வஜ்ர முத்ரா (எ ) சசாங்கசனம்
அமர்ந்த நிலை ஆசனங்களின் வரிசையில் 3வது ஆசனமாக வஜ்ர முத்ரா (எ ) சசாங்கசனத்தை ஸ்வார்த்தம் சத்சங்கம் அறிவிக்கிறது
மனம்
வயிற்றுப் பகுதி, தலைப் பகுதி
மூச்சின் கவனம்
முன்னால் குனியும் போது வெளி மூச்சு , ஆசனத்தின் போது இயல்பான மூச்சு ,நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்
காலில் உள்ள மூட்டுத் தசைகளை தளர்த்துகிறது.
வயிற்றின் கீழ்ப்புற பகுதி அதிக இரத்த ஓட்டம் பெறுகின்றது.
சிறுநீரகம் வலிமை அடையும்.
முதுகெலும்பு நெகிழ்வுத் தன்மை பெறும்.
தலைப்பகுதியில் இரத்த ஓட்டம் மிகும்.
நினைவாற்றல் கூடும்
பிட்யூட்டரி, பீனியல், தைராய்டு பாரா தைராய்டு சுரப்பிகள் தூண்டி விடப்படும்.
வாழ்நாளை அதிகரிக்கும்
தாது பலவீனத்தை சீராக்கும்
குணமாகும் நோய்கள்
அதிக இரத்த அழுத்தம் , இடுப்பு வாயுப் பிடிப்பு, இரைப்பைகுடல் சம்பந்தமான கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு நோயை கட்டுப் படுத்தும் , மலச்சிக்கல் நீங்கும். வாயு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்
ஆன்மீக பலன்கள்
குண்டலினி சக்தி மேல் எழும்பும்.
உடல் குளிர்ந்து மனம் அமைதியடைகிறது
எச்சரிக்கை
தீவிர முழங்கால் வலி உள்ளவர்கள் கவனமாகச் செய்யவும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் , இடுப்பில் வாயுப் பிடிப்பு, கழுத்து வலி உள்ளவர்கள் மற்றும் இதய நோயாளிகள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது
தொடரும்
குருஜி டி.எஸ்.கிருஷ்ணன்
No comments:
Post a Comment