பிரபஞ்சத்தில்
நிலைபெறும் பிராணன்
சமஷ்டி வடிவான இந்த
உலகத்திலே சமஷ்டி என்ற பரந்த விரிந்த மற்றும் பல
விஷயங்கள் அடங்கியது. இந்த உலகம் பஞ்ச பூதங்கள் உட்பட பல விஷயங்களை தனக்குள்ளே
அடக்கி கொண்டுள்ளது. பின்பு வியஷ்டி என்று சொன்னால் மேலே இருக்கின்ற அவை அனைத்தும்
நாம் உடம்பிலும் உள்ளது.
ஆக உடலில் உள்ள
பிராணனிற்கு அது ஒரு சிறப்பினைத் தருகிறது. சிறப்பு என்று சொன்னால் மேலே
இருக்கின்ற அத்தனையிலும் இந்த உடலிற்கும் ஒரு உறவினைத்தருவது என்றால் இந்த உதானன்
மேலேயும் இருந்து கொண்டு நம் உடலில் உள்ள அதை
நோக்கி வந்து அண்டம் மற்றும் பிண்டம் என்ற
இரண்டிற்கும் ஓர் உறவினை ஏற்படுத்தித் தருகிறது இந்த உதானன்.
அதற்கடுத்தப்படியாக
சூரியன். சூரியனை நாம் அனைத்திற்கும் முதலாக வணங்குகிறோம், ஏனென்றால் அனைத்து கோள்களைவிட வலிமையானதாகவும்.
அவற்றிற்கு தலைமையானதாகவும். மேலும் ஒலி மற்றும் ஒளி மற்றும் உஷ்ணம்
என்ற அக்னி வடிவாகவும் இருக்கிறது. அது பிராணனாக நிலை கொண்டிருக்கிறது.
அதாவது சூரியன்
இல்லையென்றால் மற்ற கிரகங்கள் இயங்க முடியாது.
சூரியனே பிராணன்
வெளியிலுள்ள பிராணனாக சூரியன் இருக்கிறது.
இது கண்ணிலுள்ள பிராணனை இயக்குகிறது.
அடுத்தபடியாக
பிருத்வி என்று சொல்லக்கூடிய மண். பிருத்வி என்று
சொல்லக்கூடிய தேவதை சரீரத்தில் உள்ள அபானனை இயக்குகிறது. ஒவ்வொன்றும் எதை
இயக்குகிறது என்று பார்ப்போம. சூரியனுக்கும். பூமிக்கும் இடையே உள்ள இடைவெளிதான்
சமானன். அந்தச் சமானன் நம்முடைய உடம்பிலே சமானனை
இயக்குகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த வகுப்பில் பார்ப்போம்.
தொடரும்......................
வாழ்த்துக்களுடன்
No comments:
Post a Comment