனம் 
                             முதுகெலும்பு

மூச்சின் கவனம் 
                         உடலை வளைக்கும்போது உள் மூச்சு, ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, தளரும்போது வெளிமூச்சு 

உடல் ரீதியான பலன்கள் 
                                          உடம்பின் முன்புறத்தசைகள் , கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன. முதுகுத் தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மை நீடிக்கிறது. இது பாத ஹஸ்தாசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனம் என்பதால் அந்த ஆசனத்தின் பலன்களை இது கூட்டுகிறது. சுவாச உறுப்புகள் ஓய்வடைகின்றன.


குணமாகும் நோய்கள் 
                                      ஆஸ்துமா, கீழ் முதுகுவலி ஆகியவை குணமாகின்றன. தொடை, கெண்டைக் கால் பகுதியில் ஏற்படும் தசைப் பிடிப்பு நீங்குகிறது..

                        
ஆன்மீக பலன்கள் 
                                    உடலின் சமநிலை, தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கிறது. 

எச்சரிக்கை 
                   இதய நோய் உள்ளவர்கள் இதனை மெதுவாக செய்யவேண்டும். மெலிந்த உயரமான உடல்வாகு அல்லது பலவீனமானவர்கள் அதிகமாய் வளைவதை தவிர்க்கவும். அவர்கள்  விழாதவாறு கால்களை சற்று அகற்றி வைத்துக் கொண்டு செய்யலாம். முதுகெலும்பு மற்றும் கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.

     

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment