Thursday, April 3, 2014

நவக்கிரக நாயகி அன்னை பராசக்தி


ஞான சபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள் - பகுதி  2 



இறைவன் வகுத்த சட்டத்தினை மீறாமல் கோள்கள் அவர்களுடைய பணிகளை இயற்றுகின்றன. அவைகளை மீற அவர்கள் தனிப்பட்ட முறையில் எதையும் செய்ய முடியாது.






இன்னும் சொல்லப்போனால் மனிதா! உன்னுடைய பாவ புண்ணியங்களிற்கு ஏற்ப நீ இவற்றை அனுபவிக்கிறாய், இதை மீறி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிடுவார்கள்.


இருந்தபோதிலும் இந்த கோள்களின் செயல்களையும் கட்டுப்படுத்துவதற்கு ஒரு சுப்ரிம் பவரை இறைவன் நியமித்திருக்கின்றான், அது யார் என்றால் அதுதான் சக்தி.


அந்த சக்திக்குத்தான் அன்னை என்று பெயர் , அதை நாம் இயங்கு சக்தி, இயக்குச்சக்தி என்றெல்லாம் பல பாடங்களில் பார்த்திருக்கிறோம்.

இங்கு நான் அதை குறிப்பிடவில்லை 

அந்த அன்னை சக்திக்கு  தாய்மை என்று பெயர்.


தாய்மை என்று சொன்னால் அன்பு செலுத்துவது. அன்பின் வடிவாக இருப்பது.

யாருக்கும் எந்த துன்பம் வந்தாலும் தாங்க முடியாமல் அவர்களுக்கு உதவி செய்வது. பல நேரங்களில் இறைவன் வகுத்த அந்த கோள்களின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு நமக்கு நன்மை செய்ய அதிகாரம் கொண்டவள் அன்னை பராசக்தி,

அதைத்தான் கோள் நின்ற நாயகி என்று அன்னை பராசக்தியினை சொல்வார்கள்.


அவள்தான் கோள்களுக்கு எல்லாம் தலைவி. தலைவன் சாட்சாத் இறைவன்
அவளை நாம் நினைத்தால்.அவள் மனது வைத்தால் நாம்அனைத்து காரியங்களிலும் வெற்றிபெறலாம். அப்படியென்றால் அன்னை பராசக்தியினை வழிபடக்கூடிய சாக்தம் என்ற முறைதானே அதிகமாக இந்த பூமியெங்கும்இருந்திருக்க வேண்டும்.

நம்முடைய கண்ணனுக்கு  (முதன்மை மாணவர்) இது ஆரம்ப பாடமா. தெரிந்த பாடமா அல்லது தெரியாத பாடமா என்று எனக்கு தெரியவில்லை.

ஆகவே ஏன் இந்த சாக்தத்தை அதிகமாக வழிபட முடிவதில்லை, சாக்தம் என்ற ஒன்றிடம் பெண்மை என்ற ஒன்றுஇருக்கிறது.

 இந்த பிரபஞ்சம் முழுமையுமே பெண்மை மற்றும் ஆண்மை என்று இருபிரிவுடையது, இந்த பெண்மை என்பது அழகு வடிவெடுத்தது. இன்பம் தரவல்லது. மகிழ்ச்சி தர வல்லது, எல்லாவற்றையும் செய்வது, ஆக்குவதற்கும் ,அழிவதற்கும் இப்படி எல்லாவற்றிற்கும் காரணமாக இருப்பது.


ஆக இந்த உலகில், ஓவ்வொரு மனிதனும்,ஒவ்வொரு உயிரும் பெண்மையினை சார்ந்து இருக்ககூடியதாக உள்ளது. எனவே அவன் பெண்மையினை மதிக்கிறான். பெண்மையினை வழிபடுகிறான். அந்த பெண்மையினையே இறைவியாக நினைத்து வழிபட்டுக்கொண்டு அதை நினைத்து தவத்தில் இருக்கின்ற ஒரு பிரிவு தனியாக இருக்கிறார்கள்.



ஏன் சாக்தத்தை அனைவரும் பின்பற்றவில்லை???????


ஆதிசங்கரர் சனாதன தர்மத்தில் ஆறு மதங்களை ஸ்தாபித்தார். அவற்றிற்கு ஏற்ற தலைமைகளை உருவாக்கி நீங்கள் அந்த வழியிலே வழிபடுங்கள் என்று வழிப்படுத்தினார்.


சாக்தத்தை வழிபடும்போது சிறிது மனசஞ்சலமும் கூடவே வரும், அன்னையே என்று சக்தியினை தரிசனம் செய்து கொண்டிருக்கின்ற வேளையில் இவன் அந்த புலன் மயக்கத்தினால் அந்த அழகில் மயங்கிவிடுவான், அந்த பேரழகிலே புத்தி பேதலித்து விடுவான்.



இதையெல்லாம் விடுத்து தாய்மை வேறு. அது வேறு என்று உற்றுநோக்குகிற. கொள்கைப்பிடிப்பு உடைய திடமனத்துக்காரர்கள் மட்டுமே சாக்தத்தை வழிபட முடியும்.அப்படிப்பட்ட பக்தன் வழிபடும்போதே அபரிமிதமான சக்தி அங்கிருந்து இவனுக்கு  கிடைத்துவிடும். மற்றவர்கள் ஏன் வழிபட முடியவில்லை என்றால் அதில் இந்த வகையான தீமை உள்ளது.



பக்தி என்று சொன்னால் அதில் தீமை இருக்கிறது என்றால் அந்த சாக்தத்தை வழிபாடாமல் இருந்து விடாலாமே. ஆனால் இவன் வந்த வழி தாய்மை என்ற ஒன்றின் வழியாகத்தானே இவன் வந்திருக்கிறான். அந்த தாயும் ஒரு பெண்தானே , பெண்ணைபற்றி சிந்திக்கிறபோது.பெண்ணை நேசிக்கின்ற போது தாயை எவ்வாறு நினைப்பான். இவ்வாறெல்லாம் இருக்கின்றது.


தாய் என்றால் ஒரு தனி ஸ்தானம், உயர்ந்த ஸ்தானம், யாரை எதை சொன்னாலும் தாயினை பழித்தவனை தாயே தடுத்தாலும்  விட மாட்டேன் என்று சொல்வார்கள் பலர்.


அந்த அளவிற்கு தாய் என்றால் ஒரு தனி அன்பு


பொதுவாக ஒருவன் அவன்  தாயினை கண்டால்  வழிபடுவான், அந்த தாயுடன் ஒரு அழகான பெண் வந்தால் பக்குவமற்ற நிலையில் தாயைப்போல அந்த பெண்ணை பார்க்கும் நிலை அவனிடம் இருக்காது. அவனிடம் வேறு எண்ணம் இருக்கும், மனிதனிடம் அப்படி ஒரு இயல்பு இருக்கிறது.


என்ன இயல்பு என்று தெரியவில்லை.

ஏனென்றால் அந்த இயல்பில்தான் உலக வளர்ச்சி என்ற ஒன்றை வைத்திருக்கிறான் . இறைவன், ஒவ்வொரு ஜீவராசிக்கும் பெண்மை என்றால் ஒரு கவர்ச்சி இருக்கிறது, அதை அடிப்படையாக அனைத்து ஜீவராசிக்கும் வைத்திருக்கின்றான். அதன் மு்லமாக இந்த  உலகிலே ஜீவர்கள் பெருக வேண்டும்மனிதர்கள் என்றால் அவர்களுக்கு பாரம்பரியம் இருக்க வேண்டும். அவர்களுக்கு அவர்களை தொடர்ந்து வரக்கூடிய அந்த சந்ததிகள் வரவேண்டும். எனவே அந்த கவர்ச்சி அடிப்படையாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் அன்னையாக நினைத்து வழிபடக்கூடிய பக்குவமும் வேண்டும். இந்த மனிதனிடம் இரண்டும் கலந்திருக்கிறது.




ஆரம்ப காலத்தில் சக்தி வழிபாடுதான் அதிகமாக இருக்கிறது, காலங்கள் மாற மாற அது ஒரு குறிப்பிட்ட அளவிலே அந்த வழிபாடு இருக்கின்றது, ஏனென்றால் அந்த அன்னை பராசக்திக்கு நிறைய பணிகள் இருந்துகொண்டே இருக்கிறது.


ஒரு குடும்பத்தில் அன்னை என்பவள் பல பணிகளையும்மேற்கொள்வாள். அன்னைக்கு தன் பிள்ளையிடம் தன்னை வழிபடு என்று கூற மாட்டாள். கூற அவளுக்கு நேரமும் இல்லை. 

நம்மிலே சிலர் கூறுவோம். என்னுடைய தாய் என்னை சரிவர கவனிப்பதே இல்லை என்று, ஆனால் அது உண்மை இல்லை, ஒவ்வொருவரின் மீதும் தாய் எவ்வளவு கவனம் வைத்திருக்கிறாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.


அம்மா நான் உன்னை வழிபடவா என்றால்

 போடா! உன் வேலையினை பார் என்று சிரித்துக்கொண்டே கூறுவாள். அவ்வாறாக அந்த அன்னை என்பவள் நாம் அவளை வணங்குவதை எதிர்பார்க்க மாட்டாள். வழிபடுமாறு கூறவும் மாட்டாள்.

அன்னையினை நாம் வணங்குவது என்பது நம்முடைய அடிப்படை இரத்தத்திலே ஊறியிருக்கிறது,


அங்கொன்றும்,இங்கொன்றும் சில மாறுபாடுகள் இருப்பதையெல்லாம் நாம் நினைக்கவேண்டாம், எல்லாவற்றிலும் அரிதான விஷயம் என்று இருக்கிறது.
மனிதர்களுடைய விஷயத்திலே மட்டும் அன்னையினை பொருத்தவரை ஒரு உயர்ந்த தத்துவம் இருக்கிறது, அன்னை வேறு. மனைவி என்பவள் வேறு, சகோதரி  என்பவள் வேறு என்றவாறு.


மிருகங்களுக்கு இத்தகைய அறிவு என்பது மிகக் குறைவாகவே இருக்கிறது,
ஆனால் இக்கால மனிதர்களில் சிலர் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள், ஆனால் இந்த விகாரங்களையும் பற்றி பேசுவதற்கானது இந்த சபை இல்லை

இருந்தபோதிலும் சாக்தம் என்ற ஒன்று இந்த நவ கோள்களின் ஆதிக்கத்திலே நம்மை காப்பாற்றுவதாக இருக்கிறது. அந்த தாயிடம் நாம் வைக்கும் வேண்டுதல் உண்மையானதாக , உருக்கம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

தாயே நான் துயரப்படுவது உனக்கு தெரியவில்லையா

என் குடும்பம்பாடு உனக்கு புரியவில்லையா! என்றெலாம் அவன் புலம்புவான் 


இன்று அவன் அனுபவிக்கூடிய துன்பம் அவனுடைய பாவத்தினால் வந்ததாக இருந்தாலும். அவன் அனுபவிக்கட்டுமே என்று எண்ணி இருந்துவிடாமல் தக்க ஒரு ஆறுதலை,தீர்வினை அன்னை அளிப்பாள். நவ கோள்களின் ஆதிக்கத்தினால் அவன் துன்பபட்டபோதும் அவன் மனதை மாற்றும்  ஆறுதலை அன்னை நிச்சியமாக அளிப்பாள்.


அப்படி நவ கோள்களை கட்டுப்படுத்தும் சக்தி வழிபாடு சாக்தமாக அமைந்திருக்கிறது

அந்த சாக்த வழிபாட்டின் தலைவியாக அன்னை பராசக்தி இருக்கிறாள்.



தொடரும்



No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment