Sunday, April 6, 2014

துன்பங்களை வெல்லும் வழி ????



ஞான சபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள் - பகுதி 4 





கிரகங்களை பற்றிய விஷயங்களுக்கு வருவோம்.

பஞ்சாங்கத்தை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.   

                                 
                                                                 
                                   

கண்ணனுக்கு (சீடர் )அதைபற்றி அதிகம் தெரியும்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் வடிவம் உள்ளது, அந்த வடிவத்தை கிரக லிங்கம் என்று பெயர். மற்றும் கிரக ஜாதி என்று ஒன்று இருக்கிறது. என்ன அங்கேயும் ஜாதியா என்று நினைக்காதீர்கள். அதுபோல கிரக பாஷை (மொழி), கிரக நிறம், கிரகங்களை குறிக்ககூடிய எண்கள், ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு எண் உள்ளது. கிரக இனம் என்று ஒன்று உள்ளது. ஜாதி வேறு, இனம்வேறு.

கிரக இரத்தினம்

கிரக வாகனம்

கிரக தேவதை

கிரக தானியம்

கிரக குணம்

கிரக சுவை

கிரக பிணி

இன்ன இடத்தில். இன்ன கிரகம் வந்தால் இன்ன பிணி இவனுக்கு கடைசி வரை இருக்கும் என்பார்கள்.

ஒரு பிறவியில் நம்முடைய செய்கையால் பிறருக்கு என்ன துன்பம் ஏற்பட்டதோ அதுவே அந்த பிறவியில் மற்றொரு  பிறவியில் நமக்கு பிணியாக அமைகிறது. அது கர்மவினை பூர்வமானவை என்பதால் அதை அறியும் ஞானம் நமக்கு இல்லை.இருந்தபோதிலும் நமக்கு கிடைத்த இந்த வாழ்க்கையில் நாம் தர்மப்படி நடந்து நம்முடைய பிணி தீர்ப்போம்.

மனிதன் சொத்துக்கள் ,சுகங்கள் மற்றும் துக்கங்களை பற்றி கூட பெரிதாக கவலைப்படுவதில்லை, ஆனால் அவனுக்கு வியாதி என்று ஒன்று வந்துவிட்டால் அவனை மாதிரி யாரும் கவலைப்பட முடியாது. 


அதற்காக இது ஏன் வந்தது, எப்படி வந்தது என்ற ஆராய்ச்சியெல்லாம் நமக்கு தேவையில்லாத ஒன்று.குரு என்ன சொல்கிறாரோ அதன் படி நடந்துகொண்டால் எந்த துன்பமுமில்லை. 

இங்கு குரு என்பதுநானில்லை., பதஞ்சலியினை சொல்கிறேன்.

மேலும் கிரக உலோகம் . கிரக வஸ்திரம். கிரக சமித்து என்றெல்லாம், கிரக சமித்து என்றால் கிரகத்துக்கான யாகத்திலே அவற்றை ஆகுதியாக அதை இடுவார்கள், அதை அந்தந்த கிரகங்கள் ஏற்றுக்கொள்ளும், அவை நன்மை பயக்கும்.


கிரக திக்கு என்று இருக்கிறது, ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு திசைக்கு உரியவை, சிலர் கேட்பார்கள் மொத்தம் ஒன்பது கிரகங்கள், ஆனால் திசைகள் எட்டுதானே உள்ளது என்பார்கள் அறியாமையினால், அதற்கெல்லாம் பதில் உள்ளது.


கிரகங்கள் ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் என்று ஒன்று இருக்கிறது, கிரகங்களின் சஞ்சார காலத்தில்அவை இந்த இடத்தில் வந்தால் என்ன நிகழும்? மேலும் சுகங்கள், துக்கங்கள். மனமாற்றங்கள் ,மகிழ்ச்சிகள் வருமானங்கள், இழப்புகள் போன்ற பல வகைப்பாடுகள் உள்ளன.


கிரக தத்துவம்என்று உள்ளது. இந்த கிரகங்கள் எப்போதல்லாம் வேலை செய்யும் மற்றும்வேலை செய்யாது என்ற ஒரு விஷயம். கிரகங்களை வேலை செய்யவிடாமல் தடுப்பது எது என்றவாறெல்லாம் உள்ளன.  கிரகங்களை வேலை செய்யவிடாமல் தடுப்பது எது?


 கிரக வக்ரத்தின்போது கிரகம் வேலை செய்யாது. ஆனால் வக்ர நிவர்த்தியின்போது மொத்தமாக செய்ய வேண்டிய வேலையினை செய்து முடியும்.


கிரகத்தை செயல்படாமல் நிறுத்தவும் முடியும். சொல்வதென்றால் கிரக செயல்பாட்டை யோகிகளால் மட்டுமே மேற்கொள்ள முடியும்.


இந்த கிரஹங்கள் யாரால் கட்டுப்படுத்தப்படும்?                                                                        



யாரை வணங்கினால் இந்த கிரஹங்களின் பாதிப்பிலிருந்து நாம் தப்ப முடியும், யாரை நாம் வணங்குவது என்ற கேள்வி நமக்குள் எழும், இந்த நவ கோள்களையா அல்லது நவ கோள்களின் தேவதைகளையா அல்லது இதற்கு மேலாக அனைத்தும் மேன்மை பெற்ற சக்தியாக விளங்கும் அன்னை பராசக்தியினையா என்றால்,


நான் முன்பே கூறியிருக்கிறேன், ஒரு அரசனிற்கு கீழே பல அதிகாரிகள் வேலை செய்வார்கள்,அவர்களை கண்காணிக்கவும் உச்சபட்ச அதிகாரம் பெற்றவர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். 


அந்த வழியில் அன்னை பராசக்தியின் கீழ் நவகோள்களை கட்டுப்படுத்தும் ஆற்றலை ரிஷிகள் பெற்றிருக்கிறார்கள், அவர்களை நாம் வணங்குவதன் மு்லம் இந்த நவகோள்களை சாந்தப்படுத்த முடியும். 

அந்த ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய ரிஷிகளை வணங்குவதற்கு அஷ்டோத்திரங்கள் உள்ளன. அவை பின் தொடர்ந்து வரும் 

2 comments:

  1. Thanks for sharing your info. I really appreciate your efforts and I am waiting for your further write ups thank you once again.

    Also visit my blog post: tout les casino en ligne

    ReplyDelete
  2. It's going to be ending of mone day, however before end I am readring this enormous piece of writing to
    improve my knowledge.

    Feel free to surf to my blog post; sheepskin tote home

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment