Monday, January 13, 2014

மலச்சிக்கலை நீக்கும் மகத்தான ஆசனம் - திரிகோணாசனம்

                             திரிகோணாசனம்

                                                  
திரிகோணாசனம்




மனம் 

                         இடுப்புப் பகுதி மற்றும் கைகள் 

மூச்சின் கவனம் 
                                          குனியும்போது வெளிமூச்சு , ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு 

 உடல் ரீதியான பலன்கள்            

                                      உடம்பு முழுவதும் குறிப்பாக முதுகுத் தண்டும் ,தசைகளும் நீட்டப் படுகின்றன. மார்பு எலும்புகளுக்கு  இடையில் உள்ள தசைகள், தொடைகள், கெண்டைக் கால்கள்,முழங்காலுக்குப் பின்புறம் உள்ள தசைகள் முதலியன நன்கு நீட்டப் பட்டு தளர்த்தப் படுகின்றன. அட்ரினல் சுரப்பிகள் நன்கு தூண்டப் படுகின்றன. கல்லீரல், மண்ணீரல் சிறுநீரகங்கள் , கணையம் முதலியவை நன்கு அழுத்தப் படுகின்றன. இடுப்பு ,இடுப்பின் கீழ்ப்பகுதி மெலிதாகின்றது.


குணமாகும் நோய்கள் 


பாதம், நீரிழிவு நோய்கள், சுவாசக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவற்றுக்கு நல்லது. மலச் சிக்கலை நீக்கி , பசியை உண்டுபண்ணுகிறது. முதுகு, கழுத்து , முழங்கை ,இடுப்புப் பகுதி, முழங்கால் முதலியவற்றில் உள்ள வலியைப் போக்குகிறது. வாயுப் பிடிப்பு , கூன்முதுகு முதலியவற்றிற்கும் பலனளிக்கிறது.

எச்சரிக்கை :
                          கீழ்முதுகு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் கவனமாகச் செய்யவும் .
                             

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment