சீடர்திரு.வீரராகவன்எழுப்பியகேள்வி
கேள்வி எண் 6-
தர்க்கம் -விதர்க்கம்-குதர்க்கம் -
பகுத்தறிவு என்பது யாது? சூத்திரம் இதுபற்றி என்ன கூறுகிறது?
பதில்-
மிகவும் நுட்பமான கேள்வியை கேட்டிருக்கிறீர்கள் .இதன் விளக்கம் பலருக்கும் பலனளிக்கும் .
1) தர்க்கம்
- தர்க்கம் என்பது குறிக்கோள் அற்ற வாதம்
2) விதர்க்கம்
-விதர்க்கம் என்பது விசேஷத் தர்க்கம் அல்லது சிறப்பு நிலை வாதம்
3) குதர்க்கம்
- சூரியனை பார்க்கச்சொன்னால் சூரியப்புள்ளிகளை பார்க்கவா என்பார்கள் இதுவே குதர்க்கம்
4) பகுத்தறிவு - பொதுவாக பகுத்தறிவு கொள்கை ஒரு புத்தி விசேக்ஷ தன்மையே தவிர, அஃது ஒருதேவையற்ற கொள்கையே.உலகில்
உள்ள யாவற்றையும் அறிந்து கொண்ட பின்
இறுதியாக அறிந்து கொள்ள வேண்டியதை சரியாக
அறிந்து கொள்வதே
பகுத்தறிவதாகும்.அவ்வறிவு ஆழமான சுய சிந்தனை, நான் என்பதை பற்றியது ,முடிவான சிந்தனை சுத்த ஜீவன் பற்றிய உணர்வில் அமிழ்ந்த
சமாதிநிலையே பகுத்தறிவாகும்.
சமாதி பாதத்தில் 50,51 சூத்திரத்தில் தர்க்க
,விதர்க்க குதர்க்க ,பகுத்தறிவு
மற்றும் பகுத்தல்,தொகுத்தல், சம்ப்ரக்ஞாத
சமாதி, அசம்ப்ரக்ஞாத சமாதி போன்ற பல்வேறு நிலைகள் பற்றி பதஞ்சலி மஹரிஷி தெளிவுபடுத்தியிருக்கிறார்
.
புதிய வருகையாளர் எழுப்பிய கேள்வி
கேள்வி எண் 7 –
ஸ்ரீ
பதஞ்சலியின் யோக சூத்திரத்தை எவ்வளவு கால அளவில் படிக்கலாம். அல்லது கற்று
முடிக்கலாம் ?
பதில் - ஸ்ரீ பதஞ்சலியின் யோக சூத்திரத்தை
குறைந்த கால திட்டத்தில் போதிப்பதும், கற்றுக்கொள்வதும் ஒருபோதும் முடியாது.
விடாப்பிடியாக முயற்சி செய்து கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் மட்டுமே இதன் பலனை அடைய முடியும். இதற்கு தொடர் பயிற்சி, வைராக்கியம் என்ற இரண்டு முக்கிய
இயல்புகள் பயில்பவர்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.
மேலும் யோகக்
கல்வியை நிறைவு செய்தல் என்பதோ , கால வரைமுறை நிர்ணயித்தல் என்பதோ இயலாத ஒன்றாகும்
.
“உடலுக்கோர்
நல்ல மருந்து உழைப்பு
மனதுக்கோர் மருந்து நல்ல நினைப்பு”
உடலை இவ்வுலகத்தின் சேவையிலும்
இதயத்தினை இறைவனிடமும், அறிவினை பதஞ்சலியின்யோக சூத்திரத்திலும்
வைப்பதே சிறந்த உத்தியாகும்.
சிந்தனை என்பது ஒரு சக்தி (திறன்),
ஆனால் எண்ணங்கள் அப்படிப்பட்டதல்ல.
எண்ணங்களை பிறரிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
சிந்தனையோ ஒருபோதும் பிறரிடம்
இருந்து பெற முடியாததாகும். காரணமுள்ள சரியான சிந்தனையினை நீங்களாகவே கற்றுக்கொள்ள
வேண்டியதிருக்கிறது.
அய்யா, எண்ணமும், யோசனையும் ஒன்றா ? சிந்தித்தலும், யோசித்தலும் ஒன்றா ? விளக்குங்கள்
ReplyDelete