(வாசி யோகத் தொடர்ச்சி.......................... )
பிப்பிலாத
முனிவர் கூறுகிறார்.
பிராணனைப்பற்றி
முன்னதாக அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது.
மனித
வர்க்கம் எப்படி உயிர் பெறுகிறது.?
எதனால் அவர்கள் உயிர் வாழ்கிறார்கள்?
என்று அவரிடம் சீடர்கள் பல கேள்விகளை கேட்கிறார்கள்.
மூன்றாவதாக
கௌசல்யர் எனும் சீடர் ஒரு கேள்வியினை
கேட்கிறார்.
பிராணன்
என்பது என்ன?
அதற்கு ஏன் முக்கியத்துவம்
அளிக்கிறோம்?
அவற்றினைத் தவிர மற்ற வாயுக்கள் எல்லாம்
முக்கியத்துவம் இல்லையா?
உடனே
பிப்பிலாதர் கூறுகிறார்.
அரசன்
தன்னுடைய பணியினைத் தானே ஒவ்வொரு இடத்திலும் போய் சொல்வதில்லை. தனக்குக் கீழே
அதிகாரிகளை நியமிக்கிறான். அந்த அதிகாரிகளை இவன் மேற்பார்வை பார்க்கிறான்.
ஒவ்வொருவரும் அவரவர் களுடைய வேலையினைச் சரியாக செய்கிறார்களா என்று மேற்பார்வை
பார்ப்பது அரசன். அது போல பிராணன் என்பது இதர வாயுக்களையெல்லாம் பணி செய்ய
வைக்கிறது. பிராணன் என்பது தலையாய வாயுவாக இருக்கிறது.
மற்ற வாயுக்களை இயக்கச்செய்கிறது.
பிரச்னோ
உபநிஷத்திலே பிப்பிலாத முனிவர் சொல்கின்ற விஷயத்தை நாம் இங்கே எடுத்துக்
கொள்கிறோம்.
ஆக பிராணன்கண்ணிலும். காதிலும். மூக்கிலும் தானே நிலைபெறுகிறது. தானே நிலைபெறுகிறது
என்றால் அதுவாக சென்று எங்கேங்கே
இருக்கிறது என்றால் கண். காது. மூக்கு. வாய் இவற்றில் புகுந்து கொள்கிறது. தானாகவே
நிலைபெறுகிறது.
அப்போது
கண்ணில் பிராணன் இருக்கிறதா? மூக்கில்
பிராணன் இருக்கிறதா? வாயில் பிராணன் இருக்கிறதா? வேறு எங்கும் இல்லையா என்று கேட்டால் அதற்கும் பின்னால் வருவதில் பதில ;சொல்கிறார். அது எப்படி உள்ளே நுழைகிறது என்பதற்காகச் சொல்கிறார். அபானன்
என்பவன் பாயுவிலும் உபஸ்தத்திலும் என்று சொல்கிறார். அங்கே இரண்டு இடங்களிலும் அது
நிலைபெறுகிறது. எப்படி?
பாயு
என்றால் என்ன?
மலத்துவாரத்திற்கு
பெயர் பாயு. உபஸ்தம் என்று சொன்னால்
கருத்துவாரம். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் அபானன்
எங்கே நிலைபெறுகிறது என்று. ஏற்கனவே உங்களுக்கு நான் அதை சொல்லியிருக்கிறேன்.
இந்த வாயுக்களுடைய ஏகாதிபத்தியம் மற்றும் பரவல் மற்றும் அவை
எங்கெல்லாம் செயல்படுகிறது என்பதைச் சொல்வதற்காகத்தான் இதை நான் உங்களுக்குச்
சொன்னேன்.
அடுத்தபடியாக
சமானன் என்கிற காற்று. இது நாபிப் பிரதேசத்தில் உலவுகிறது. நாபிப்பிரதேசம் என்றால்
அது சரியாக நாபிக்கு மட்டுமல்ல நாபியினைச் சுற்றிலும் உள்ள எல்லாத் தளங்களிலும்.
இதற்கு வயிறு என்று சொன்னால் வயிற்றிலே குடல். இந்தக் குடலிற்கு மேல் பகுதியில்
இரைப்பை. இந்த இரைப்பையினைச் சுற்றி பல சுரப்பிகள். பித்தநீர்.
கணைய நீர் என்று நிறைய உள்ளது. வயிற்றுப்பகுதி என்று சொன்னால் அது
மேல்புறம். நாபிப்பகுதி என்று சொன்னால் அது கீழ்ப்புறம்.
ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டை
ஜடவாக்னி என்று சொல்வார்கள். இப்போது விஞ்ஞானத்தில் இந்த ஆசிட்
கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆசிட் தேவையானவற்றை எரிக்கிறது. வயதுக்கு ஏற்றபடி இந்த
ஆசிட் சுரக்குமாறு அங்கே அதை இறைவன் சுரக்க வைத்திருக்கிறார்.
மனிதன்
சாப்பிடுகின்ற உணவிற்கு ஏற்ப. சாப்பிடுகின்ற நேரத்திலே அது
உற்பத்தியாக வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றில் மாறுதல் ஏற்பட்டாலும் அந்த ஆசிட்டே
இவன் வயிற்றைக் கோளாறு செய்து விடும். அதனால் வயிற்றுப்புண் உண்டாகிறது. அதைத்தான்
அல்சர் என்று சொல்கிறார்கள்.
ஆகவே ஜடவாக்னி என்று சொன்னால் ஹோமத்திலே இடுகின்ற
பொருட்களை போல . நம்முடைய இரைப்பையின் உள்ளே நாம் சாப்பிட்ட உணவினை இந்த சமானன்
என்பதானது இரைப்பையில் செரிக்கப்பட்ட குடலுறிஞ்சி களால் உறிஞ்சப்பட்டு குளுக்கோஸாக
மாறியுள்ள அந்தச் சக்தியினை உடம்பின் எல்லா அங்கங்களுக்கும் பரவச்செய்கிறது இந்த
சமானன்.
நக சிக பரியந்தம் என்று
சொல்வார்கள். உடம்பில் ஒரு இடத்தில் உருவாக்கப்பட்ட சக்தியினை நகம் என்ற உடம்பின்
கடைசிப் பகுதி முதல் சிக என்று சொல்லக்கூடிய முடி இருக்கும் பகுதிவரை பரவச்செய்து
செயல்பட வைக்கிறது இந்த சமானன். ஒரு முனிவர் அந்த காலத்தில் இவ்வளவு விஷயங்களைச்
சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது. வேதம் என்பது விளையாட்டா?
ஆகவே அந்த சமானனின்றும் 7 தீக்கொழுந்துகள் எழுகின்றன. அந்த ஏழில் முக்கிய தீக்கொழுந்து அந்த
ஜடவாக்னி. இப்போது நீங்கள் பிராணன். சமானன் என்பதை
இணைத்துப்பார்க்க வேண்டாம். இங்கே சமானன் என்பவன் ஏழு தீக்கொழுந்துகளை
பரப்புகின்றான்.
கண்கள் இரண்டிற்கும். காதுகள் இரண்டிற்கும். நாசிகள்
இரண்டிற்கும். வாயிற்கும் என ஆக ஏழு. ஏழு தீக்கொழுந்துகள் இந்த பகுதிக்கெல்லாம்
வருகின்றது. ஒலியாகவும். ஒளியாகவும். ருசியை உணர்வதாகவும். சப்தம் என்ற
த்வனியினை எழுப்புவதற்காகவும் அடுத்தகட்டப் பணியினைச்
செய்கிறது சமானன்.
அடுத்து வியானன். ஜீவாத்மா
இதயத்தில் உறைகின்றான். என்று பிப்பலாதர் சொல்கிறார். ஜீவன் என்பது நம்முடைய
உடலில் எல்லா இடத்திலும் இருப்பதாக நாம் சொல்வோம்.
அந்த ஜீவாத்மா குடி
கொண்டிருக்கிற இதயத்திலே 101 நாடிகள் இருக்கின்றன. இந்த
ஒவ்வொரு நாடியும் 100 கிளைப்பகுதிகளாகப் பிரிகின்றன. மொத்தம்
இக்கிளை நாடிகள் 72.000 என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். ஆக
72000 நாடிகள் அவற்றை கண்ணி நாடிகள் என்றும்; சொல்கிறோம். கண்ணி என்று சொன்னால் அவை ஒன்றோடன்று சேர்ந்து கோர்க்கப்பட்டு
அவை தொடர்ந்து வருவது. இவைகள் அனைத்திலும் வியானன் பயணிக்கிறது. 72000 நாடிகளிலும் இந்த வியானன் பரவி நிற்கிறது.
உதானன்
என்பவன் நாடிகளுக்குள்ளே பயணிக்கின்ற சக்தியாக இருக்கிறான். வியானன் நாடிகளோடு
பரவி நின்றாலும் உதானன் மட்டும் பயணிக்கிற சக்தியாக இயங்குகிறான்.
ஆகவே மேற்சொன்ன
இந்த நாடிகள் ஒவ்வொன்றிலும் தனது மேல்நோக்கிய பயணத்தை மேற்கொள்கின்ற.
இந்த உதானன் என்ற வாயு வெட்ட வெளியே ஒளியாக இருக்கிறான். அவன் நம்
உடம்பிலே இருக்கிற உதானனோடு சேர்ந்து மேல் நோக்கிய வாயுவாக பயணிக்கிறான்.
பயணம் தொடரும்...................
ஆசிகளுடன்
குருஜி டி.எஸ்.கிருஷ்ணன்
(குறிப்பு - வாசியோகம், பிராணாயாமம், சரயோகம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இவை அனைத்தும் ஒன்றே )
No comments:
Post a Comment