Tuesday, January 7, 2014

கல்லீரலின் இயக்கத்தை சீராக்கும் பாத ஹஸ்தாசனம்

பாத ஹஸ்தாசனம்

                                      
சத்குரு, அஷ்டாங்க யோகம் , சித்தர்களின் யோகா
image thanks to  - www.manavata.org

 மனதின் கவனம்:

வயிற்றுப்பகுதி , முதுகு, எலும்பு, கால்கள் 


மூச்சின் கவனம் 
                                 கீழே குனியும்போது வெளிமூச்சு , ஆசனத்தின் போது இயல்பான மூச்சு , நிமிரும்போது உள்மூச்சு . 

உடல் ரீதியான பலன்கள் :-

                                         உடம்பின் பின்புறம் உள்ள எல்லாத் தசைகள், இடுப்பு நரம்பு தொடையில் உள்ள எலும்பை பிணைக்கும் தசை னார்கள், தசையை பிணைக்கும் தசை நார்கள், கால்கள் ஆகியவை நன்றாக நீட்டப் படுகின்றன.முதுகுத்தண்டு மற்றும் இடுப்பில் உள்ள நரம்புகள் முறுக்கேறுகின்றன. தலைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது . ஜீரண சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன . உடலின் சுற்றளவை நன்கு குறைக்கிறது . இடுப்பு மற்றும் இடுப்புக்கு கீழ் உள்ள அதிக சதைப் பகுதியை மெலிய வைக்கிறது.

குணமாகும் நோய்கள் :

                                         ஜீரண சம்பந்தமான இரைப்பை  மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்லது. நீரிழிவு நோய் சிகிச்சையில் பலன் அளிக்கிறது. கல்லீரலின் இயக்கம் சீராகிறது.

ஆன்மீக பலன்கள் 
                                  உடல்  விழிப்புணர்வு அதிகரிக்கிறது. தலைக்கு இரத்தம் பாய்வது உணரப் படுகிறது. 


எச்சரிக்கை
                             அதிக இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் , கழுத்து வலி , இடுப்புபிடிப்பு உள்ளவர்கள். இதைச் செய்தல் கூடாது. 


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
                                             


No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment